Posts

Showing posts from 2012

விஷ்ணுபுரம் 2012 விருது விழாவில்..

Image
விஷ்ணுபுரம் விருது 2010 ல் எழுத்தாளர் ஆ.மாதவன் அவர்களுக்கும், 2011 ல் எழுத்தாளர் பூமணி அவர்களுக்கும் வழங்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டுக்கான விருது கவிஞர் தேவதேவன் அவர்களுக்கு, கடந்த சனிக்கிழமை(22/12/2012)  அன்று கோவையில் வழங்கப்பட்டது.  விழாவில் இசை ஞானி இளையராஜா கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார். அவரின் திரை இசையில் தோன்றிய பாடலான, 'மாசறு பொன்னே வருக..' பாடலுடன் விழா துவங்கியது. எங்கு இந்தப் பாட்டைக் கேட்டாலும், கொஞ்ச நாட்களுக்கு இந்தப் பாட்டை வாய் பாடிக் கொண்டே இருக்கும். அழகான இந்தப் பாட்டை, அழகாகப் பாடிய இரண்டு சிறுமிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். திரு. அரங்கசாமி அவர்கள் வரவேற்புரை வழங்க, எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கினார். இசை ஞானியை தான் முதன் முதலாக சந்தித்ததைப் பற்றியும், அதற்குப் பின்னர் அவரைப் பற்றியும் குறிப்பிட்டார் நாஞ்சில் நாடன். அவரின் உரையில், தேவதேவன் அவர்களின் இரண்டு கவிதைகளைப் பற்றிக் குறிப்பிட்டார். அதில் ஒன்று, கீழ்வரும் கவிதை; ஒரு கர்ப்பிணிப் பெண்ணை அவளின் தாயிடம் ஒப்படைப்பது போல உன்னை...

குறும்படம்: Rags to Pads

அதைப் பற்றி பேசுவதே தவறு என்றுதான் நம் சமூகம் சொல்லிக் கொண்டிருக்கிறது, அதுவும் இந்த சமூகத்துக்கு அது ஒரு கேலிப் பொருள். ஆண்கள் மட்டும் அல்ல, பெண்களும் கூடத்தான். "நான் அவ வீட்டுக்கு வரல.. அவ ரொம்ப சுத்தம் பாக்குறவ.." என்று அந்த நாட்களில் வெளியே போகாமல் இருக்க காரணம், பெரும்பாலும் இன்னொரு பெண்தான். "வீட்லயே இருக்க வேண்டியது தானே.." என்று திட்டுபவர்களும் அதிகம். "மூன்று நாளா.." என்று கேலி செய்பவர்கள் திருந்துவது எப்போது?. அந்த நாள் என்று சொன்னாலே, முகத்தைச் சுளித்துக் கொள்பவர்களை என்ன செய்யலாம்.? மாதவிடாய் நாட்களில் நகரத்துப் பெண்கள் கூட சமாளித்துக் கொள்ளலாம். அதையும், கடையில் வாங்கிய பின்னர் பேப்பர் சுற்றி எடுத்து வரவேண்டிய கொடுமை இன்னொருபுறம். இயல்பாக இருப்பதை, மாத சுழற்சியை ஏன் நாம் மறைக்க நினைக்கிறோம். ஆனால், கிராமங்களில் இன்னும் பழைய துணிகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம் அல்லது அதன் விலை அவர்களுக்கு அதிகமாக இருக்ககூடும். பழைய துணிகளால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் நிறைய. கோவையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரை...

