காலை நேரம் பதினொரு மணி இருக்கும். கொஞ்சம் வெளி வேலையாக, வெளியே
சென்றுவிட்டு தகிக்கும் வெய்யிலில் வண்டியில் வந்து கொண்டிருந்தேன். ஒரு
சிறுபையன் வழியில் லிப்ட் கேட்டான். அவனுக்கு வயது பதினைந்துக்குள்
இருக்கும். சட்டையும், அங்கங்கே கருப்பு மையுடன் கூடிய கால்சட்டையும்
அணிந்திருந்தான்.
வண்டியை நிறுத்தி "எது வரைக்கும்?" என்றேன்.
"அம்பேத்கார் நகர் வரைக்கும்ணா" என்றான்.
"சரி ஏறு"
"போலாங் ணா" என்றான்.
"ஸ்கூலுக்குப் போறியா"
"இல்லீன்னா"
"அப்புறம் இப்போ எங்க போயிட்டு இருக்க"
"வீட்டுக்கு ணா... அம்மா எறந்திடுச்சு", எனக்கு பக்கென்றது.
"எப்படி, ஒடம்பு சரியில்லாம இருந்தாங்களா"
"நல்லாதான்ணா இருந்தாங்க... என்னாச்சுன்னு தெரியல"
"இப்போ எங்க போயிட்டு வர்றே"
"வேலைக்கு ணா"
"என்ன வேலை"
"லேத் ணா"
"நீ ஒரே பையனா"
"இல்லன்னா.. தங்கச்சி ஒண்ணு இருக்குது"
"வீட்ல வேற யாரு இருக்கா..."
"பாட்டி இருக்குது"
"அப்பாவோட அம்மாவா"
"அம்மாவோட அம்மா ணா"
"ம்ம்.. அப்பா"
"அப்பா இல்லண்ணா"
"இங்கதாண்ணா... நிறுத்துங்க.. எறங்கிக்கிறேன்" . வண்டியை விட்டு இறங்கியதும், "தேங்க்ஸ் ணா.." என்றான். "பார்த்துப் போப்பா" என்பதைக் கூட கேட்க நேரமில்லாமல், சாலையைக் கடந்து சிமென்ட் ரோட்டில் ஓடிக்கொண்டிருந்தான்.
அங்கே இருந்து நானும் நகர்ந்தேன். ஏனோ தகிக்கும் வெயிலை விட.. மனது கனமாக இருந்தது. அவனுக்காக கடவுளிடம் வேண்டுவதை விட, வேறொன்றையும் செல்ல இயலவில்லை.

ரொம்ப வருத்தமா தான் இருக்கு இளங்கோ ..
ReplyDeleteவலிமிகுந்த பதிவு
ReplyDeleteவறுமையோடு வலி சுமக்கும் சிறுவன் கனத்துப் போனது .
ReplyDelete@ஷஹி
ReplyDelete@"என் ராஜபாட்டை"- ராஜா
@சசிகலா
நன்றி நண்பர்களே
நாம் சந்தோஷத்தில் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் இன்னொருவர் வலியுடன் துடித்துக் கொண்டு தான் இருக்கிறார்.. இது தான் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கும் பூமியின் நியதி..
ReplyDelete@சாமக்கோடங்கி
ReplyDeleteஉண்மை பிரகாஷ்