Thursday, April 8, 2010

தமிழரின் நிலை... - புயலிலே ஒரு தோணி

.சிங்காரம் அவர்கள் எழுதிய "புயலிலே ஒரு தோணி" நாவலை படித்து முடித்து விட்டு, இப்பொழுது திரும்பவும் வாசிக்க தொடங்கி உள்ளேன். நாவலில் வரும் வரிகள் அனைத்தும் ஒரு கவிதைக்கு உரிய அழகுடன் உள்ளன. இப்பொழுது நாவல் முழுவதும் நான் சொல்ல போவதில்லை. எனக்கு பிடித்த சில பத்திகளையும், சில வரிகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

ஓர் உரையாடலில்;

" எனது நண்பர் ஒரு கதை சொன்னார். வீரத் தமிழினத்தின் மாட்சிமிகு நிலைமை பற்றி. நீ அதை தெரிந்து கொள்வது அவசியம். சுருக்கமாக சொல்கிறேன். எல்லாரும் அன்றன்று காலையில் வேலை தொடங்கும் முன், மணியகாரனிடம் போய் ஆளுக்கு மூன்று செருப்படி வாங்கி கொள்ள வேண்டுமென்று அரசு ஆணையிட்டது. மறுநாள் கருக்கலில் ஊருக்கு ஊர் மணியக்காரன் வீட்டுக்கு முன்னே வீரத் தமிழ்க் குடிமக்கள் கூடி நின்று, 'விரசாய் அடிச்சு விடுங்கையா, வேலைக்கு போகணும், நேரமாகுது' என்று முறையிட்டு, முதுகை திருப்பி காட்டி கொண்டிருந்தனர். சுணங்காமல் அலுவலை முடித்துச் செல்வதற்காக, அவரவர் சக்திக்கு ஏற்ப காலும் அரையுமாக இலஞ்சத் தொகையும் எடுத்துச் சென்றிருந்தார்கள். இதுதான் தமிழினத்தின் இன்றைய நிலை, நேற்றைய நிலை."

இந்நாவல் எழுதப்பட்ட வருடம் 1962. இன்றைய நிலைமையை நீங்களே நினைத்து கொள்ளுங்கள் தமிழ்க் குடி மக்களே.

இன்னும் ஒரு வரி:

கையில் துப்பாக்கி இருந்தால் காசு இல்லாமலே தோசை. இல்லாவிடின், காசு இருந்தாலும் சில சமயங்களில் தோசை மறைந்துவிடும்.

இன்னும் நிறைய இருக்கிறது. நேரம் இருக்கும் பொழுது இங்கே எழுதுகின்றேன்.

5 comments:

  1. நாவல்ல படிச்சு தான் தெரிஞ்சுக்கனுமா...

    நல்ல பணி.. தொடந்து எழுதுங்க..

    நன்றி...

    ReplyDelete
  2. அன்புள்ள பிரகாஷ்.

    இருக்கும் வரையில் இந்த எழுத்தாளரை நாம் கொண்டாடவில்லை.
    நல்ல நாவல்.. படித்து பாருங்கள்... ஆனால் பொறுமையாக படிக்க வேண்டும்...

    இளங்கோ

    ReplyDelete
  3. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  4. இந்தப் போகிப் பய எல்லா பக்கங்களுக்கும் வந்து விளம்பரம் செய்யறான்.. இவன கண்டிச்சு வெக்கணும்..

    ReplyDelete
  5. அப்புறம் இந்த word verificationஅ தூக்கீருங்க இளங்கோ..

    ReplyDelete