600 ரூபாய்

உங்களுக்குத் தெரியாது.. பத்துக்கு பத்துக்கு ஒரு அறை என்றால் கூட, வாடகை ஆயிரத்துக்கு மேல்.. உங்களுக்குத் தெரியாது.. என்னதான் அடித்து பிடித்து செலவு செய்தாலும் மளிகைக்  கடையில் ஐநூறு  ரூபாய் பாக்கி நிற்கிறது எல்லா மாதத்திலும் உங்களுக்குத் தெரியாது.. விலை குறைவென்று பண்டிகைக்கு வாங்கிய துணிகள் சாயம் போயும், கிழிந்தும் போகின்றன உங்களுக்குத் தெரியாது.. காய்ச்சல் சளி என்றால் கூட சமாளித்து விடலாம் மேலதிக நோய் என்றால் மருத்துவர் கட்டணம் நூறுக்கு குறைவில்லை.. உங்களுக்குத் தெரியாது.. பேருந்து, ரயில் போன்றவைகளின்  கட்டணம் நம் நாட்டில் இலவசம் இல்லையே.. அது போலவே கல்வியும்.. இதையெல்லாம் விட நீங்கள் எப்போதெல்லாம் பெட்ரோல் விலை ஏத்துகிறீர்களோ அப்போதெல்லாம் காய்கறிகள் உட்பட எல்லாம் விலை ஏறுகின்றன உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா ஒரு சவத்தை அடக்கம் செய்யக் கூட குறைந்த பட்சம் இரண்டாயிரம் ரூபாய் தேவை.. இவையெல்லாம் உங்களுக்கு எதற்கு தெரிய வேண்டும்... மாடங்களில் இருந்து பாருங்கள்... ஊரே செழிப்பாக இருக்கும் அவை ஆறுகள் அல்ல சாக்கடைகள் என்று ஒரு நாளும் நீங்கள் அறியப்போவதில்லை.. சொன்னதே ...

விஷ்ணுபுரம் விருது விழா - 2012

Image
விஷ்ணுபுரம் விருது இந்த வருடம் கவிஞர் தேவதேவன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. விருது வழங்கும் விழா டிசம்பர் 22 அன்று கோவையில் நடைபெறுகிறது. விஷ்ணுபுரம் விருது 2012 விஷ்ணுபுரம் விருது 2012 அழைப்பிதழ் சென்ற வருடங்களில் எழுத்தாளர்கள் ஆ.மாதவன் அவர்களுக்கும், பூமணி அவர்களுக்கும் வழங்கப்பட்டது. அந்நிகழ்வுகளைப் பற்றிய எனது பதிவுகள். விஷ்ணுபுரம் இலக்கிய விழாவில் பூமணி - விருது விழா

எனது டைரியிலிருந்து - 6

Image
விற்ற காசு தோப்பும் துரவும் வீடும் கிணறும் விற்று வாங்கிய தொகையை எண்ணிக்  கொண்டிருக்கையில் ஐந்நூறு ரூபாய் நோட்டுகள் அனைத்திலும் அப்பாவின் முகம். - ந. கண்ணன் (ஆனந்த விகடன்) =================================================== தோல்வி கடைசி சவம் விழுந்ததும் கட்டாயம் அறிவிக்கப்படும் வெற்றிபெற்ற கடவுள் பெயர். - எஸ். ஏ. நாசர் (ஆனந்த விகடன்) =================================================== நடைபாதை ஓவியன் கோவர்த்தன மலையை குடையென ஆக்கி மக்களைக் காக்கும் கண்ணனை வயிற்றுப் பசியுடன் வரைந்து முடித்து நிமிர்ந்து பார்க்க வந்தது மழை. குடையுடன் கடவுள் அழிந்து கொண்டிருந்தார். - எம். மாரியப்பன் (ஆனந்த விகடன்) =================================================== அகத்தகத்தினிலே காதலர் தினம், அன்னையர் தினம் என வரிசையாய் எல்லா தினங்களின் போதும் நீ கொடுத்த முத்தங்கள், கடிதங்கள் வாழ்த்து அட்டைகள், பரிசுகள் என எல்லாவற்றையும் அடிக்கடி நினைத்துப் பார்த்து உயிர்த்திருக்கிறேன் பலமுறை. வழக்கமானதொரு மாலைப்பொழுதில் என் தலை கோதி, உச்சி முகர்ந்து '......ப் போல இருக்கிறாய்' என்று அனிச்சையாய் யாரோ ஒ...

