Thursday, March 8, 2012

வழக்கம் போலவே..


இன்றைய கூட்டத்துக்கு வேண்டி
முந்தின நாள்
அழகு நிலையத்தில் போட்ட
ஒப்பனை அப்படியே இருந்தது..

பேச வேண்டியவைகள்
எல்லாவற்றையும் சுருக்கி
எழுதி வைத்தாகி விட்டது..

அனைத்து நிருபர்களுக்கும்
தகவல் சொல்லியாகி விட்டது..

நகரத்தின் முக்கிய
பெண்மணிகளுக்கு அழைப்பு
அனுப்பியாகி விட்டது..

சிற்றுண்டிக்கு கூட
ஏற்பாடுகள் நடந்து விட்டன..

இன்னும் ஒருமுறை
ஒப்பனை சரிபார்த்து விட்டு
மகளிர் தின கூட்டத்துக்கு
புறப்பட்டு விட்டார் அந்தப் பெண்...

 சாயம் போன சேலையில்
கொத்து வேலைக்கு
பூ வியாபாரத்துக்கு
வீட்டு  வேலைக்கு
எனப் புறப்படும் பெண்களுக்கு
வழக்கம் போல் 
இது மற்றுமொரு நாளே...  
  

8 comments:

  1. என்ன சொல்ல வரீங்க இளங்கோ ? இது என்னமோ சரியா படல எனக்கு ? ஏன் பெண்கள் மீது மட்டும் இப்படி ஒரு தாக்குதல் ? பெண்கள்தினம் என்று ஒன்று (அனுசரிக்கப்படுவதுன்னு சொல்றதா ? கொண்டாடப்படுறதுனு சொல்றதான்னே தெரியல) இருப்பதிலேயே ஒப்புதல் இல்லை எனக்கு ? நாங்க என்ன தனியான ஒரு ஸ்பீசிஸா ? இதுல ஒப்பனை இட்டுக்கொள்வது , கூட்டம் போடுவது குறித்தெல்லாம் இப்படி குற்றமா கவிதை வாசிக்க வேண்டிய தேவை என்ன ? எல்லாருக்கும் அது இன்னொமொரு நாள் தான் இளங்கோ ..

    ReplyDelete
  2. பெண்கள் விடுதலை வாங்க வேண்டியது ஆண்களிடம் இருந்து அல்ல, பெண்களிடம் இருந்தே... நம் தமிழ் நாட்டை ஆள்வது பெண் தான், ஆனால் அவர் கட்சியிலேயே பெண் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை இல்லை... இதை சொன்னால் நம்மை ஆதிக்கம் செலுத்துபவர் என்று சொல்வார்கள்

    ReplyDelete
  3. "பெண்கள் விடுதலை வாங்க வேண்டியது ஆண்களிடம் இருந்து அல்ல, பெண்களிடம் இருந்தே ".இது இன்னொரு மித் ( myth) . அவங்க கட்சியில பெண் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை இல்லனா அது அரசியல் அதாவது உட்கட்சி அரசியல் ..பை தி வே பெண்களுக்கான விடுதலை ஆண்கள் கிட்ட இருக்குன்னு சொல்றதே கடுமையான ஆணாதிக்க மனப்பான்மை !

    ReplyDelete
  4. @ஷஹி

    பெண்கள் தினம் என்பது, எல்லோருக்கும் பொதுவாக கொண்டாடப்படவேண்டும் என்பதே என் ஆசையும். ஆனால் அப்படியா நடக்கிறது, ஏதோ ஒரு சிலர் மட்டும் தாங்கள்தான் பெண்ணினத்தின் காவலர்கள் போல முன் நிற்கிறார்கள்.

    இதே நாளிலும் பெண்கள் மீதான வன்முறை அப்படியேதான் இருக்கிறது.

    //இதுல ஒப்பனை இட்டுக்கொள்வது , கூட்டம் போடுவது குறித்தெல்லாம்// .. நான் எல்லோரையும் இதில் சேர்க்கவில்லையே. மகளிர் தினம் என்றால் என்னவென்றே தெரியாமல், தனக்கான உரிமை என்ன எனத் தெரியாமல் இங்கே பெரும்பாலானோர் இருக்கும்போது, இந்த ஒரு நாள் பெண் வாழ்க என்று கூறிவிட்டு, நாளையிலிருந்து அவள் வழக்கம் போல இருக்க வேண்டும் அல்லவா?

    அப்புறம், இந்தப் பதிவை நான் "கவிதை" என்ற லேபிளில் குறிப்பிடப் படவில்லை. இது எனக்கு கவிதையாகவும் படவில்லை. :)

    ReplyDelete
  5. @suryajeeva

    நண்பர் கூறி இருப்பது போல்.. //
    அவங்க கட்சியில பெண் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை இல்லனா அது அரசியல் அதாவது உட்கட்சி அரசியல்..//

    இப்படிதான் எனக்கும் தோன்றுகிறது. எல்லாக் கட்சிகளும் ஒரே மாதிரி தான், நல்ல கட்சி கெட்ட கட்சி என்று பிரிக்க முடியாதது போலவே, பெண் உரிமை எல்லா இடத்திலும் சமமாகவே இருக்கிறது.

    ReplyDelete
  6. @ஷஹி

    //பெண்களுக்கான விடுதலை ஆண்கள் கிட்ட இருக்குன்னு சொல்றதே கடுமையான ஆணாதிக்க மனப்பான்மை !//
    Great lines..

    ReplyDelete
  7. என்னமோ போங்க இளங்கோ ..பெண்ணியம் பற்றின சரியான புரிதல் உங்ககிட்டயும் இல்ல .." great lines" அடடா !

    ReplyDelete
  8. கவிதைன்னு சொல்லலியேன்னு தப்பிச்சுட்டாப்பல ஆச்சா ?

    ReplyDelete