Thursday, May 24, 2012

பாலாஜியின் இன்னுமொரு முயற்சி

மாணவன் பாலாஜியின் அறிவியல் ஆர்வத்தையும், அவனின் முயற்சியால் கண்டுபிடித்த சில கருவிகளைப் பற்றியும் 'ஓர் இளம் விஞ்ஞானி' என்கிற தலைப்பில் எழுதி இருந்தேன். ஆனந்த விகடனின் என் விகடனில் வெளியான வலையோசையில் பாலாஜியைப் பற்றிய இந்தப் பதிவும் இடம் பிடித்திருந்தது.

ஆனந்த விகடனில் வெளியான செய்தியை பாலாஜியுடன் பகிர்ந்து கொண்ட பொழுது, இந்த வாரத்தில் சோலார் உதவியுடன் இயங்கும் கார் ஒன்றை இப்பொழுது செய்திருப்பதாகவும், அவசியம் அதைப் பார்க்க வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தான். எனவே, நாங்கள் போன ஞாயிறு அன்று பாலாஜியின் வீட்டுக்குச் சென்றோம்.


சின்ன கார் பொம்மையில் ஏற்கனவே இருந்த பேட்டரியைக் கழட்டிவிட்டு, சோலார் பேனல் பொருத்தி, சூரிய ஒளியுடன் இயங்குமாறு மாற்றியுள்ளான் பாலாஜி. அவன் கையில் இருந்த ரிமோட்டில் கார் அங்குமிங்கும் அழகாகத் திரும்பியது. சின்ன குழந்தைகள் உட்காரும் கார் என்பதால் குழந்தைகள் போட்டி போட்டுக் கொண்டு காரை ஒட்டினர்.

மின்சாரத் தட்டுப்பாடு நிலவி வரும் இப்பொழுது, மாற்று சக்திகளை பயன்படுத்தும் பாலாஜியின் திறமை வியக்க வைக்கிறது. பாலாஜியின் அனைத்து முயற்சிகளுக்கும் தோள் கொடுக்கும் பெற்றோர், சகோதரன் என அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.



வருங்காலத்தில் பாலாஜி போன்ற மாணவர்களே இந்த உலகை மாற்றப் போகிறவர்கள். 

பாலாஜிக்கு எங்களின் நல்வாழ்த்துக்கள்.

7 comments:

  1. இளம் விஞ்ஞானிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நல்ல முயற்சி...சிறுவனை வாழ்த்துவோம்

    ReplyDelete
  3. அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்ய முடியுமா...??

    ReplyDelete
  4. @விச்சு
    @வடுவூர் குமார்
    @கோவை நேரம்
    @சாமக்கோடங்கி

    நன்றி நண்பர்களே...

    ReplyDelete
  5. @சாமக்கோடங்கி
    கண்டிப்பாக பிரகாஷ், நீங்கள் எப்பொழுது வரமுடியும் என்று சொன்னால்.. பாலாஜியைப் பார்க்கச் செல்வோம்.

    ReplyDelete
  6. கோவை பதிவர்கள் குழுமத்தில் உள்ள உங்களோடு இணைவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.
    இணைவோம் இணையத்திலும்...இதயத்திலும்...
    இவண்
    உலகசினிமா ரசிகன்,
    கோவை

    ReplyDelete