Tuesday, December 10, 2013

அரவிந்த் கெஜ்ரிவால்

"சிறு ரத்தம் குடிக்கும் கொசுவை கொன்று விட முடிகிறது, பெரு ரத்தம் குடிப்பவர்களை ஒன்றும் செய்ய முடிவதில்லை." - என்று ஒருமுறை ட்விட்டரில் எழுதினேன். ஊழல் அற்ற ஆட்சியும், நேர்மையும் கிலோ என்ன விலை என்று கேட்ட கட்சிகளையே பார்த்திருந்த நமக்கு, இப்படி இரத்தத்தை உறிஞ்சி, உறிஞ்சி கொல்கிறார்களே என்ற கோபம்  இருந்தது.

இவ்வளவு ஆண்டுகளாய் அரசியலில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் பிஜேபி போன்ற கட்சிகளுடன் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே, இவ்வளவு இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது 'ஆம் ஆத்மி' கட்சி.

சரி, இவ்வளவு வெற்றி பெற்ற இவர்கள், வருங்காலத்தில் நல்ல ஆட்சியைக் கொடுப்பார்களா என்று நாம் நினைக்கலாம். அதைப் பின்னர் பார்க்கலாம்.

ஆனால், இந்தத் தேர்தல், இந்திய திருநாட்டில் ஜனநாயகம் இன்னும் இருக்கிறது, மகுடிகளுக்கு மக்கள் எப்பொழுதும் மயங்க மாட்டார்கள் என இன்னுமொரு முறை உரக்க பறை சாற்றியிருக்கிறது.

அரசியல்வாதிகளே, அரசியல் சாக்கடையைத் தூர்வார நீங்கள் தயாராக இருந்தால், எங்கள் வாக்குகள் என்றும் உங்களுக்கே.

8 comments:

  1. முற்றிலும் உண்மை மாற்றத்தையும் நியாயத்தையும் விரும்பும் மக்கள் இன்றும் இந்நாட்டில் மவுனிகளாக கிடக்கின்றனர்.. அவர்கள் ஏய்த்தும் பிறர் வயிற்றை அடித்து வாழ்பவர் இல்லை, உழைத்து வாழும் சாமானியர்கள், அவர்களின் கனவை ஆம் ஆத்மி நிறைவேற்றுமா?! காலம் தான் பதில் சொல்லும்.

    --- விவரணம். ---

    ReplyDelete
  2. சரியாகச் சொன்னீர்கள்
    த.ம.1

    ReplyDelete
  3. ஆரம்பம் என்னமோ அமர்க்களமாகத்தானிருக்கின்றது . Survival தான் பிரச்சனையே ... போக போகத்தான் தெரியும் இவர்களின் லட்சணமும் .... Hope Positive

    அதற்குள்ளேயே பூஷன் ஆரம்பித்துவிட்டார் :(

    ReplyDelete
  4. tamilmanam +3
    டில்லியில் முடியும்!
    தமிழ்நாட்டில்?
    கொட்டாம்பட்டியில்? மணப்பாறையில்? ஓட்டன்சத்திரத்தில்?

    ReplyDelete
  5. கிடைத்திருக்கும் மக்கள் ஆதரவை முறையாகப் பயன்படுத்திக்கொண்டு நம்பிக்கை உண்டாக்கும் வகையில் இவர்கள் செயல்படவேண்டும். இவர்களில் பலரும் அறிவுஜீவிகள். எனவே 'தான்'மை (ego) மிக்கவர்கள். அது இவர்களைச் சிதறிப்போகாதபடி பாதுகாக்கவேண்டும்.

    ReplyDelete
  6. ஆம் நண்பர்களே, பார்ப்போம்..
    ஏதாவது ஒரு மாற்றம் வந்து விடாதா என்றுதானே ஏங்கித் தவிக்கிறோம்..

    நன்றிங்க

    ReplyDelete
  7. மாற்றம் ஒன்றே மாறாதது ! எதிர்பார்ப்போம் .

    ReplyDelete