எதார்த்த சிறுகதைகள் என்ற வரிசையில் 'சொல்வனம்' இதழில் சில கதைகள் வெளியாகி உள்ளன.
அறுபது வயதுக்கு மேல் ஒரு பெண்மணி, தன் கணவன், பிள்ளைகள் என அவர்களுடன் இருக்கவே விருப்பபடுவார்கள். தனியாக, தான் விரும்பியபடி வாழ அவர்கள் நினைக்கும்போது, வயதை காரணமாக வைத்து மற்றவர்கள் தடுப்பார்கள். பொருளாதாரம் ஒரு காரணமாக இருந்தாலும், இந்த வயதுக்கு மேல் எப்படி தனியே சென்று வாழ்வது என்ற பயமும் இருக்கும்.
அம்பை அவர்களின் 'அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு' கதையில் வரும் சந்தியாபாய், கணவன் மற்றும் பிள்ளைகளிடம், இந்த வீட்டில் எனக்கும் பங்கு இருக்கிறது, நானும் என் நகைகளைக் குடுத்து இருக்கிறேன், என் பங்கை எனக்கு கொடுங்கள். நான் எங்கள் கிராமத்துக்குச் சென்று என் தங்கையுடன் வாழ்கிறேன்.. என்று சொன்னதும் குடும்பத்தினர் ஆடிப் போகிறார்கள். புத்தி பிசகி விட்டது என்று எண்ணுகிறார்கள். சந்தியா பாயின், கணவரும் பிள்ளைகளும் மோசமானவர்கள் இல்லை, அவர்கள் எல்லோரும் இவரைத் தாங்குகிறார்கள். ஆனால், எதையே இழந்தது போல இருக்கும் இருக்கும் இந்த வாழ்க்கையை அவர் துறந்து, தான் நேசித்த தோட்டங்களும் பூச் செடிகளும் குருவிகளும் இருக்கும் தனது பால்ய கால இடத்துக்கு செல்ல ஆசைப்படுகிறார். அவரின் ஆசை நிறைவேறியதா?.. கதையைப் படித்து பாருங்களேன்.
------------
நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களின் 'மாரியம்மன் கஞ்சியும் அந்தோணிசாமியும்' இந்தக் கதை, தான் பிறந்த மண்ணை விட்டு எங்கேயோ இருக்கும் அந்தோணிசாமியைப் பற்றிய கதை. வெளிநாட்டில், மாரியம்மன் கஞ்சி விழாவில்.. சொந்த மண்ணை விட்டுப் போன அந்தோணிசாமி, தன்னைப் போலவே இருக்கும் அந்தோணிசாமிகளைக் கண்டுகொள்கிறார்.
---------
இந்த இரண்டு கதைகளும் எனக்கு பிடித்திருந்தன.