Thursday, January 5, 2012

நிலம்















எவ்வளவோ மல்லுக்கட்டிப் பார்த்தாச்சு
இந்த முக்கால் ஏக்கர் நெலத்தோட
ஒரு வருசம் வெள்ளாமை வருது
அடுத்த வருசம் நட்டம்
இப்படித்தான் ரொம்ப வருசம்
பொழப்பு ஓடுது.

ரொம்ப வருசமா ஊட்ல
சோறு, துணிமணி எல்லாம் அளவோடுதான்.

பாட்டன் வெச்சுட்டுப் போன சொத்து
ரோட்டுக்குப் பக்கமா இருந்தது
நல்லதாப் போச்சு..
பிளாட் போட வித்தாச்சு
போன மாசம்..

நெலத்த வித்து வந்த
காசு தர்ற வட்டில
இப்போ மூணு வேளையும்
சுடு சோறுதான் ஊட்ல.!

5 comments:

  1. செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பது போல்
    தன் கர்ப்பப் பை அழித்துபிறர் வாழ்க் கொடுத்தும்
    நிலம் எப்போதும் கர்ணனாகத் தான் இருக்கிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 1

    ReplyDelete
  2. இப்போது இதுதான் நடக்கிறது .. அழியும் விவசாயம் நான்கு ஆபத்து என்பதை எப்போது புரிந்து கொள்ள போகின்றோம் ?

    ReplyDelete
  3. இப்படியே எல்லாம் வித்துட்டு போனா பிறகு எதை உண்பது

    ReplyDelete
  4. நிலம் நிலையானதுதான்
    அதற்கு சொந்தம் கொண்டாடுபவர்கள்
    தானே தானே தானே
    மாறுவார்கள்..

    ReplyDelete
  5. @Ramani
    @"என் ராஜபாட்டை"- ராஜா
    @sasikala
    @guna thamizh
    நன்றி நண்பர்களே

    ReplyDelete