கிளைவிட்டுப் பரவிய
அரச மரத்தை சுற்றிலும்
வெள்ளை நட்சத்திரங்களாய்
பறவைகளின் எச்சங்கள்
பூத்து கிடந்ததொரு நாளில்
ஊர்ப் பஞ்சாயத்து கூடி
வெட்டுவதென
முடிவு செய்தனர்
மரத்தின் வேர்
சுற்றியுள்ள வீடுகளில்
ஊடுருவுகின்றதாம்
மீண்டும் தழைத்து விடுமென
அடிமரத்தை தோண்டிய
குழியில்
உச்சியில் கட்டப்பட்டிருந்த
ஏதோவொரு பறவையின்
கூடும் முட்டைகளோடு புதைபட்டது
இடம் மாறிய பறவைகள்
இன்னொரு மரத்தடியில்
எச்சமிட்டு
கொண்டிருக்க கூடும் !
உங்கள் கவிதையின் ஆதங்கம் புரிகிறது.. உங்களுக்கு மிக மென்மையான உள்ளம்... வாழ்க வளமுடன்..
ReplyDeleteமரங்களை வெட்டி கொண்டே இருக்கிறார்கள். இது எங்க போய் முடியுமோ?
ReplyDeleteகுருவி, கிளி என விலங்குகள் அழிந்து கொண்டே வருகின்றன. யார் தடுப்பது ?
நன்றி
என்னமோ போங்க!..
ReplyDeleteநன்றிங்க ஷஹி..
ReplyDelete