சார்லி சாப்ளினின் படைப்புகளில் மிக முக்கியமான படைப்பு சிட்டி லைட்ஸ் . அடுத்தவனைப் பற்றி கவலை படாத மனிதர்களுக்கு மத்தியில் , சக உயிர்களின் மீது அன்பு செலுத்துவதை பற்றி தம் படங்களில் போதித்தார் . நகைச்சுவை என்பது சிரிக்க மட்டும் இல்லாமல் சிந்திக்கவும் செய்த மாபெரும் மனிதன் . உலகை தனது நடிப்பின் மூலம் திரும்பி பார்க்க வைத்தவர் .
சிட்டி லைட்ஸ்:
ஓரிடத்தில் ஒரு கண் தெரியாத பெண்ணை சாப்ளின் பார்க்க நேரிடுகிறது . அவளை பற்றி மிகவும் கவலை கொள்கிறார் சாப்ளின் . அந்த பெண் பூ விற்று தனது பாட்டியுடன் வாழ்க்கையை நடத்தி வருகிறாள் என்பதை அறிந்து கொள்கிறார் .ஒரு நதியின் ஓரத்தில் அமர்ந்திருக்கும் பொழுது ஒரு பணக்காரன் தற்கொலைக்கு முயல , அதை தடுக்கிறார் சாப்ளின் . அவரை காப்பாற்ற போய் சாப்ளின் தண்ணிக்குள் விழுவது , பிறகு இருவரும் சேர்ந்து விழுவது , எப்படியோ இருவரும் மேலே ஏறி வருவது ... எப்படியோ இருவரும் மேலே வருகிறார்கள் . பின்னர் அந்த பணக்காரன் தனது வீட்டுக்கு சாப்ளினை அழைக்க, அவரும் செல்கிறார் . போதையில் இருக்கும்பொழுது எல்லாவற்றையும் அள்ளிக் கொடுக்கும் பணக்காரன் , போதை தெளிந்ததும் சாப்ளினை யார் என்றே தெரியாது என்று சொல்லிவிடுகின்றான் .அந்த பணக்காரன் வீட்டில் சாப்ளின் தங்கியிருக்கும் ஒரு நாள் காலையில் , அந்த வீதி வழியாக அந்த பெண் பூ விற்று சென்று கொண்டிருக்கிறாள் . அவளை பார்த்ததும் அவருக்கு எல்லா பூக்களையும் வாங்க வேண்டுமென்று ஆசை . செல்வந்தனிடம் சொல்ல அவனும் பணத்தை எடுத்து நீட்டுகிறான் , அத்தனை பூக்களையும் அவரே வாங்கிக்கொள்ள அப்பெண் மிக்க சந்தோசபடுகிறாள் . உடனே சாப்ளின் உன்னை என் காரில் வீட்டில் விட்டு விடுகிறேன் என்று கூற , அவளும் சரி என்று கூறுகிறாள் . அப்பெண்ணை வீட்டில் விட்டு விட்டு திரும்பி விடுகிறார் சார்லி . தவறுதலாக அப்பெண் , சார்லியை மிக பெரிய பணக்காரன் என்று நினைத்து , மிக்க மகிழ்ச்சியுடன் தனது பாட்டியுடன் அவனை பற்றி கூறுகிறாள் .பணக்காரன் வீட்டுக்கு திரும்பி வந்தால் அவனுக்கு போதை தெளிந்து , சார்லியை விரட்டி விடுகிறார்கள் . வேலை தேடி அலையும் சார்லியை , மீண்டும் பணக்காரன் சந்திக்கிறான் . இப்பொழுது திரும்பவும் வீட்டுக்கு அழைக்க , இவர் மறுக்க , அவன் வற்புறுத்த திரும்ப அவன் வீட்டுக்கு செல்கிறார் . அடுத்த நாள் போதை தெளிந்ததும் அந்த பணக்காரன் வீட்டில் இருந்து விரட்டபடுகிறார் .
இரவில் பணக்காரன் வீட்டுக்கு செல்வதும் ,
காலையில் அடித்து விரட்டுவதுமாக போகின்றன நாட்கள் .
ஒருநாள் அப்பெண் குடியிருக்கும் வீட்டுக்கு வாடகை கட்டாததால் வீட்டை காலி செய்ய நோட்டீஸ் குடுத்து விட்டு போய்விட்டார்கள் .
பாட்டி அதை அப்பெண்ணிடம் சொல்லாமல் மறைத்து விடுகிறார் .
அப்பொழுது அங்கே வரும் சார்லி ,
அதை பார்த்து விட்டு எல்லாவற்றையும் நான் பார்த்து கொள்கிறேன் என்கிறார் .
