Monday, November 29, 2010

அமிழ்தினும் அமிழ்து













ஒரு தம்ளர் காப்பித் தண்ணியும்
கொஞ்சம் பொட்டுக் கடலையும்
கொண்டு வந்து
தின்னத் தந்துவிட்டு
'என்கிட்டே வேறென்ன இருக்கு'
என்று தள்ளாமையில்
புலம்பிக் கொண்டிருக்கும்
பாட்டிக் கிழவியிடம்,
இது
அமிழ்தினும் அமிழ்து
என்பதைச் சொல்ல
வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

குறிப்பு: இப்பதிவில் இருக்கும் படம், பதேர் பாஞ்சாலி படத்தில் வரும் பாட்டி.

**************

Friday, November 26, 2010

பெருமூச்சு















மேள சத்தங்கள்
ஜொலிக்கும் மேடைகள்
ஆயத்த சிரிப்புகள்
உருட்டப்படும் பாத்திரங்கள்
மணக்கும் உணவுகள்
பரபரக்கும் மனிதர்கள்
விளையாடும் குழந்தைகள்
என நிறைந்து கிடக்கும்
திருமண மண்டபத்தின் வாசலை,
வீதியில் கடக்கும்
யாரேனும் ஒருவரின்
பெருமூச்சு
நிரப்பி விட்டுச் செல்கிறது.

படம் : இணையத்திலிருந்து : நன்றி.

************************