Wednesday, July 20, 2011

நின்னைச் சரணடைந்தேன்

நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்
பொன்னை உயர்வை புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று...
துன்பமினியில்லை.. சோர்வில்லை.. தோற்பில்லை..



உச்சி தனை முகர்ந்தால்
கர்வம் ஓங்கி வளருதடி
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடி





பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா
நின்றன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா
நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா




போனதெல்லாம் கனவினைப் போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஒரு கனவோ?
இந்த ஞாலமும் பொய்தானோ?

காலமென்றே ஒரு நினைவும்
காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ ? - அங்கு
குணங்களும் பொய்களோ

காண்பவெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ





10 comments:

  1. அருமை.... அருமை... அருமை....

    ReplyDelete
  2. அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. அருமை இளங்கோ.
    அனைத்து பாடல்களையும் கேட்டேன்.
    நெகிழ்ந்து விட்டேன்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. எல்லாமே ஏற்கனவே கேட்டதுன்னாலும், இப்படி திடீர்னு பொறி தட்டினாப்ல எங்கேயாவது கேட்கும்போது இந்தப் பாடல்கள் இன்னும் அழகு:-)

    ReplyDelete
  5. முன்னமே கேட்டிருந்தாலும், இப்படி எதிர்பாரமல் ஒரு பொறி தட்டியது போல கேட்கும்பொழுது இந்தப் பாடலகள் இன்னமும் அழகுதான்.
    நன்றி இளா.

    ReplyDelete
  6. @ஆமினா
    நன்றிங்க

    @இராஜராஜேஸ்வரி
    நன்றிங்க

    ReplyDelete
  7. @ரத்னவேல்
    மிக்க நன்றிங்க.. அனைவரையும் வசீகரிக்கும் பாரதி வரிகள் அல்லவா..

    ReplyDelete
  8. @முரளிகுமார் பத்மநாபன்
    நன்றிங்க முரளி.. இன்னும் நிறைய பாடல்களை நேரமிருப்பின் பகிர்கிறேன்..

    ReplyDelete
  9. கோயம்புத்தூர் பதிவர்களிடையே ஒரு சிறிய " பதிவர்கள் வட்டம்" என்ற ஒன்று வைத்து அதற்கென்று ஒரு வலைப்பூவும் வைத்து கொள்ளலாம் என்பது எனது யோசனை. முதலில் இப்படி ஒரு வட்டத்தை உறவாக்கிய பின் வரும் காலங்களில் அதனை மேலும் வளர்த்து கொண்டு செல்வதின் சாதக பாதகங்களை பேசிக்கொள்ளலாம். ஒரு சிறிய இதழும் நடத்தி வருகிறேன்., அதனை இங்கே சென்று பார்க்க வேண்டுகிறேன்.

    http://vellinila.blogspot.com/2011/07/blog-post_20.html

    இது குறித்து மேலும் பேச எனது மின்னஞ்சலை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்!

    ReplyDelete