Wednesday, July 3, 2013

இறங்கள் !!

போன வாரம் திருப்பூர் சென்றிருந்தோம். சிக்னலுக்கு காத்திருந்த பொழுது, டிவைடர் கற்களில் டி.எம்.எஸ். அவர்களுக்கு ஒரு கட்சியின் சார்பாக இரங்கல் சுவரொட்டி ஒட்டி இருந்தார்கள். அதில் கடைசியில் இப்படி ஒரு வாக்கியம் இருந்தது;

டி.எம்.எஸ். அவர்களுக்கு​ ---------
-------------------------------------------
------  (கட்சியின்) சார்பாக
இறங்கள்


இதில் உள்ள எழுத்து பிழை ஒரு பக்கம் என்றாலும், நம்மையும் இறக்கச் சொன்ன இந்தச் சுவரொட்டியைப் பார்த்து அழுவதா, சிரிப்பதா எனத் தெரியவில்லை. அழுத்தம் திருத்தமாகத் தமிழை உச்சரித்துப் , பாடிய டி.எம்.எஸ். அவர்களின் ஆவி நிச்சயம் மன்னிக்காது.

இரங்கல் - இறங்கள் !! (இரண்டு வார்த்தைகளும் ஒன்று என நம்பி சுவரொட்டி தயாரித்தவர் வாழ்க)

நாங்கள் பள்ளியில் படிக்கும் பொழுது, எங்கள் தமிழ் அய்யா அடிக்கடி ஒரு வாக்கியம் சொல்வார்;

"மாவட்ட கல்வி அதிகாரி சிற்றுண்டிச் சாலைக்குச் சென்றார்" - மேற்கண்ட வாக்கியத்தில், தெரியாமல் ஒரு கால் சேர்த்தால்;

"மாவாட்ட கல்வி அதிகாரி சிற்றுண்டிச் சாலைக்குச் சென்றார்" !!

தெரியாமல் எங்காவது இது மாதிரி சேர்த்தால், அர்த்தமே மாறிவிடும், எனவே விழிப்போடு எழுதுங்கள் என்பார்.


அதிலும் இந்த, 'ல, ள, ழ' ,  'ந, ண, ன' மற்றும் 'ர , ற' என எழுதும்  பொழுது நிச்சயம் குழப்பம் ஏற்படும். செந்தமிழும் நாப் பழக்கம் என்பது போல, படிக்க படிக்கவே இவைகள் எங்கு வரும் என்பது புலப்படும்.

பலம் - பழம் - பள்ளம் 
அவன் - தண்ணீர் - செந்நீர்
சுறா - சுரை

தமிழில் பிழை இல்லாமல் எழுத என்ன வழி (வலி!) என்றால், அதை நாம்தான் நம் பழக்கத்தின் மூலம் கொண்டு வர வேண்டும். 

4 comments:

  1. இந்தக் காலக் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து, தமிழின் சிறப்பையும் உணர வைக்கவும் வேண்டும்...

    ReplyDelete
  2. //துளசி கோபால் said...

    உண்மை!
    //
    நன்றிங்க

    ReplyDelete
  3. //திண்டுக்கல் தனபாலன் said...

    இந்தக் காலக் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து, தமிழின் சிறப்பையும் உணர வைக்கவும் வேண்டும்...
    //
    நன்றிங்க

    ReplyDelete