Tuesday, September 6, 2011

இரு கப் டீ

போன வாரம் புதிய தலைமுறை இதழில், எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் எழுதும் 'மனிதர் தேவர் நரகர்' தொடரில் தனது நண்பர் தோழர் சோமு என்பவரைப் பற்றி எழுதியிருந்தார். கல்லூரி வேலை, பொதுப் பணித் துறை வேலை என தான் வேலை செய்த இடங்களில் மலிந்து கிடந்த ஊழல்களை வெறுத்து வெளியே வந்தவர் அவர்.

ஒரு நாள் சோமு மற்றும் சோமுவின் மனைவி ஆகியோரிடம் பிரபஞ்சன் பேசியிருந்ததை கட்டுரையின் ஓரிடத்தில் பகிர்ந்திருந்தார்.

=======================

'நான் சொல்றேன் காம்ரேட். நான் சினேகத்தைக் கேட்டேன். இவர், ஒரு டீக்குத்தான் என்னிடம் காசு இருக்கு. உங்ககிட்ட சில்லறை இருந்தா வாங்க. டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்னார்'

'சாப்பிட்டீங்களா'

'எங்களுக்கு முன்னால இரு கப் டீ. எங்க இரண்டு பேரின் வாழ்க்கையும் போல. அதை எப்படியும் குடிக்கலாம். ஆடிக்கொண்டோ, பாடிக்கொண்டோ குடிக்கலாம். ஆனால் டீ சிந்திடக்கூடாது. ஏன்னா, மறுமுறை டீ கிடைக்காது. அப்புறம் மூன்று வருசத்துக்குப் பிறகுதான், என் காதலை அவர்ட்ட சொன்னேன்'

=======================

நாம் பார்க்க அல்லது படிக்கத் தவறிய மனிதர்கள் நம் பக்கத்து வீடுகளில் கூட இருக்கலாம் போலத் தோன்றுகிறது.

நன்றி: புதிய தலைமுறை



4 comments:

  1. வித்தியாச மனிதர்களை அறிமுகபடுதிநீர்கள் இளங்கோ

    ReplyDelete
  2. நானும் படித்தேன்
    நல்ல விஷயங்களை எத்தனை முறை
    படித்தால்தான் என்ன நல்லதுதானே
    பகிர்வுக்கு நன்றி.த.ம 2

    ReplyDelete
  3. ம்ம்ம்..ஆமா இளங்கோ..

    ReplyDelete
  4. @மோகன் குமார்
    @Ramani
    @ஷஹி

    நன்றிகள் நண்பர்களே

    ReplyDelete