Thursday, November 3, 2011

நூலகம் தேவையா?


நூலகம் என்பது வெறும் பொழுதுபோக்கு இடம் என்றுதான் நிறைய பேர் நினைத்திருப்பார்கள் போலத் தெரிகிறது. அது பொழுது போக்கு இடம் இல்லை, அறிவு பொதிந்து கிடக்கும் இடம் என்பதை ஆள்பவர்களுக்கு எப்படி புரிய வைப்பது?.

நூலகம் தேவையா என்று கேட்டால், தேவை என்பது தான் என் நிலைப்பாடு. மருத்துவமனைகள் முக்கியமும் கூட, ஆனால் பரந்து கிடக்கும் சென்னை மாநகரில் அதற்கு ஓரிடம் கூடவா சிக்கவில்லை.

போன அரசு கட்டிய நூலகம் என்பதற்காக, நூலகத்தை இடம் மாற்றும் முடிவு சரியானதல்ல. இந்த நூலகத்தை விட, பெரிய நூலகம் மற்றும் வசதிகள் கொண்ட ஓர் இடத்துக்கு மாற்றினால் பரவாயில்லை. மருத்துவமனையாகவே மாற்றினாலும், அதற்கு தகுந்தது போல இருக்குமா எனத் தெரியவில்லை. புதிதாக கட்டும்பொழுது தேவைகளை அறிந்து கட்ட முடியும்.

எல்லாத்தையும் விட்டுத் தள்ளுங்கள், இவர்களுக்கு ஓட்டுப் போட்டு அமரவைத்த நம்மை என்ன செய்யலாம்?

எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் அவர்களின் பதிவு: சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றும் தமிழக அரசின் முடிவுக்குக் கண்டனம்


4 comments:

  1. ண்மை கலைஞரின் பெயர் தாங்கி ஏதும் இருக்க கூடாது என்ற echo மனப்பான்மை ஜெ க்கு நிறைய உண்டு .அதன் விளைவே இது .

    ReplyDelete
  2. எல்லாத்தையும் விட்டுத் தள்ளுங்கள், இவர்களுக்கு ஓட்டுப் போட்டு அமரவைத்த நம்மை என்ன செய்யலாம்?

    நியாயமான கேள்வி... உங்க நேர்மை பிடிச்சிருக்கு

    ReplyDelete
  3. தாங்கள் கூறியது முற்றிலும் சரியே.

    ReplyDelete
  4. @சி.பிரேம் குமார்
    @suryajeeva
    @karthi
    நன்றி நண்பர்களே..

    ReplyDelete