Saturday, May 19, 2012

அவசியம் தேவை - டெர்ம் இன்சூரன்ஸ்(Term Insurance)

பெரும்பாலும் நாம் எடுக்கும் பாலிசிகள் மற்றவர்கள் சொல்லி எடுத்ததாகவே இருக்கும். அதிலும், நமது நண்பர்களோ, உறவினர்களோ இன்சூரன்ஸ் முகவர்களாக இருந்தால் சொல்லவே வேண்டாம். அவர்கள் சொன்னதுக்காகவே பாலிசி எடுத்து விடுவோம். பாலிசியில் நிறைய வகைகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கே நாம் பார்க்கப் போவதில்லை. டெர்ம் இன்சூரன்ஸ் பற்றி மட்டும் பார்ப்போம்.

இன்சூரன்ஸ் என்பது முதலீடு அல்ல என்பதை முதலில் நினைவு கொள்ளுங்கள்.


நம் ஆட்கள் முதலில் கேட்கும் கேள்வி, "இத்தனை ரூபாய் நான் பிரீமியம் கட்டினால் எனக்கு இத்தனை வருடங்கள் கழித்து எவ்வளவு கிடைக்கும்" என்பது. நானும் முதலில் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதாவது பணம் திரும்ப வரும் நோக்கில், இரண்டு மூன்று பாலிசிகளும் எடுத்திருக்கிறேன்.

இந்த வகையான பாலிசிகளில் பணம் கடைசியில் திரும்ப வரும். ஆனால் இழப்பீடு(Coverage) மிகவும் குறைவாக இருக்கும். எடுத்துக்காட்டாக, ஐம்பது ஆயிரம் பிரீமியம் என்றால் ஐந்து லட்சத்துக்குள் தான் இழப்பீடு இருக்கும். பாலிசி காலத்தில் உங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் இந்த இழப்பீடு(ஐந்து லட்சம்) கிடைக்கும். இல்லையென்றால் பாலிசி முதிர்வு காலத்தில் பாலிசிப் பணம் வரும்.

டெர்ம் இன்சூரன்ஸ் என்பது, பாலிசி முதிர்வுக் காலத்தில் பணம் திரும்பி வராது, ஆனால் இழப்பீடு அதிகமாக இருக்கும். ஐம்பது லட்சம் ரூபாய்க்கு பிரீமியம் இருபது ஆயிரத்துக்குள் தான் இருக்கும். இன்சூரன்ஸ் கம்பெனி, உங்கள் வயசு மற்றும் வருமானத்தைப் பொறுத்து இது கொஞ்சம் மாறும். 

அதிகப் பணம் செலுத்தி குறைவான இழப்பீடு பெறுவதை விட, குறைவான பணம் செலுத்தி அதிக இழப்பீடு பெறலாமே.

உங்களின் ஆண்டு வருமானத்தைப் போல பத்து மடங்குக்கு மேல் டெர்ம் இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்வது அவசியம். உங்களைச் சார்ந்திருப்பவர்களுக்கு, உங்களின் இழப்பு பெரிதுதான் என்றாலும், அவர்களை கொஞ்ச காலத்திற்கு கவலை கொள்ளாமல் இருக்க இந்தப் பத்து மடங்கு பணம் உதவும். நீங்கள் வீட்டுக் கடன் மற்றும் வேறு வகையில் லோன் வாங்கி இருந்தால், அதற்கும் சேர்த்து டெர்ம் பாலிசி எடுத்துக்கொள்வது அவசியம்.

எனக்குப் பணம் திரும்ப வர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு; உங்களால் வருடம் ஐம்பது ஆயிரம் பிரீமியம் கட்ட முடியும் என்றால், இருபது ஆயிரத்துக்கு டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து விட்டு, மீதி இருக்கும் முப்பது ஆயிரத்தை நீங்கள் வேறு எதிலாவது முதலீடு செய்ய முடியுமே.

