நான் இல்லாத பொழுதில்
வீட்டுக்கு வந்த நண்பன்
புத்தகம் கேட்க
"உள்ள வந்து எடுத்துட்டு போ"
என சொல்ல
அவன் புத்தகத்தை தேடும் சமயம்
"ஏம்பா.. நீ நம்ம சாதி தானே"
"இல்லைங்க"
"அப்புறம்... ? "
"நான் வந்து.. நான் வந்து"
"மூஞ்சிய பாத்தப்பவே நெனச்சேன்... வெளிய போ"
அப்புறமாய்
வீட்டுக்குள் தெளிக்கப்பட்ட
மாட்டு சாணியின்
வாசம் இன்னும் போகவில்லை !
எங்கே நடந்தது இந்தக் கொடுமை...?
ReplyDeleteஇது எங்கள் கிராமத்தில் நடந்தது. இன்றும் கூட அப்படித்தான் இருக்கும். கிராமங்களில் இன்னும் சாதிகள் அழியவில்லை.
ReplyDelete