கதவின்றி அமையாது

Image
மரங்களின் தந்தை திரு. அய்யாசாமி அவர்களைச் சந்தித்துவிட்டு திரும்பும்பொழுது, அவர் வீட்டுக்கு பக்கத்துக்கு வீட்டில் சாத்தி இருந்த கதவைப் பார்க்க நேர்ந்தது. அந்தக் கதவை என் செல்லில் படம் பிடித்துக் கொண்டேன். அந்த இரவு அந்தக் கதவைப் பற்றிய நினைவுகள் வந்த வண்ணம் இருந்தன. எங்கள் கிராமத்து வீட்டிலும் அதே போல் ஒரு கதவு வீட்டுக்குள் இருக்கிறது. மூன்று படிகள் வைத்து, சின்ன சின்ன பூக்கள் போட்ட கதவாக இருக்கும். ஒவ்வொரு படியிலும் ஏறி கதவைத் தள்ளி விட்டு விளையாடுவோம். கதவுக்கு மேலே ஒரு அட்டாரி இருந்தது. அட்டாரியில் எதாவது எடுக்க வேண்டும் என்றால் கதவு மேல் ஏறித்தான் எடுக்க வேண்டும். சாமி படங்கள், நடிகர்கள் படங்கள், இயற்கைப் படங்கள் என கதவுகளில் ஒட்டிக் கொண்டே இருப்பேன். புதிய படங்கள் கிடைத்தால், பழைய படங்களை கிழித்து விட்டு புதியதை ஒட்டி விடுவேன். கி.ரா. வின் 'கதவு' சிறுகதையில் ஒரு கதவுக்காக அழும் சிறுவர்களைப் பற்றி சொல்லியிருப்பார். தீர்வை கட்டாமல் இருந்ததற்காக கதவைத் தலையாரி பெயர்த்து கொண்டு செல்லுகின்றான். கொஞ்ச நாள்கள் கழித்து, அந்த கதவு வைத்திருந்த இடத்தை கண்டுபிடிக்கிறார்கள்....

தோட்டத்தில்: மெழுகு பீர்க்கங்காய் (Sponge Gourd)

Image
ஆறு மாதத்துக்கு முன்னால், ஊத்துக்குளி அருகே ஒரு சிறு கிராமத்தின் வழியாகச் சென்ற போது " இங்க பாரு.. மெழுகு பீர்க்கங்காய்".. என்று அப்பாவும், அக்காவும் கத்தினார்கள். ஒரு வீட்டின் வேலி முழுவதும் கொடி படர்ந்து காய்கள் நிறையக் காய்த்திருந்தன. வண்டியை நிறுத்தி, அவர்களிடம் கேட்டு காய்களை வாங்கிக் கொண்டோம். அவர்களிடம் விதை இருக்கிறதா எனக் கேட்க, அவர்களும் கொஞ்சம் விதையை சந்தோசமாக கொடுத்தார்கள்.  "இப்பதான் நான் மொத மொதல்ல இந்த பீர்க்கையைப் பார்க்கிறேன்" என்று சொன்னதும், அக்கா "நீ சின்னப் பையனா இருந்தப்போ.. நம்ம வீட்டு வேப்ப மரத்துல நெறையப் பிடிச்சுதே.. ஞாபகம் இல்லையா.." என்று கேட்க... எனக்கு சுத்தமாக நினைவுக்கு வரவில்லை. வீட்டுக்கு வந்ததும், மூன்று நான்கு விதைகளை மண்ணில் போட.. முளைத்து வந்ததில் ஒரே ஒரு செடி மட்டும் நன்றாக வளர்ந்தது. ஒரு கயிற்றில் கட்டி மொட்டை மாடிக்கு இழுத்து விட்டு,  ஒரு சிறிய பந்தல் போல செய்து அதன் மேல் படர விட நன்றாக காய்கள் பிடிக்க ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்த மருதாணிச் செடியின் மேல் நன்றாக படர்ந்து கீழேயும் காய்...

