Wednesday, August 6, 2014

மாடித் தோட்டம் - கீரைகள் (Terrace Garden)

வீட்டுத் தோட்டத்தில் வாழை, தென்னை போன்ற பயிர்கள் இருந்தமையால், போதிய வெயிலும் இடமும் இன்றி கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை வளர்க்க முடியாமல் இருந்தோம். இருந்தாலும், அவரை, பீர்க்கை போன்ற கொடி வகைகளை மொட்டை மாடிக்கு இழுத்து பந்தல் போட்டதில், நன்றாகவே விளைந்தது. இந்த வருடம் அடுத்த முயற்சியாக, மொட்டை மாடித் தோட்டத்தை அமைத்துள்ளோம்.  

தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத் துறை மூலமாக, சென்னை மற்றும் கோவைப் பகுதிகளில் மானியத்துடன் கூடிய 'நீங்களே செய்து பாருங்கள் (Do It Yourself kit)' கொடுத்திருந்தார்கள். விலை ரூபாய் 1325. தேர்தல் காரணமாக, சில பொருட்கள் தாமதமாக வந்து சேர்ந்தன. ஆனாலும், மாடித் தோட்டம் போடத் தகுந்த காலமான ஜூலையில் எல்லாப் பொருட்களையும் கொடுத்து விட்டார்கள்.

தென்னை நார்க் கழிவுடன், தொழு உரம் சேர்த்து ஒரு வாரம் கழித்து விதைகளை நடத் தொடங்கலாம். அசொஸ்பைரில்லம், சூடோமோனோஸ் போன்ற உயிரி உரங்களையும், நார்க் கழிவுடன்  சேர்க்க வேண்டும்.

தக்காளி, கத்திரி மற்றும் மிளகாய் விதைகளை குழித்தட்டில் விதைத்து வளர்ந்து வருகின்றன. வெண்டை, முள்ளங்கி போன்ற விதைகளை அப்படியே விதைத்து விட்டேன். இப்பொழுது கீரைகள் அறுவடை ஆகிவிட்டது. காய்கறிகள் வளர இன்னும் சில மாதங்கள் ஆகலாம்.

மாடித் தோட்டம் மற்றும் கீரைப் படங்களின் தொகுப்பு.

 (விதைக்கத் தயாராக இருக்கிறது - மாடித் தோட்டம்)

முளைத்து வரும் கீரை விதைகள்..


 வெந்தயக் கீரை 


  வெந்தயக் கீரை - அறுவடைக்குப் பின்னர் 

சிறு கீரை

 பாலக் கீரை 

புளிச்ச கீரை - இந்த பையும், புளிச்ச கீரை விதையும் கோவை அக்ரி இண்டெக்சில் வாங்கியது 


முள்ளங்கி 


3 comments:

  1. அருமையா இருக்கு இப்பவும் கிடைக்குமா இந்தப் பைகளும், தென்னை நாரும்...

    ReplyDelete
  2. @ezhil
    கீழ்க்கண்ட முகவரியில் விசாரித்துப் பாருங்கள்:

    Department Of Horticulture & Plantation Crops
    No.8, Thadagam Road,
    GCT Post,
    Coimbatore.
    Ph: 2453578

    ReplyDelete
  3. அருமை.

    நானும் க்ரீன்ஹவுஸில் கீரை போட்டுருக்கேன். ரெண்டு முறை அறுவடை முடிச்சு சமையலும் ஆச்சு. ஆனால் எல்லாமே ஒரே ஒரு வகைதான்:( இந்தியாவைப்போல் இங்கெ வகைவகையான கீரைகள் இல்லை:(

    ReplyDelete