Sunday, January 23, 2011

கடைத்தெருவின் கலைஞன்

திரு.ஜெயமோகன் அவர்களின், ஆ.மாதவன் புனைவுலகு பற்றிய 'கடைத்தெருவின் கலைஞன்' படித்துக் கொண்டிருக்கிறேன். அந்தப் புத்தகத்தில் இருக்கும் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.திரு.ஆ.மாதவனிடம் ஜெயமோகன் பேசிக் கொண்டிருக்கும்போது, மாதவன் அவர்கள் சொல்லுவதாக;

'நாம கண்ணுக்குப் பட்டதை அப்டியே எழுத நினைக்கிற ஆளு. நாம நினைகப்பட்டதுக்கு யதார்த்தத்திலே எடமில்லை. வாழ்க்கை கண்ணு முன்னாலே ஓடிட்டு இருக்கு' என்றார். 'அதோ பார்த்தீங்களா?' என்று ஒருவரைக் காட்டினார். ஒரு ஆசாமி சபரிமலை பக்தர் கோலத்தில் சென்று கொண்டிருந்தார். 'அய்யப்பனாக்கும். விஷூவுக்கு மலைக்குப் போக மாலை போட்டிருக்கான். இந்த சாலைத் தெருவிலே பேரு கேட்ட கேடி. மூணு சீட்டும் முடிச்சவுப்பும் ஜோலி. குடி கூத்தி எல்லாம் உண்டு. மாசத்திலே எட்டு நாள் லாக்கப்பிலே உறக்கம். எடைக்கிடைக்கு ஜெயிலுக்கும் போவான். நாலஞ்சாளை குத்தியிருக்கான். ஆனா இப்பம் பார்த்தேளா... இந்தக் கோலம் சத்யமாக்கும். உண்மையிலேயே மன்சலிஞ்சுதான் மலைக்குப் போறான். பெரிய பக்திமான். இதை நாம் எப்படி புரிஞ்சுக்கிட முடியும்?. நாம இதைப் பதிவு பண்ணி வைக்கலாம். வாசகர்கள் அவங்க வாழ்க்கைய வெச்சு புரிஞ்சுகிட்டா போரும். அல்லாம நாமறிஞ்ச அரசியலை எல்லாம் அவன் மேலே கேற்றி வச்சா அது அசிங்கமா இருக்கும்.'


****************************************

ஒரு பக்கத்தில் திரு.ஜெயமோகன் எழுதியுள்ளது கீழே;

சமீபத்தில் கேரளத்தில் கவி என்ற ஊருக்கு மலைப்பயணம் சென்றிருந்தேன். பஷீர் என்ற நண்பர் காட்டு அட்டைகளை பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். மழைக் காலத்தில் கோடிக் கணக்கான முட்டைகளில் இருந்து கோடிக் கணக்கான அட்டைப் பூசிகள் பிறந்து வருகின்றன. புல் நுனிகளில் பற்றி ஏறக் காத்திருக்கின்றன. அவற்றில் பல்லாயிரத்தில் ஒன்றுக்குக் கூட உணவு உண்ணும் வாய்ப்பு அமைவதில்லை. உடலே நாசியாக குருதி மணத்துக்குக் காத்திருந்து காத்திருந்து நெளிந்து நெளிந்து நாட்கள் செல்ல அந்த மழைக் காலம் முடிந்ததும் அவை வெயிலில் காய்ந்து சக்கையாகிப் புழுதியாகின்றன.

ஏதோ ஒன்று ஓர் உடல் மேல் தொற்றி ஏறுகிறது. அதன் பல்லாயிரம் சகாக்களுக்கும் அதற்கும் அளிக்கப்பட்டுள்ள அத்தனை உடல் நுட்பங்களும் அந்த ஒரு செயலுக்காகவே உருவானவை. அது குருதியை நீர்க்கச்செய்து வலியில்லாமல் உறிஞ்சுகிறது. பின்பு உதிர்ந்து விடுகிறது. உணவு உண்ண நேர்ந்தமையாலையே அதன் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. அந்தக் குருதியில் அது முட்டைகளை நிரப்பிக் கொள்கிறது. ஆழ்ந்த மரணத்துயில். முட்டைகள் அதைப் பிளந்து வெளிவந்து மண்ணில் பரவி அடுத்த மழைக் காலத்துக்காக காத்திருக்கின்றன.

'இந்த அட்டைகளைப் பார்க்கையில் கடவுள் காட்டும் ஒரு வேடிக்கை போலத் தோன்றுகிறது' என்றேன். பஷீர் சிரித்துக் கொண்டு 'மனித வாழ்க்கை மட்டும் என்னவாம்?' என்றார். ஓர் அதிர்ச்சியுடன் எண்ணிக்கொண்டேன். ஆம், மனிதன் மட்டும் என்ன? அவன் படைத்த இந்த நாகரீகம், இந்த இலக்கியம், இந்தச் சிந்தனைகள், கலைகளுடன் அவன் மட்டும் என்ன பெரிய சாதனையை நிகழ்த்தி விட்டான்? எந்த அர்த்தத்தை அடைந்து விட்டான்? உடனே சாளைப் பட்டாணி என் நினைவுக்கு வந்தான்.

(குறிப்பு: ஆ.மாதவன் அவர்களின் 'எட்டாவது நாள்' குறு நாவலில் வரும் பாத்திரம் சாளைப் பட்டாணி.)

*********************************

கடைத்தெருவின் கலைஞன் - ஆ.மாதவனின் புனைவுலகு ஜெயமோகன் தமிழினி


மேலே உள்ள படம் உடுமலை.காம் தளத்தில் இருந்து. நன்றி
http://udumalai.com/?prd=%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D&page=products&id=8723

11 comments:

பாரத்... பாரதி... said...

அட்டைகள் பற்றிய தகவல்கள் ஆச்சர்யமானவை தான்...
ரத்தம் உறிஞ்ச காத்திருந்து, உணவை பெற்றபின் மரணத்துயில்...
புதிய விஷயங்கள்..

பாரத்... பாரதி... said...

மாதவன் மற்றும் ஜெயமோகன் அவர்களுக்கு எம் வந்தனங்கள்...

Chitra said...

பகிர்வுக்கு நன்றிங்க.

இளங்கோ said...

@பாரத்... பாரதி... @Chitra
தங்களுக்கு எனது நன்றிகள்.

ஆமினா said...

நல்ல பகிர்வு

இளங்கோ said...

@ஆமினா
நன்றிங்க..

RVS said...

இந்த தடவை டெம்ப்ளேட் கமெண்ட்தான்..

நல்ல பகிர்வு.. ;-)))))))))

"நந்தலாலா இணைய இதழ்" said...

வருகை தாருங்கள்...!
வாசித்துப் பாருங்கள்...!
பங்கு பெறுங்கள்...!!

என்றும் உங்களுக்காக
"நந்தலாலா இணைய இதழ்"

Arangasamy.K.V said...

வியாபார மனதுடன் பார்த்து , அடுத்த வினாடி இலக்கியவாதியாக சிரிக்கும் தருணம் மிக அழகாக ஜெயமோகனால் பதிவுசெய்யப்பட்டுள்ளது

இளங்கோ said...

@Arangasamy.K.V
ஆமாங்க, அழகான தருணம் அது.
நன்றி.

இளங்கோ said...

@RVS
நன்றிகள் அண்ணா..

Post a Comment