Tuesday, January 4, 2011

பாலிதீன் என்னும் பிசாசு..


பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களால் சுற்றுச் சூழல் அழிந்து கொண்டே வருகிறது. எந்தப் பொருள் வாங்கினாலும் கூடவே ஒரு பாலிதீன் பையைக் கொடுத்து விடுகிறார்கள் கடைக்காரர்கள். அப்படி அவர்கள் கொடுக்கவில்லை என்றாலும் கேட்டு வாங்குபவர்கள் நிறையப் பேர். இதில் திரும்ப பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் கொஞ்சமே, பெரும்பாலும் தரமில்லாத பிளாஸ்டிக் பொருட்களே நம்மை வந்தடைகிறது.

முன்னொரு காலத்தில் எல்லாம் வீட்டில் இருந்து பாத்திரங்களைக் கொண்டு போய் இட்லி, சட்னி, சாம்பார் என வாங்கி வருவார்கள். எண்ணெய் வாங்க வேண்டுமென்றால் வீட்டில் இருந்து பாட்டில்களை கொண்டு போய் வாங்கி வருவார்கள். இப்பொழுது எல்லாமே கவர்களில். கடைக்கு கையை வீசிக் கொண்டு போய்விட்டு, வரும்போது இரு கை நிறைய பாலிதீன் பைகளை சுமந்து கொண்டு வருகிறோம். சில வருடமாக, டீக் கடைகளில் கொதிக்க கொதிக்க டீயை பாலிதீன் கவர்களில் ஊத்தி தருகிறார்கள்.

ஒவ்வொரு வீதிகளின் குப்பை போடும் இடத்தில் பரந்து கிடக்கும் பாலிதீன் பைகள் எத்தனை. குப்பை வண்டிகள் அள்ளிக் கொண்டு போனாலும் அவர்களும் ஒரு இடத்தில் கொட்டித்தானே வைப்பார்கள். அதுவும் நாம் வாழும் பூமியின் ஒரு இடம்தானே.

அங்கங்கு போடும் பைகள் சாக்கடைகளில் மூழ்கி, மழைக் காலங்களில் தண்ணீர் போக முடியாமல், வழியை அடைத்து விடுகிறது. இன்னும் சில பைகள் மண்ணில் புதைந்து மக்க வழி இன்றி அப்படியே கிடக்கிறது. அது மட்டுமல்லாமல் பாலிதீன் பைகள் கிடக்கும் இடங்களில் அங்கே வாழும் சிறு உயிர்களின் வாழ்வாதாரம் கெட்டுப் போகிறது. கண்ணுக்கு தெரியாத எவ்வளவோ உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

நாளை நம் குழந்தைகள் மண்ணில்(!) விளையாடினால் கல்லும் மண்ணும் கிடைக்கிறதோ இல்லியோ, அவர்களுக்கு கொஞ்சம் நம் காலத்து பாலிதீன் கவர்கள் கிடைக்கும்.

இதெல்லாம் தவிர தண்ணீர் பாட்டில்கள் பெரும் பிரச்சினை. கடையில் மட்டும் விற்றுக் கொண்டிருந்த தண்ணீர் பாட்டில்கள், தற்போது கல்யாணம் மற்றும் இதர விசேசங்களில் இலைக்கு ஒரு பாட்டில் வைக்கிறார்கள்.

இதை விட மற்றும் ஒன்று. குப்பைகள், மீந்த சாதம், பொரியல், எலும்பு, கழிவுகள் என அப்படியே ஒரு காகிதத்தில் கட்டி ஒரு துளி காற்று கூட உள்ளே போக முடியாதவாறு கட்டி போடுவது. அந்தக் கழிவுகள் அப்படியே அந்தக் கவருக்குள்ளே கிடந்து, வேதி வினைகள் ஆற்றி நாம் கடக்கும் போது 'குப்' என்று புரட்டி வருகிறதே, அதற்கு நாமும் ஒரு காரணமல்லவா?.



முற்றிலுமாக நம்மால் தவிர்க்க முடியாதுதான். அதை பின்வரும் வழிகளில் கொஞ்சம் குறைக்கலாமே;

-பொருட்கள் வாங்க கடைகளுக்குச் சென்றால் முடிந்த அளவு வீட்டில் இருந்து பைகளை கொண்டு செல்லுங்கள்.

