
எல்லோருக்கும் எல்லாமும்
கிடைத்து விடாதாகையால்
சிநேகமாய்
ஆதரவாய்
மோனத் தவமாய்
உயிர்த் துளிகளாய்ப்
பெய்து கொண்டிருக்கிறது மழை...
பெய்யும் மழையை
எதிர்த்துக்கொண்டு
நீள்சாலைகளில் விரைகிறது
என் வாகனம்
எந்தச் சலனமுமின்றி..
படம் தந்த தளம் : http://www.artiststranger.com