ஒரு டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துவிட்டு, இன்னொரு  இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது அவசியம் - முக்கியமாக மெடிகிளைம் பாலிசி எடுக்க வேண்டும். எனவே, வாழ்நாளுக்கும் உங்களுக்கு ஒரு டெர்ம் பாலிசி மற்றும் ஒரு மெடிகிளைம் பாலிசி போதும்.

இந்த இரண்டு பாலிசிகளையும் எடுத்த பின்னர், வேண்டுமெனில் மற்ற பாலிசிகளில் முதலீடு செய்யலாம்.

குறிப்பு:
நான் இன்சூரன்ஸ் முகவர் இல்லை. இன்சூரன்ஸ் பற்றி எதுவும் தெரியாமல் இருக்கும் நண்பர்களுக்காக, எனக்குத் தோன்றியதை இங்கே பகிர்ந்துள்ளேன். நாணயம் விகடனைத் தொடர்ந்து படிப்பதால், இன்சூரன்ஸ் பற்றிய சந்தேகங்கள் இப்பொழுது இல்லை. நன்றி - நாணயம் விகடன்.

படங்கள்: இணையத்திலிருந்து - நன்றி. 


11 comments:

  1. பயனுள்ள பதிவு
    நான் முதலில் இது தெரியாமல்
    பாலிசி எடுத்து அதிகம் இழந்துள்ளேன்
    இன்சூரன்ஸ் என்றாலே தேவையெனில்
    டெர்ம் இன்சூரன்ஸ் மட்டுமெடுப்பதே புத்திசாலித்தனம்
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. ஆனந்த விகடன் இல் வெளி வந்தமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. @Ramani
    பெரும்பாலானோர் இன்சூரன்ஸ் பற்றிய தெளிவில்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தப் பதிவு உதவினால் எனக்கு மகிழ்ச்சியே.
    நன்றிங்க..

    ReplyDelete
  4. @கோவை நேரம்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  5. நானும் ஒரு இன்சுரன்சில் பணம் கட்டிக் கொண்டே இருக்கிறேன். அனால் பயனுள்ள இன்சூரன்ஸ் தான். ஆனால் கிளைம் செய்யும் விஷயங்களைத் தெளிவாகப் புரியும்படி விளக்குவதில்லை. அது தெரியாமல் இருப்பது ஆபத்தானது.

    ReplyDelete
  6. @சாமக்கோடங்கி
    நிறைய விஷயங்களை நம்மிடம் சொல்வதில்லை. குறிப்பாக, ஒரு பாலிசி எடுத்து விட்டு, நமக்கு அந்த பாலிசி வேண்டாம் என்றால்.. பதினைந்து நாட்களுக்குள் விண்ணபித்தால் பாலிசி ரத்து செய்யப்பட்டு பணம் திரும்பக் கிடைக்கும்.
    நன்றிங்க

    ReplyDelete
  7. HOW CAN I TAKE TEARM INSURANCE

    ReplyDelete
  8. HOW CAN TAKE TEARM INSURANCE PLEASE SEND ME EMAIL FOR THE DETAILS

    ReplyDelete
  9. உங்களுக்குத் தெரிந்த இன்சூரன்ஸ் முகவரை அணுகுங்கள். நீங்கள் 'டெர்ம் இன்சூரன்ஸ்' எடுக்க வேண்டும் என்று சொன்னால், உங்கள் வருமானத்தை ஒப்பிட்டு உதவி செய்வார்கள்.

    இந்த இன்சூரன்ஸை பொறுத்தவரை உங்கள் ஆண்டு வருமானத்துடன் ஒப்பிடும் போது, பத்து மடங்கு போல பார்த்துக் கொள்வது நன்று.

    ReplyDelete
  10. பொதுவாக அதிக பிரிமியம் கொண்ட பாலிசியை தான் தெரிந்து எடுப்பார்கள் .புதிய தகவல் !

    ReplyDelete