-கையில் கொண்டு வரக் கூடிய பொருட்களுக்கு கடைக்காரர் பாலிதீன் பையில் போட்டு கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லுங்கள். (ஒரு சோப்பு, ஒரு பாகெட் பிஸ்கட் வாங்கினாலும் கடைகளில் பாலிதீன் கவர் கொடுப்பார்கள்)

-முடிந்த அளவு REUSE பண்ணலாமே.

-குழந்தைகளுக்கு பாலிதீன் தீமைகள் பற்றி சொல்லிக் கொடுக்கலாம்.

-முக்கியமாக பயன்படுத்திய பின்னர் சரியான முறையில் குப்பையில் சேருங்கள்

- குப்பைகளை பாலிதீன் கவர்களில் கட்டிப் போடாதீர்கள்.

இந்த உலகத்தில் இருந்து எத்தனையோ பெற்றுக் கொண்ட நாம், அதற்கு திருப்பிச் செய்யும் ஒரு நன்றிக் கடனாக இருக்கட்டுமே.

SAY NO TO PLASTIC BAGS..

ஒரு வீடியோ:




SAY NO TO PLASTIC BAGS..

படம்: இணையத்தில் இருந்து.. நன்றி.


21 comments:

  1. எங்களது கன்னியாக்குமரி மாவட்டம் பாலிதீன் முற்றிலும் தடைசெய்யப்பட்ட மாவட்டம். இங்கே கடைக்கு போனாலே துணிப்பையோடு சென்ற காலம் திரும்பவும் வந்துவிட்டது.

    ReplyDelete
  2. இனியவன் கேட்க இனிமையா இருக்குங்க..
    இளங்கோ சமூகப் பொறுப்பு... இல்ல.. நல்லா இருக்கு.. ;-)

    ReplyDelete
  3. இத்தகைய பிளாஸ்டிக் பைகளை சாலைகள் போடும்பொழுது தாருடன் உருக்கி சாலைகளில் போட்டால் பிளாஸ்டிக் குப்பகைகள் நீக்க படும் அது மட்டுமன்றி சாலைகள் வெகுநாட்களுக்கு சேதம் அடையாமல் இருக்கும்.

    ReplyDelete
  4. குப்பை பதிவுகளை போடுபவர்கள் மத்தியில் பிளாஸ்டிக் குப்பையின் கேட்டைப் பற்றி ஒரு அருமையான பதிவைப் போட்டிருக்கிறீர்கள், இந்த மாதிரி பதிவுகள் நிறைய வரவேண்டும், வாசகர்களால் படிக்கப் படவேண்டும். முன்பெல்லாம் நீங்க சொன்ன மாதிரி அவர்களே பையோ, பாத்திரமோ எடுத்து வருவார்கள், அல்லது விற்பவர்கள் இலைகள் போன்றவற்றில் கட்டி கொடுப்பார்கள். அவற்றை தூர எரிந்தாலும் மண்ணில் மக்கி போகும். இன்று எல்லாம் தலைகீழாகி விட்டது. இன்று பார்த்தால் சில்லறை வியாபாரம் செய்யும் காய்கரிக்காரர்கள் கூட இஷ்டத்துக்கும் பிளாஸ்டிக் பைகளைப் பயன் படுத்துகிறார்கள். பிளாஸ்டிக் பைகள் தற்போது முளைத்துள்ள Big Bazaar, More, Reliance மாதிரியான சுயநலக்கார சமூக விரோதிகளால் கண்ணா பின்னாவென்று வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப் படுகிறது. மக்கள் பிளாஸ்டிக் உபயோகப் படுத்துவதன் மூலம் தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்கிறார்கள் என்பதை என்று உணர்வார்களோ?

    ReplyDelete
  5. My Dear Friend Mr K.A. Elango,
    Fantastic Post, Thank you for writing awareness posts like this. Hope I am expecting like this..!
    Lets start from Us to avoid plastic bags while shoping. I used bio-degradable bags only-
    (Some Shopping Malls in Abu Dhabi).

    Wishing you, Family and ur blog follwers/Readers, a HAPPY NEW YEAR 2011.
    With Wishes,
    Sai Gokulakrishna.

    ReplyDelete
  6. @இனியவன்

    அனைத்து மாவட்டங்களிலும் இது போல இருந்தால் நன்றாக இருக்கும்.
    நன்றிங்க நண்பரே.

    ReplyDelete
  7. @RVS
    நன்றிகள் அண்ணா, நம்மால் முடிந்த அளவு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.

