Wednesday, October 27, 2010

நாடும், மக்களும் என்ன செய்வர்..

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாட்டைப் பற்றி சில எண்ணங்கள். இவர்கள் இப்படித்தான், அவர்கள் அப்படித்தான் என நாமாகவே ஒரு முடிவுக்கு வருகிறோம். அண்டை வீட்டுக்காரர்கள் முதல் அடுத்த நாட்டுக்காரன் வரை நமக்குள்ளாகவே ஒரு கற்பிதம்.




இரண்டு வருடங்களுக்கு முன்னர் தன்னந் தனியாக ஒரு வெளிநாட்டில் போய் நான் இறங்கியபொழுது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. இரண்டு பேருடன் நான் ஒரு வீட்டைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். கூட இருந்த ஒரு பிரெஞ்ச் நண்பனும், ஜெர்மன் தோழியும் சகலமும் சொல்லிக் கொடுத்தார்கள். அடுப்பு பற்ற வைப்பது முதல் வீட்டைப் பூட்டுவது வரை ஒவ்வொன்றையும் சொல்லிக் கொடுத்தார்கள். சரியாக சொல்லப் போனால் மொழியோ, நாடோ அங்கே பிரச்சனையாக இல்லை. சக மனிதர்கள் மேல் உள்ள அக்கறை தான், எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருக்கிறது.

ஒவ்வொரு நாட்டுக்கும் வித்தியாசமான பண்பாடுகள். இங்கே இருப்பதை அங்கேயும், அங்கே இருப்பதை இங்கேயும் தேடினால் எப்படிக் கிடைக்கும்?. நாடுகளின் அரசியல் தலைவர்கள் வேண்டுமானால் ஒரு சில நோக்கங்களோடு இருக்கலாம், ஆனால் நாட்டில் உள்ள மனிதர்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்ல.

கணியன் பூங்குன்றனாரின் பின்வரும் வரிகள் சொல்ல வருவதும் இதைத்தானோ?

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோடு அன்ன
சாதலும் புதுவதன்றே
வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்று இலமே
மின்னொடு வானந் தண்துளி தலையியானது
கல்பொருதிரங்கு மல்லற் பேர் யாற்று
நீர்வழிப் படூம் புணை போல் ஆருயிர்
முறைவழிப் படூம் என்பது
திறவோர் காட்சியிற் திறந்தனம் ஆகலின்
மாட்சியிற் பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

(பாடலில் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்)


ஒரு போட்டி நடக்கும்போது தன் நாடு வெற்றி பெற வேண்டும் என நினைப்பது இயற்கை. ஆனால், எதிர் அணி வெற்றி பெறவே கூடாது எனக் கோபம் கொள்ளுவது எதற்கு?.

சில பேர் செய்யும் தவறுகளுக்கு அந்த நாடும், மக்களும் என்ன செய்வர் ?.

குறிப்பு: பூமி புகைப்படம் இணையத்தில் இருந்து. நன்றி.

15 comments:

  1. இவர்கள் இப்படித்தான், அவர்கள் அப்படித்தான் என நாமாகவே ஒரு முடிவுக்கு வருகிறோம். அண்டை வீட்டுக்காரர்கள் முதல் அடுத்த நாட்டுக்காரன் வரை நமக்குள்ளாகவே ஒரு கற்பிதம்.


    ... rightly said! :-)

    ReplyDelete
  2. சகோதரா அனுபவங்கள் தானே வாழ்வின் படிக் கற்கள்..
    பூங்கன்றனார் பாட்டு நல்ல எடுத்துக்காட்டு வாழ்த்துக்கள்..
    தங்கள் தளத்தையும் என் ஓடையில் மூழ்கடித்துள்ளேன்...

    ReplyDelete
  3. //மொழியோ, நாடோ அங்கே பிரச்சனையாக இல்லை. சக மனிதர்கள் மேல் உள்ள அக்கறை தான், எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருக்கிறது.
    //

    இதை நானும் உணர்ந்தேன்...

    ReplyDelete
  4. //இங்கே இருப்பதை அங்கேயும், அங்கே இருப்பதை இங்கேயும் தேடினால் எப்படிக் கிடைக்கும்?. //

    தேடவும் கூடாது.. இல்லாததை தேடுவது தவறு.. சுரண்டியதைத் திரும்பக் கேட்பதில் என்ன தவறு..(அரசியல் வாதிகளைச் சொல்கிறேன்..)

    ReplyDelete
  5. //சக மனிதர்கள் மேல் உள்ள அக்கறை தான், எல்லாஇடங்களிலும் ஒரே மாதிரி இருக்கிறது.//
    மிகச் சரி நண்பரே!

    ReplyDelete
  6. உண்மைதான் இளங்கோ...நல்ல சிந்தனை..

    ReplyDelete
  7. சரியாக சொல்லப் போனால் மொழியோ, நாடோ அங்கே பிரச்சனையாக இல்லை..

    //

    உண்மை தான் நண்பரே.. எந்த ஒரு விசயத்திலும் தடையை இருப்பது மனிதனின் மனது தான்...

    ReplyDelete
  8. கரெக்டா சொல்லியிருக்கீங்க.. நாமே மனசுல எதையாவது நினைச்சுக் குழப்பிக்கறது.. நல்ல பதிவு..

    ReplyDelete
  9. //Chitra said...
    ... rightly said! :-) //
    நன்றிங்க சித்ரா அக்கா

    ReplyDelete
  10. //ம.தி.சுதா said...

    சகோதரா அனுபவங்கள் தானே வாழ்வின் படிக் கற்கள்..
    பூங்கன்றனார் பாட்டு நல்ல எடுத்துக்காட்டு வாழ்த்துக்கள்..
    தங்கள் தளத்தையும் என் ஓடையில் மூழ்கடித்துள்ளேன்...
    //

    உங்கள் ஓடையில் என் தளத்தை இணைத்ததற்கு நன்றிகள் நண்பரே.

    ReplyDelete
  11. //பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

    தேடவும் கூடாது.. இல்லாததை தேடுவது தவறு.. சுரண்டியதைத் திரும்பக் கேட்பதில் என்ன தவறு..(அரசியல் வாதிகளைச் சொல்கிறேன்..)
    //

    தவறே இல்லை பிரகாஷ், வருகைக்கு நன்றிங்க.

    ReplyDelete
  12. //Balaji saravana said...

    //சக மனிதர்கள் மேல் உள்ள அக்கறை தான், எல்லாஇடங்களிலும் ஒரே மாதிரி இருக்கிறது.//
    மிகச் சரி நண்பரே!
    //

    நன்றி நண்பரே.

    ReplyDelete
  13. //ஷஹி said...

    உண்மைதான் இளங்கோ...நல்ல சிந்தனை..
    //

    நன்றிங்க ஷஹி.

    ReplyDelete
  14. //வெறும்பய said...
    உண்மை தான் நண்பரே.. எந்த ஒரு விசயத்திலும் தடையை இருப்பது மனிதனின் மனது தான்...
    //

    தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றிங்க நண்பரே.

    ReplyDelete
  15. //பதிவுலகில் பாபு said...

    கரெக்டா சொல்லியிருக்கீங்க.. நாமே மனசுல எதையாவது நினைச்சுக் குழப்பிக்கறது.. நல்ல பதிவு..
    //

    நன்றிங்க பாபு.

    ReplyDelete