எனது புகைப்படங்கள்..

Image
அவினாசி தேர்த் திருவிழாவில்...  தீபத் திருநாளன்று.. ஊர்ப் பக்கம் மயில் மேய்ந்து கொண்டிருக்க, அதைப் படம் பிடிக்க..  உற்றுப் பார்த்தால் மட்டும் மயில் தெரிகிறது.. கோவில் கோபுரம் - அவினாசி அருகில்... மக்காச்சோளப் பூ!! சோம்புச் செடி - நண்பனின் வீட்டில்...  நீல வானம்...   ஏற்காட்டில்... 

புத்தர்

Image
எங்கேனும் அழுகுரல் கேட்கும்போதோ.. வன்முறை தனது கரங்களை விரிக்கும்போதோ.. போதிக்க நான் புத்தனைத் தேடுகிறேன்.. அகப்பட்ட புத்தனோ  'நானே புத்தனில்லை' எனச் சொல்லிவிட்டு தனியே நடந்து போகிறார்... புத்தரே புத்தனில்லை எனச் சொல்லிய பின்னர் யார்தான் புத்தன்? படம்: இணையத்தில் இருந்து - நன்றி

ஏமாற்று வியாபாரிகள்

Image
காய்கறி அங்காடியில் பேரம் முடிந்து விற்றவனும், வாங்கியவனும் விலை அதிகம் எனவும் குறைவு எனவும் சிறு முணுமுணுப்புடன் விலகினர்... இரண்டு சொத்தைக் காய்களைத் தள்ளிவிட்டதில் விற்றவனும் கிழிந்து போனதொரு பத்து ரூபாய்த் தாளை மடித்துக் கொடுத்ததில் வாங்கியவனும் உள்ளூர மகிழ்ந்த கணத்தில்... கடவுள் தன் கையிலிருந்த தராசையும் எடைக் கற்களையும் வீசியெறிந்து விட்டு நித்திரையைத் தொடர்ந்தார். படம்: இணையத்தில் இருந்து - நன்றி இது ஒரு மீள்பதிவு

சுதந்திர தினம் - விழுதுகள்

Image
எங்கள் விழுதுகள் அமைப்பு பற்றி ஏற்கனவே இந்தப் பதிவுகளில் எழுதியிருக்கிறேன்.  விழுதுகள் - நனவாகியதொரு கனவு ஒரு விருது சுதந்திர தினமான நேற்று, விழுதுகள் மையங்களில் சிறப்பாக கொண்டாடினோம். அனைத்து மையங்களிலும் விழா நடத்த முடியாது என்பதால், கள்ளிப்பாளையம், ஜெ.ஜெ நகர் மற்றும் எம். கவுண்டம்பாளையம் ஆகிய மையங்கள் இணைந்து விழாவை, எம். கவுண்டம்பாளையம் பள்ளி அரங்கில் நடத்தினோம். விளையாட்டு, நாடகம், நடனம், பேச்சு என மாணவர்கள் அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாக பங்கேற்றார்கள். சளைக்காமல் அவர்கள் பங்கேற்று பெற்ற மகிழ்ச்சி என்பதோடு அல்லாமல், எங்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டார்கள் எங்கள் மாணவர்கள். அங்கு எடுத்த புகைப்படங்கள்:

சினிமா:A Separation (எ செபரேசன்) படத்திலிருந்து...

