Thursday, March 25, 2010

அரசு இயந்திரங்கள்

பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், ரேஷன் கார்டு மற்றும் பிற தேவைகளுக்காக நாம் அணுகுவது அரசு அலுவலகங்களை. நமக்காக அவர்கள் வேலை செய்ய வேண்டும் என்றுதான் அரசாங்கங்கள் சொல்லுகின்றன. ஒரு வேலை நிமித்தமாக நேற்று ஒரு அரசு அலுவலகம் செல்ல வேண்டி இருந்தது. அங்கே நடந்தவை இங்கு:

- நான் பார்க்க வேண்டிய அலுவலர் இன்னும் வரவில்லை. நேரம் 10:15

- இன்னொரு அலுவலர் வந்தார். இரண்டு ஊது பத்திகளை பற்ற வைத்து அறை முழுவதும் காட்டி விட்டு அவரின் இருக்கையில் அமர்ந்தார்.

- ஒரு ஏழை பெண்மணி எதுவோ அவரிடம் கேட்க, 'எத்தன தடவ சொல்லுறது... இன்னும் ஒரு வாரம் கழித்து வா.. ' என்றார்.

- ஒருவர் ஓரமாய் நின்று கொண்டிருந்தார். சரி, நம்மை போல அவரும் யாரோ ஒருவருக்காக வெயிட் பண்ணுகிறார் என்று நினைத்திருந்தேன். ஒரு பத்து நிமிடம் கழித்து, அரசு ஊழிய பெண்மணி ஒருவர் வந்தார். அந்த அம்மாவை பார்த்ததும் குசலம் விசாரித்து விட்டு, கொண்டு வந்த விண்ணப்பத்தை காண்பித்தார் . இருவரும் உறவினர்களாக அல்லது தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். கொஞ்ச நேரத்தில் வேலை முடிந்து கிளம்பி விட்டார்.

- இன்னொரு ஊழியர் வந்தார். வந்ததும் கையோடு கொண்டு வந்திருந்த கவரில் இருந்து இரண்டு முழ கதம்ப பூவை எடுத்து, பாதியாக்கி ஒன்றை படத்துக்கும் இன்னொன்றை தன் முன்னால் உள்ள பைல்களின் மேல் வைத்தார். நல்ல வேளை படத்தில் அல்லா, விநாயகர் மற்றும் ஏசு அருள் புரிந்து கொண்டிருந்தார்கள். மற்ற மதங்கள் எல்லாம் பாவம் !!

ஆகையால் இதனால் தெரிவிப்பது என்னவென்றால், தெரிந்தவர்கள் அரசு அலுவலகத்தில் இருந்தால் உங்கள் வேலை முடியும். அரசு ஊழியர்கள், நேரம் இருப்பின் நமக்கும் பணி செய்வார்கள் !! . நீங்கள் படிக்காத குடிமகனாகவோ அல்லது நன்றாக பேச தெரியாவிட்டால் கோவிந்தா.. கோவிந்தா.. . அவர்கள் சொல்லும் நேரம் அங்கே இருக்க வேண்டும், இல்லை என்றால் காரியம் நடக்காது.

சரி, இவ்ளோ பேசுறியே, நீ போன வேலை முடிஞ்சுதான்னு கேக்குறிங்க தானே ?. என்ன அடுத்த மாசம் திரும்ப வர சொல்லிருக்காங்க :) . நானும் சாதரண குடிமகன் தானுங்கோ!

2 comments:

  1. சரியாச் சொன்னீங்க இளங்கோ..

    ஆமா நம்ம விழுதுகள் அமைப்புக்கு 80G சர்டிபிகேட் வாங்க இதே மாதிரி தான் அலையனுமா...? இதை கேட்பார் யாரும் இல்லையா...?

    நானும் சாதாரண குடிமகன் தான்..

    அயராது எழுதும் உங்களுக்கு பாராட்டுகள்..

    தண்ணீர் பற்றி நீங்கள் எழுதியது அருமை..

    நானும் கொஞ்சம் கிருக்கியிருக்கிறேன்.. முடிந்தால் அந்தப் பக்கம் வரலாமே...

    ReplyDelete
  2. பிரகாஷ்

    தாமதத்திற்கு மன்னிக்கவும்.

    //அயராது எழுதும் உங்களுக்கு பாராட்டுகள்.. //

    பொய் சொல்லாதிங்க... :). நானே மாசத்துக்கு ஒன்னு ரெண்டுன்னு எழுதுறேன். நானாவது அயராது எழுதுவதாவது.. :)

    உங்கள் வலை பக்கத்தை நானும் தினமும் பார்க்கிறேன். என்ன கமென்ட நேரம் இருப்பதில்லை. மற்ற படி நான் தினமும் பார்க்கிறேன்.

    உங்களின் கருத்துக்களுக்கு எனது நன்றிகள் பிரகாஷ்.

    ReplyDelete