Tuesday, June 24, 2014
Friday, May 9, 2014
வீட்டுத் தோட்டத்தில்: சம்பங்கி, பலா மற்றும் செம்பருத்தி
போன வருடம் கொடிசியாவில் நடந்த விவசாயக் கண்காட்சியில் வாங்கிய சம்பங்கி கிழங்கு அழகாகப் பூத்திருக்கிறது இப்பொழுது.
கடந்த வருடங்களை விடவும் இந்த வருடம் பலா மரத்தில் பிஞ்சுகள் அதிகம்
விட்டது. எப்படியும் ஒன்றிரண்டாவது காய் நிற்கும் என நாங்கள்
நினைத்திருக்க, எல்லாப் பிஞ்சுகளும் உதிர்ந்து விட்டது. அடுத்த வருடம் பலா
பிடிக்குமா எனத் தெரியவில்லை.
சிவப்பு செம்பருத்தியை, வைத்த இரண்டு மாதங்களிலேயே பூச்சி பிடித்து வாடி
விட்டது. அடித் தண்டுக்கு மேல் முழுவதும் வெட்டி விட, இப்பொழுது தினமும்
பூக்கள் பூக்கிறது.
Subscribe to:
Posts (Atom)