Friday, August 13, 2010

ஞாயிற்றுகிழமைச் சுதந்திரம்

ரயில் முன்பதிவு
குடும்பத்துடன் சுற்றுலா
என எதுவுமில்லாமல்
வருகிறது சுதந்திர நாள்
ஞாயிற்றுக் கிழமையால்...

போலி மருந்துகள்
போலிச் சாமியார்கள்
போலிச் சான்றிதழ்கள்
எனச் சுற்றிலும் போலிகள்
சுதந்திரமாய்...

கந்துவட்டி, லஞ்சம்
கல்விக் கட்டணம்
சிறுவர் கொடுமைகள்
விலைவாசி
எனவும்
நமக்கான முடிவுகளை
யாரோதான் எடுக்கிறார்கள்...

இதற்கெல்லாம் கவலை
வேண்டாம் நண்பரே..
அடுத்த வருடம்
சுதந்திர நாள்
திங்கட்கிழமையில் வருகிறது..

மூன்று நாட்கள்
மூழ்கித் திளைப்போம் அடுத்த
சுதந்திர நாளன்று...

8 comments:

  1. உண்மை ......!உண்மை ......!உண்மை ......!உண்மை ......!உண்மை ......!உண்மை ......!

    ReplyDelete
  2. மனதை தொட்டு விட்டது...சின்னப்பசங்க கூட ஞாயித்துகிழமையில் எந்தெந்த பண்டிகை வருது ந்னு காலண்டர்ல தேடுவாங்க..லீவு குறையுதேன்னு..புதுக்காலண்டர் வந்ததும் இதுதான் வேலை

    ReplyDelete
  3. // Gnana Prakash said...
    உண்மை ......!உண்மை ......!உண்மை ......!உண்மை ......!உண்மை ......!உண்மை ......!
    //
    நன்றி ஞானம் ..

    ReplyDelete
  4. //ஆர்.கே.சதீஷ்குமார் said...
    மனதை தொட்டு விட்டது...சின்னப்பசங்க கூட ஞாயித்துகிழமையில் எந்தெந்த பண்டிகை வருது ந்னு காலண்டர்ல தேடுவாங்க..லீவு குறையுதேன்னு..புதுக்காலண்டர் வந்ததும் இதுதான் வேலை//

    ஆர்.கே.சதீஷ்குமார் தங்களின் வருகைக்கு நன்றி. யாரைப் பார்த்தாலும், இந்த வருடம் ஞாயிறு அன்று சுதந்திர தினம் வருவதை ஒரு சலிப்போடு சொன்னார்கள். பள்ளி மாணவர்கள் கூட, ஒரு நாள் லீவ் போச்சு என்றுதான் சொல்லுகிறார்கள். அதனால் எழுதியதே இந்தக் கவிதை.

    ReplyDelete
  5. சமூகத்தில் தினம் தினம் பார்த்து அலுத்துப் போன விஷயங்கள்... உங்கள் சிந்தனை வித்தியாசமாக உள்ளது..

    ReplyDelete
  6. // பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said... சமூகத்தில் தினம் தினம் பார்த்து அலுத்துப் போன விஷயங்கள்... உங்கள் சிந்தனை வித்தியாசமாக உள்ளது..//

    ஆமாங்க. எந்த நோக்கத்துக்காக அந்த விடுமுறை விடுறாங்களோ அத எல்லாரும் மறந்துறாங்க. முக்கியமா இந்த தேச நாட்கள், ஒரு விடுமுறையாக முடிந்து விடுகிறது.

    ReplyDelete
  7. நமக்கான முடிவுகளை யாரோ எடுக்கிறார்கள் என்பது சரியல்ல என்கிறேன். நம்மால் பிரதி நிதித்துவப்பட்டவர்கள் சேர்ந்து எடுக்கிறார்கள் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.

    ReplyDelete
  8. @ தங்கவேல் அண்ணா.
    நானும் நமது பிரதிநிதிகளைத் தான் அண்ணா சொன்னேன். ஓட்டு வாங்க வரும்போது அவ்வளவு பணிவுடன் ஓட்டு கேட்கிறார்கள். ஜெயித்தவுடன் மக்களைத் திரும்பிப் பார்க்காத அவர்கள் 'யாரோ' தானே அண்ணா.

    ReplyDelete