Tuesday, April 9, 2013

தொலைந்த எழுத்து

வெகு நாளாக
புரட்டாத புத்தகத்தில்
ஒரு பூச்சி
உயிர் விட்டிருந்தது...

உயிர் விட்டிருந்த
பக்கத்தில்
ஓர் எழுத்தை
மறைத்து கிடந்தது..

பூச்சியை
எடுத்த பின்
அவ்விடத்தில் இருந்த எழுத்தும்
காணவில்லை...

எந்த எழுத்தை
போட்டும் அவ்வாக்கியத்தை
நிரப்ப முடியவில்லை
அதன் உயிரைப் போல..

குறிப்பு: முன்னரே இத்தளத்தில் பதிந்த கவிதை.

10 comments:

  1. வலி மிகுந்த கவி . அபாரம் அண்ணா ...

    ReplyDelete
  2. புள்ளி அளவில் ஒரு பூச்சி என்ற கவிதை சிறுவயதில் பள்ளியில் படித்தது..
    புத்தகத்தில் மூழ்கியிருந்த ஒருவன் பிசகாய் ஒரு காற்புள்ளி கிடப்பதைக்கண்டு புறங்கையால் தட்டிவிட்டான். அந்த உழிர் அங்கே பிரிந்தது.. ஒரு சென்றிமீட்டர் கூட இல்லாத ஒரு கீற்றாய் அதன் உடல் போனது. மனமில்லாமல் புத்தமத்தை மூடி கண்தூங்கினால் கனவில் அந்த பூச்சிதான் வந்தது..
    அப்படி போகும் அந்த கவிதை..
    உங்கள் எழுத்து எனக்கு என் பள்ளி நினைவை மீட்டுத்தந்தது...
    அருமை நன்றி

    ReplyDelete
  3. வித்தியாசமான சிந்தனை வரிகள்...

    ReplyDelete
  4. மிகவும் அற்புதமான வரிகள் தோழா
    நாடி கவிதைகள்

    ReplyDelete
  5. @ஜீவன்சுப்பு
    நன்றிங்க..

    ReplyDelete
  6. //சனாதனன் said...

    புள்ளி அளவில் ஒரு பூச்சி என்ற கவிதை சிறுவயதில் பள்ளியில் படித்தது..
    புத்தகத்தில் மூழ்கியிருந்த ஒருவன் பிசகாய் ஒரு காற்புள்ளி கிடப்பதைக்கண்டு புறங்கையால் தட்டிவிட்டான். அந்த உழிர் அங்கே பிரிந்தது.. ஒரு சென்றிமீட்டர் கூட இல்லாத ஒரு கீற்றாய் அதன் உடல் போனது. மனமில்லாமல் புத்தமத்தை மூடி கண்தூங்கினால் கனவில் அந்த பூச்சிதான் வந்தது..
    அப்படி போகும் அந்த கவிதை..
    உங்கள் எழுத்து எனக்கு என் பள்ளி நினைவை மீட்டுத்தந்தது...
    அருமை நன்றி
    //

    உங்கள் பள்ளி காலத்து நினைவுகளை இங்கே பகிர்ந்து கொண்டமைக்கு.. நன்றி நண்பரே..

    ReplyDelete
  7. @திண்டுக்கல் தனபாலன்
    நன்றிங்க

    ReplyDelete
  8. @NADINARAYANAN MANI
    நன்றிங்க

    ReplyDelete
  9. மிக உயர்ந்த இடத்தை பெற வேண்டிய கவிதை இது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. //Chellappa Yagyaswamy said...

    மிக உயர்ந்த இடத்தை பெற வேண்டிய கவிதை இது. வாழ்த்துக்கள்.
    //

    தங்கள் வாழ்த்துக்கு எனதன்பு நன்றிகள்..

    ReplyDelete