கூடவே ,
ஒரு கண் டாக்டர் ஊருக்கு வந்திருப்பதாகவும் ,
அவரிடம் கூட்டி சென்று பரிசோதித்து கண் குறைபாட்டை போக்க தான் உதவுகிறேன் என்றும் சொல்கிறார் சார்லி .
அவர்தான் பெரிய பணக்காரர் ஆயிற்றே என்று அப்பெண்ணும் மகிழ்ச்சி அடைகிறாள் .
ஒரு வேலைக்கு செல்ல ,
அங்கே இருக்கும் ஆள் துரத்தி விடுகிறான் .
சரியென்று ஒருவன் பாக்சிங் விளையாட்டுக்கு கூப்பிட ,
ஒல்லி உடம்பை வைத்து கொண்டு பணத்துக்காக சரி என்கிறார் .
கடைசி வரை முட்டி மோதியும் அதிலும் தோல்வி .
பாக்சிங் காட்சிகளில் நீங்கள் நிச்சயமாக சிரிப்பிர்கள் .
அப்படி சிரிப்பு வரவில்லை என்றால் தக்க மருத்தவரை பார்க்கவும் !!!
பணம் தேவைப்படுவதை பணக்காரனிடம் சொல்ல அவனும் பணம் தருகிறான் .
ஆனால் அங்கு நடந்த குழப்பத்தில் ,
இவர் பணத்தை திருடி விட்டு போவதாக போலீஸ் சந்தேகபடுகிறது .
குடிகார பணக்காரன் போதையில் உறங்கி விட்டான் .
வேறு வழி இல்லாமல் ,
பணத்துடன் தப்பி விடுகிறார் சார்லி .
அப்பெண்ணின் வீட்டுக்கு வந்து அப் பணத்தை கொடுத்துவிட்டு ,
இதை ஆபரேஷன் மற்றும் வீட்டு செலவுக்கு வைத்துகொள் ,
நான் சீக்கிரமாக திரும்ப வருவேன் என்று கூறிவிட்டு சிறை செல்கிறார் சாப்ளின் .
சிறை வாசம் முடிந்ததும் அப்பெண் பூ விற்று கொண்டிருந்த பழைய இடத்துக்கு வருகிறார் சாப்ளின் .
அங்கே அப்பெண் இல்லாததை கண்டு வீதியில் நடக்க ஆரம்பிக்கிறார் .
அழுக்கான உடை ,
பார்த்தால் பைத்தியம் போலிருக்கும் அவரை சீண்டுகிறார்கள் தெரு பையன்கள் .
அப்பொழுது கீழே கிடந்த ஒரு ரோஜா பூவை எடுக்கிறார் சார்லி .
இதை பக்கத்துக்கு கடையில் இருந்து ஒரு பெண் பார்த்து சிரித்து கொண்டிருக்கிறாள் .
அவள்தான் அக்கடையின் முதலாளி .
கடைக்கு வரும் பணக்காரர்கள் ஒவ்வொருவர் முகத்திலும் சார்லியை தேடி கொண்டிருக்கிறாள் அப்பெண் .
அவள் வேறு யாருமல்ல ,
சாப்ளின் உதவிய அதே பெண்தான் .
அப்பெண்ணுக்கு இப்பொழுது பார்வை திரும்பி விட்டது .
அவள் சாப்ளினை கூப்பிட ,
சார்லி திரும்பி அவளை பார்த்ததும் புரிந்து கொள்கிறார் .
அப்பெண் சாப்ளினை அழைத்து காசு கொடுக்க வேண்டாமென்று கூறிவிட்டு கடைக்கு ஓரத்தில் கூச்சமாக நிற்கிறார் .
அப்பெண் காசுடன் ஒரு ரோஜா பூவையும் எடுத்து கொண்டு வா என்று கூப்பிட ,
சார்லி தயங்கி தயங்கி நகர்கிறார் .
அப்பெண் சார்லியின் கையை இழுத்து ,
கையில் ரோஜாவையும் காசையும் வைக்கும் பொழுது ஏதோ தட்டுப்பட ,
அதிர்கிறாள் அப்பெண் ; தொடுதல் மூலம் இது சார்லிதான் என்று புரிந்துகொள்கிறாள்
"You ? " -
அப்பெண் "You can see now.." -
சார்லி "Yes..i can see now.. " -
அப்பெண் இருவர் கண்களிலும் ஒரு ஒளி வந்தது போல இருக்கும் அக்காட்சியில் .
நமக்கு கண்ணில் நீர் வழிந்து கொண்டிருக்கும் போது படமும் முடிந்து விடுகின்றது.
காதலையும் ,
காமெடியும் கலந்து நமக்கு ஒரு காவியத்தை படைத்து தந்த சாப்ளினுக்கு என்றும் தலை வணங்குவோம் .