Wednesday, September 26, 2012

தோட்டத்தில்: மெழுகு பீர்க்கங்காய் (Sponge Gourd)


ஆறு மாதத்துக்கு முன்னால், ஊத்துக்குளி அருகே ஒரு சிறு கிராமத்தின் வழியாகச் சென்ற போது " இங்க பாரு.. மெழுகு பீர்க்கங்காய்".. என்று அப்பாவும், அக்காவும் கத்தினார்கள். ஒரு வீட்டின் வேலி முழுவதும் கொடி படர்ந்து காய்கள் நிறையக் காய்த்திருந்தன. வண்டியை நிறுத்தி, அவர்களிடம் கேட்டு காய்களை வாங்கிக் கொண்டோம். அவர்களிடம் விதை இருக்கிறதா எனக் கேட்க, அவர்களும் கொஞ்சம் விதையை சந்தோசமாக கொடுத்தார்கள். 



"இப்பதான் நான் மொத மொதல்ல இந்த பீர்க்கையைப் பார்க்கிறேன்" என்று சொன்னதும், அக்கா "நீ சின்னப் பையனா இருந்தப்போ.. நம்ம வீட்டு வேப்ப மரத்துல நெறையப் பிடிச்சுதே.. ஞாபகம் இல்லையா.." என்று கேட்க... எனக்கு சுத்தமாக நினைவுக்கு வரவில்லை.

வீட்டுக்கு வந்ததும், மூன்று நான்கு விதைகளை மண்ணில் போட.. முளைத்து வந்ததில் ஒரே ஒரு செடி மட்டும் நன்றாக வளர்ந்தது. ஒரு கயிற்றில் கட்டி மொட்டை மாடிக்கு இழுத்து விட்டு,  ஒரு சிறிய பந்தல் போல செய்து அதன் மேல் படர விட நன்றாக காய்கள் பிடிக்க ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்த மருதாணிச் செடியின் மேல் நன்றாக படர்ந்து கீழேயும் காய்கள் பிடித்தது. 



இப்பொழுதெல்லாம் வாரத்துக்கு இரண்டு மூன்று தடவை பீர்க்கங்காய் சட்னி, பொரியல், கூட்டு தான் வீட்டில். மருந்தடிக்காத, நம் மண்ணில் விளைந்த காய் என்பதால் சுவை அதிகம். அது போலவே கொஞ்சம் முற்றினால் கசப்படிக்கிறது.

 


காயை முற்ற விட்டு, அதன் பின்னர், அதனை உடைத்தால்.. உள்ளே இருக்கும் நார் ஒரு பொம்மை போல அவ்வளவு அழகாக, மென்மையாக இருக்கிறது. சின்ன பையனாக இருந்த போது, இந்த நாரில் தேய்த்து குளித்தது நினைவுக்கு வந்தது. ஆங்கிலத்தில் Sponge Gourd என்று சொல்கிறார்கள். 









16 comments:

  1. வீட்டில் தோட்டம் வளர்த்து அதை பராமரிப்பது என்பது மனதிற்கு உற்சாகமளிக்கும் செயல் என்றால் மிகையில்லை!

    ReplyDelete
  2. அருமையா காய்ச்சிருக்கு பீர்க்கங்காய். இதில் பொரிச்ச குழம்பும் செய்யலாம். ருசியாயிருக்கும்.

    ReplyDelete
  3. நானும் இந்த விதைகளை தேடிக்கொண்டிருக்கிறேன்.வீட்டுத்தோட்டத்தில் போட..நல்ல பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  4. ஒரு சின்ன பூ பூத்தாலே மனம் அவ்வளவு சந்தோசப்படும்...

    படங்களும் பதிவும் பயனுள்ள பகிர்வு...

    நன்றி...

    ReplyDelete
  5. நாம் நட்ட செடி பூ பூத்து காய் காய்தால் கிடைக்கும் சந்தோசத்திற்கு அளவில்லை.. சின்னப்பிள்ளைங்களுக்கு இதுமாதிரியான செய்கைகளை கத்துக் குடுக்கோணும்...

    ReplyDelete
  6. நம் தோட்டத்தில் விளைந்தது எனும் போதே அதன் மகிழ்வே தனி . பசுமையை காண்பதே இனிமை

    ReplyDelete
  7. //வரலாற்று சுவடுகள் said...

    வீட்டில் தோட்டம் வளர்த்து அதை பராமரிப்பது என்பது மனதிற்கு உற்சாகமளிக்கும் செயல் என்றால் மிகையில்லை!
    //

    ஆமாம் நண்பரே.. செடிகள் தரும் மகிழ்ச்சி இணையற்றது..
    நன்றிகள்..

    ReplyDelete
  8. //
    அமைதிச்சாரல் said...

    அருமையா காய்ச்சிருக்கு பீர்க்கங்காய். இதில் பொரிச்ச குழம்பும் செய்யலாம். ருசியாயிருக்கும்.
    //

    நன்றிங்க, அப்படியே பொரிச்ச கொழம்பு எப்படி செய்வது என்று சொன்னால் நன்றாக இருக்கும்... :)

    ReplyDelete
  9. //Chilled Beers said...

    நானும் இந்த விதைகளை தேடிக்கொண்டிருக்கிறேன்.வீட்டுத்தோட்டத்தில் போட..நல்ல பயனுள்ள பதிவு.
    //

    ஆமாங்க, பெரிதாக எந்த கவனிப்பும் செய்யவில்லை.. தண்ணீர் ஊற்றுவதைத் தவிர..

    நன்றிகள் நண்பரே

    ReplyDelete
  10. //திண்டுக்கல் தனபாலன் said...

    ஒரு சின்ன பூ பூத்தாலே மனம் அவ்வளவு சந்தோசப்படும்...

    படங்களும் பதிவும் பயனுள்ள பகிர்வு...

    நன்றி...
    //

    நன்றிகள் நண்பரே..

    ReplyDelete
  11. //கலாகுமரன் said...

    நாம் நட்ட செடி பூ பூத்து காய் காய்தால் கிடைக்கும் சந்தோசத்திற்கு அளவில்லை.. சின்னப்பிள்ளைங்களுக்கு இதுமாதிரியான செய்கைகளை கத்துக் குடுக்கோணும்...
    //
    நன்றிங்க....

    ReplyDelete
  12. //ezhil said...

    நம் தோட்டத்தில் விளைந்தது எனும் போதே அதன் மகிழ்வே தனி . பசுமையை காண்பதே இனிமை
    //
    நன்றிங்க....

    ReplyDelete
  13. இனிய நற்வணக்கங்களுடன் சிவஹரி,

    தங்களின் வலைப்பூவினை நான் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திடும் பாக்கியம் கிட்டியிருக்கின்றது என்பதை அக மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

    மேலும் அறிய :http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_7942.html

    ReplyDelete
  14. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_7942.html) சென்று பார்க்கவும்...

    நன்றி...

    ReplyDelete
  15. @சிவஹரி
    என்னை அறிமுகம் செய்த தங்களுக்கு எனதன்பு நன்றிகள்.

    ReplyDelete
  16. @திண்டுக்கல் தனபாலன்
    நன்றிகள் நண்பரே..

    ReplyDelete