    ReplyDelete
  8. @சிவா
    இந்த பிளாஸ்டிக் சாலைகள் பற்றி நான் கேள்விப் பட்டிருக்கிறேன். நடைமுறைக்கு வந்தால் தான் அதன் சாதக, பாதகங்கள் தெரிய வரும்.

    தங்கள் கருத்துக்கு நன்றிகள் நண்பரே.

    ReplyDelete
  9. @Jayadev Das
    தங்கள் வருகைக்கும், நீண்ட கருத்துக்கும் நன்றிகள் நண்பரே.

    ஒவ்வொருவரும் தம்மால் முடிந்த அளவு பயன்பாட்டை குறைக்க ஆரம்பித்தால் நல்ல விடிவு வரும்.

    நன்றிங்க.

    ReplyDelete
  10. @saigokulakrishna
    தங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் நண்பரே.

    உங்களை போன்று பலரும் உபயோகத்தை குறைத்து கொண்டால் நம் சந்ததிகள் நம்மை வாழ்த்துவர்.

    தங்களுக்கு எனது புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. புத்தாண்டில் நல்ல விழிப்புணர்வு தரும் சமூதாய அக்கறையோடு ஒரு பதிவை தந்து இருக்கிறீர்கள். பலரையும் சென்றடைய வேண்டிய பதிவு, இது.

    ReplyDelete
  12. நீங்க ரொம்ப நல்லவரு போல இருக்கே!!!..(கலாய்)
    இப்ப சீரியஸ்..என் மகளின் பள்ளியில் ஒரு போட்டிக்கு இந்த தலைப்பில் தான் ஆங்கிலத்தில் ஒரு உரை எழுதி இருந்தேன் இளங்கோ அதன் சில வரிகள்"PLASTIC PLASTIC EVERYWHERE.. THE WORLD IS CHOKING AND IAM NOT JOKING" என்று வரும்..விழிப்புணர்வு அவசரமாகத் தேவைப்படும் ஒரு தலைப்பு..நல்ல பகிர்வு

    ReplyDelete
  13. சொன்ன எங்கங்க கேக்கப் போறாங்க...

    பிளாஸ்டிக் நம் வாழ்வில் ஒரு இன்றியமையாத பொருளாகவே மாறி விட்டது.

    ReplyDelete
  14. @Chitra
    நன்றிங்க சித்ரா அக்கா.
    உங்கள் வலைத் தளத்திலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  15. @ஷஹி
    ஆமாங்க, விழிப்புணர்வு இக்கணம் தேவை.

    நன்றிங்க.

    ReplyDelete
  16. @டக்கால்டி
    கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க முயற்சி செய்யலாமே.

    தங்கள் வருகைக்கு நன்றிங்க.

    ReplyDelete
  17. WELL SAID .FANTASTIC AWARENESS POST .
    I READ IN PAPER THAT ITALY HAD BANNED PLASTIC CARRY BAGS FROM JAN 2011.
    IN UK PEOPLE ARE ENCOURAGED TO REUSE PLASTIC BAGS AND RECYCLE THEM.
    IN GERMANY EVERY ONE CARRY A JUTE BAG OR CLOTH BAG FOR SHOPPING.(NAMMOOR MANJAL BAG MADHIRIYE}
    USE AND THROW POLICY SHOULD BE RESTRICTED

    ReplyDelete
  18. @angelin
    ஆமாங்க, இங்கயும் அந்த மாதிரி ஏதாவது சட்டம் போட்டால் தான் நம்ம மக்கள் கேட்பார்கள் போல இருக்கிறது.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  19. நல பதிவு இளங்கோ..
    மதுரையில் இதை நடைமுறைக் காரியமாக்கும் எளிய மனிதர் ஒருவர் பற்றி எழுதியிருக்கிறேன்.
    கொஞ்சம் பாருங்கள்.
    சூழியலும்,பிராய்லர் கடையும்..
    http://www.masusila.com/2010/09/blog-post_07.html

    ReplyDelete
  20. @எம்.ஏ.சுசீலா
    அம்மா, இவரைப் போல ஒரு சிலர் பொதுநலத்தோடு இருப்பதால்தான் நாம் கொஞ்சம் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் இல்லையா..?

    பகிர்வுக்கு நன்றிகள் அம்மா.

    ReplyDelete
  21. very nice elango , can you give me this video file , i have using my son school cultural programe

    by
    mahesh
    jmahesh19@gmail.com

    ReplyDelete