ஆப்பிள் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது நிறைய சத்துக்கள் நிறைந்த பழம்.
எல்லா பழ கடைகளிலும் அடுக்கி அடுக்கி வைத்திருக்கிறார்கள். பார்த்தாலே மின்னுகிறது. விலையை கேட்டால் நூறு ரூபாய்க்கு மேலே சொல்லுகிறார்கள். சரி, அப்போ நமக்கு எங்கே தெரியுது, 'மின்னுவது எல்லாம் பொன்னல்ல' என்று. வாங்கி கொண்டு வந்து கழுவி அப்படியே சாப்பிடுகிறோம், நல்ல பெரிய கடையில் வாங்கியது வேறு !. நானும் இத்தனை நாளாக இப்படித்தான் அப்படியே தோலோடு சாப்பிட்டு கொண்டிருந்தேன். தோலில்தான் சத்து அதிகம் அல்லவா !!
உமர் பாருக் என்பவர் எழுதிய "உடலின் மொழி" என்கிற புத்தகத்தில், ஆப்பிள் கெடாமல் இருக்க சில ராசயனங்களில் முக்கி எடுத்தும், மின்னுவதற்கு மெழுகும் பூசுகிறார்கள் என்று சொல்லி இருந்தார்.
வீட்டில் இருந்த ஒரு ஆப்பிள் மின்னுகிறதே என நினைத்து கொண்டு, கத்தி எடுத்து சுரண்டினேன், வந்தது தோல் அல்ல.. மெழுகு !! அது மெழுகா அல்லது வேறு எதாவது பொருளா எனத் தெரியவில்லை.. ஆனால் அழுக்கு போல வந்து கொண்டே இருந்தது.. வெள்ளையாக... அப்பொழுது போட்டோவும் எடுத்தேன்... நீங்களும் பாருங்கள்..

உடல் நலத்துக்காக சாப்பிடும் பழங்களிலும் இவ்வளவு கெடுதல்கள். இதை சாப்பிட்டு உடலுக்கு கேடு வந்து மருந்து வாங்கி தின்றால், அதிலும் கலப்படம். இத்தனை பிரச்சினைகளையும் தாங்கி கொண்டு நமக்காக உழைக்கும் உடலுக்கு ஒரு நன்றி சொல்லுங்கள். கூடவே எதையும் பார்த்து சாப்பிடுங்கள், அது பழமாக இருந்தாலும் கூட...
அடக் கொடுமையே..? எங்க போய் முட்டிக்க....
ReplyDeleteநாடு அழிஞ்சு போச்சு.. இருக்குற வரைக்கும் யாருக்கும் பாதகமில்லாம பொழப்புதனம் பண்ண வேண்டியத்தான்.. நன்றி உங்கள் பகிர்தலுக்கு இளங்கோ...
நன்றி பிரகாஷ்
ReplyDeleteஎன்ன இளங்கோ இத்தனை நாள் உங்களுக்குத் தெரியாதா? மாம்பழத்தை பழுக்க வைக்கிறேன் பேர்வழி என்று கார்பைட் கல்லை வைக்கிறார்களே அது போலத்தான் இதுவும். வாழைப்பழத்துக்கும் ஏதோ ஒரு மாயம் செய்கிறார்கள் என்னவென்று தெரியவில்லை.
ReplyDeleteதங்கவேல் அண்ணா... எல்லாத்துலயும் எதாவது கலப்படம்....
ReplyDeleteஎதைத்தான் சாப்பிடுவதோ ? :(
தங்கள் வருகைக்கு நன்றி அண்ணா...
நல்ல விழிப்புணர்வு பதிவு...ur follower too..
ReplyDeleteஎன்ன கொடும சார் இது...
ReplyDelete//புதிய மனிதா said... நல்ல விழிப்புணர்வு பதிவு...ur follower too..//
ReplyDeleteஆமாங்க.. இது ஒரு பழைய பதிவு. இன்ட்லியில் இணைக்காமல் இருந்தேன். இன்றுதான் இணைத்தேன்.
தங்களின் வருகைக்கும், நீங்கள் என்னைத் தொடர்வதற்கும் என் நன்றிகள்.
@ வெறும்பய
ReplyDeleteதங்களின் வருகைக்கு நன்றி. கொஞ்சம் உசாரா இல்லேன்னா உயிரே போய்டும் போல இருக்குதுங்க.
ஆமா, அதென்ன வெறும்பயல் ? (சின்ன வயசுல உங்கள யாராவது திட்டுன பேரா :) )
இது ஆப்பிளுக்கும் மட்டுமில்லை. உதாரணத்துக்கு Marketல்விற்கும் Freshஆன Pocket பச்சைபட்டாணியை கழுவினால் பச்சைகலரில் சாயம் போகும்.எல்லாமே அப்படித்தாங்க.
ReplyDeleteநல்ல தகவலைக் கொடுத்தீங்க..
ReplyDeleteஎல்லாவிதமான பழங்களும் அழுகாம இருக்க இந்தமாதிரி ஏதாவது ஒரு டெக்னிக் யூஸ் பண்ணிட்டுதான் இருக்காங்க..
இனி ஆப்பிள் சாப்பிடும் போதும் உசாரா இருந்துக்கணும்..
Traders use Acetylene to ripe bananas. Acetylene acts similar to ethylene which is the ripening agent in the nature but acts slower than acetylene.
ReplyDeleteAcetylene is believed to affect the nervous system by reducing oxygen supply to brain.
Sridharan
Acetylene is used to ripe bananas. Acetylene is believed to affect the nervous system by reducing oxygen supply to brain.
ReplyDelete@ Chef.Palani Murugan, LiBa's Restaurant
ReplyDeleteஆமாங்க.. இப்போ எல்லாம் பச்சைக் கீரைகள பார்த்தால் கூட, பயமா இருக்கு. எதாவது மருந்து அடிசிருப்பான்களோ அப்படின்னு. எதா இருந்தாலும் பார்த்து சாப்பிடணும்.
@ பதிவுலகில் பாபு
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றிகள் பாபு. கொஞ்சம் உசாரா இருந்தால், நாம் உடல் நலத்தைக் காப்பற்றி விடலாம்.
@ Sridhar
ReplyDeleteஅந்த கெமிகல் நம் மூளையை பாதிக்கும் என்று சொன்னது புது தகவல். ஒருவர் தினமும் தன் உடல் நலம் தேற ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் அவரின் கதி ?. நினைக்கவே பயமா இருக்கிறது. தங்களின் பின்னூட்டம், மிகவும் முக்கியமான தகவல்.
@FOOD
ReplyDeleteதங்கள் வருகைக்கும் , பாராட்டுக்கும் நன்றிங்க