Friday, October 22, 2010

ஒரு நாளிதழின் முன்பக்கம்
















பெரும் விளம்பரங்கள்
அரசியலாளர்களின் அறிக்கைகள்
நடிகர்களின் விவாகரத்துச் செய்திகள்
காதற் கொலைகள்
போலிகளின் தரிசனங்கள் என
முன்பக்கம் நிரம்பிய ஒரு நாளிதழில்
ஒரு விவசாயியின் தற்கொலைச் செய்தி
அவனின் மரணக் குழி போலவும்
அவனின் வறுமை போலவும்
எங்கோ ஒரு மூலையில்
சிறு கட்டத்துக்குள்..


27 comments:

  1. அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. கட்டத்துக்கு என் கண்ணீர் துளி சமர்ப்பணம்...

    ReplyDelete
  3. ஒரு பத்திரிக்கையின் நடப்பது இது தான் இளங்கோ ரொம்ப நல்லா இருக்கு இந்த கவிதை

    ReplyDelete
  4. அவர் விளம்பரங்களை விரும்பாதவர்...

    ReplyDelete
  5. //புதிய மனிதா. said...

    nice lines...
    //
    Thanks.

    ReplyDelete
  6. //எஸ்.கே said...

    அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!
    //
    நன்றிங்க எஸ்.கே

    ReplyDelete
  7. //ஷஹி said... கட்டத்துக்கு என் கண்ணீர் துளி சமர்ப்பணம்...
    //

    நன்றிங்க ஷஹி.. உங்களின் கண்ணீர் துளிகளுக்கு..

    ReplyDelete
  8. //சௌந்தர் said...

    ஒரு பத்திரிக்கையின் நடப்பது இது தான் இளங்கோ ரொம்ப நல்லா இருக்கு இந்த கவிதை
    //

    நன்றிங்க சௌந்தர். அவர்களுக்கு எதைப் பற்றி போட்டால் வருமானம் வரும் என்பது தெரிந்திருக்கிறது. :(

    ReplyDelete
  9. //பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
    அவர் விளம்பரங்களை விரும்பாதவர்...
    //

    ஆமாங்க பிரகாஷ், அவர் விரும்பாதவர்தான்.

    ஆனால், தேவையே இல்லாத செய்திகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மற்றவைகளுக்கு இல்லை. நாமும் படிக்க விரும்புவது இல்லை.

    ReplyDelete
  10. வலிக்கிறது..என் சமூகத்திற்கான எழுத்துக்கள் இவை..வாழ்த்துக்கள் தோழர் ...நன்றாக உள்ளது...நிறைய எழுதுங்கள்...இது போல எழுததான் ஆள் இல்லை..காதல் கவிதைகள் நான் எழுதுவேன் ..இனி முயற்சிக்கிறேன் இது போல எழுத

    ReplyDelete
  11. ஃஃஃஃஃஒரு விவசாயியின் தற்கொலைச் செய்திஃஃஃஃ
    நெஞ்சை நெருடிவிட்டீர்கள்...
    ஏன் வாக்கப்பட்டை ஒன்றும் இணைக்கல...

    ReplyDelete
  12. இளங்கோ, நீங்கள் ஏன் மணற்கேணி கருத்தாய்வுப்போட்டியில் கலந்து கொள்ளக் கூடாது? please visit chudarvizhi.blogspot.com...

    ReplyDelete
  13. @சசிகுமார்
    நன்றிங்க சசிகுமார்.

    ========================================

    @Azhagan
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிங்க அழகன்.

    ========================================

    @ம.தி.சுதா
    நன்றி ம.தி.சுதா.
    வாக்குப்பட்டை, பதிவில் புகைப்படம் போட்டதில் மேலே போய்விட்டது. :(

    ========================================

    @ஷஹி
    நன்றிங்க ஷஹி. என்மேல் இவ்வளவு நம்பிக்கையா !. சின்ன வயதில் இருந்து போட்டின்னா கொஞ்சம் ஓரமாப் போய்டுவேன். :)

    ========================================

    ReplyDelete
  14. முதல் பக்கத்தில் வந்ததே பெரிது இளங்கோ... கவிதை நல்லா வந்திருக்கு... வாழ்த்துக்கள்.. ;-)

    ReplyDelete
  15. மிகவும் ஆழமான் வரிகள் இளங்கோ !

    ReplyDelete
  16. வருத்தப் பட வைக்கும் வரிகள்.. :-((

    ReplyDelete
  17. அருமையான கவிதைங்க.. நல்லாயிருக்கு..

    ReplyDelete
  18. ரொம்ப அருமையாக இருக்கு ... வாழ்த்துக்கள்.. !

    ReplyDelete
  19. //RVS said...
    முதல் பக்கத்தில் வந்ததே பெரிது இளங்கோ... கவிதை நல்லா வந்திருக்கு... வாழ்த்துக்கள்.. ;-) //

    நன்றி ஆர்விஎஸ் அண்ணா.

    ReplyDelete
  20. //Abhi said...

    மிகவும் ஆழமான் வரிகள் இளங்கோ !
    //

    நன்றிங்க Abhi.

    ReplyDelete
  21. //Ananthi said...

    வருத்தப் பட வைக்கும் வரிகள்.. :-((
    //

    ஆமாங்க, வருகைக்கு நன்றிங்க.

    ReplyDelete
  22. //பதிவுலகில் பாபு said...
    அருமையான கவிதைங்க.. நல்லாயிருக்கு..//

    வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க பாபு.

    ReplyDelete
  23. //ஈரோடு தங்கதுரை said...

    ரொம்ப அருமையாக இருக்கு ... வாழ்த்துக்கள்.. !
    //

    வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க ஈரோடு தங்கதுரை.

    ReplyDelete
  24. எல்லோருக்கும் கடைசியில் வெட்டும் குழி ஒரே சைசு தான்.. அதற்கு இடைப்பட்ட நாளில் தான் இத்தனை ஆட்டமும்...அரசியல், சினிமா, லஞ்சம், ஊழல், பணம் பதவி.. எக்செத்ரா......

    ReplyDelete
  25. நச்னு சொல்லி இருக்கீங்க!

    ReplyDelete