Image
எ செபரேசன் படத்தின் கதையை போன பதிவில் எழுதி இருந்தேன். (A Separation) அப்படத்தை பற்றி எனது பார்வையில் தோன்றியவற்றை இப்பதிவில் எழுதி இருக்கிறேன்.  சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான, ஆஸ்கார் விருதைப் பெற்ற இப்படம் பற்றி எழுத நிறைய இருக்கிறது. . * கணவன் - மனைவி விவாகரத்துக்களில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். ஒரு வகையில் அவர்கள் வேறு வழியில்லாமல் விவாகரத்தை நாடினாலும், பெற்றோர் இருவரிடமும் பாசம் வைத்திருக்கும் குழந்தைகள் படும் துயரத்தை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. இந்தப் படத்தில், நடேர் மற்றும் சிமினின் மகளான டெர்மி அமைதியாக வந்து போகிறாள். பதினோரு வயதான அவள் இருவரிடமும் மாட்டிக் கொண்டு தவிக்கிறாள். * இரான் நாட்டை விட்டு மனைவி போக விரும்ப, கணவனோ பயமில்லாமல் இங்கேயே வாழ வேண்டும் என்று சொல்கிறான். * தள்ளாத வயதில் அல்சீமர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தன் தந்தையை பாசத்துடன் கவனித்துக் கொள்கிறான் நடேர். அவருக்கு சவரம் செய்து, கழிவறைக்கு அழைத்துச் சென்று, குளிப்பாட்டி என அவருக்காக அவன் செய்யும் பணிவிடைகளும், அவரை விட்டுப் பிரிய மனமில்...

சினிமா: A Separation

Image
விவாகரத்துப் பெற விண்ணப்பம் செய்திருக்கிறார்கள் ஒரு தம்பதியினர். அவர்கள் வாழ்வது ஈரான் நாட்டில். பதினோரு வயதில் பள்ளி செல்லும் மகள். கணவன் - நடேரின் தந்தை அல்சீமர் என்னும் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்.  சுய நினைவில்லாத அவரால் எந்த வேலையும் செய்ய முடியாது. அது போலவே எதையும் புரிந்து கொள்ளவும் முடியாது. மனைவி - சிமின், வெளிநாடு செல்ல வேண்டும் என்று கேட்க, நடேர் தன் வயதான தந்தையை விட்டு வர முடியாது என்று சொல்கிறான். எனவே, சிமின் விவாகரத்து வேண்டி மனுச் செய்கிறாள். நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. சிமின், தனது பொருட்களுடன் தன் தாய் வீட்டுக்குச் செல்கிறாள். மகள் - டெர்மி, தன் தாயுடன் செல்ல மறுத்து தன் தந்தையுடனே தங்கி விடுகிறாள். நடேர் வேலைக்குப் போன பின்னர் தன் தந்தையைக் கவனித்துக் கொள்ள ஒரு பணிப்பெண்ணை வேலைக்கு அமர்த்துகிறான். அப்பெண்ணின் பெயர் ரசியாக். டெர்மியின் ஆசிரியைக்கு பழக்கமானவள் அப்பெண். முதல் நாள் வேலைக்கு வருகிறாள் ரசியாக். அவளுடன் கூடவே அவளின் சிறு மகளும். அவள் தன் தாயின் வயிற்றில் தலையை வைத்து ஏதாவது சத்தம் வருகிறதா என க...

சிநேகம்

Image
எப்பொழுதும் தேங்காய்த் தொட்டி தேடி அலையும் கண்ணம்மாவுக்கு ஊர் வைத்த பெயர் பைத்தியக்காரி. பூ வரைந்த பாவாடையும் பாவாடை வரை நீண்ட மேல் துணியும் ஒரு கையில் அடுக்கி வைத்த தேங்காய்த் தொட்டிகளும் மேல் தொட்டி நிறைய கூழாங் கற்களுமாக வீதியில் நடந்து கொண்டிருப்பாள். தொட்டியும், கூழாங் கல்லும் எங்கே கிடந்தாலும் ஓடிப் போய் அள்ளிக் கொள்ளுவாள் யாராவது திட்டினால், கெட்ட வார்த்தைகளும் கல்லடியும் கிடைக்கும். மனிதர்கள் யாரும் தர முடியாத சிநேகத்தை தான் கண்டெடுக்கும் ஒவ்வொரு தொட்டியிலும், கல்லிலும் பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறாள் கண்ணம்மா.. படம்: இணையத்தில் இருந்து.. நன்றி. (மீள்பதிவு)