Posts

புத்தர்

Image
எங்கேனும் அழுகுரல் கேட்கும்போதோ.. வன்முறை தனது கரங்களை விரிக்கும்போதோ.. போதிக்க நான் புத்தனைத் தேடுகிறேன்.. அகப்பட்ட புத்தனோ  'நானே புத்தனில்லை' எனச் சொல்லிவிட்டு தனியே நடந்து போகிறார்... புத்தரே புத்தனில்லை எனச் சொல்லிய பின்னர் யார்தான் புத்தன்? படம்: இணையத்தில் இருந்து - நன்றி

ஏமாற்று வியாபாரிகள்

Image
காய்கறி அங்காடியில் பேரம் முடிந்து விற்றவனும், வாங்கியவனும் விலை அதிகம் எனவும் குறைவு எனவும் சிறு முணுமுணுப்புடன் விலகினர்... இரண்டு சொத்தைக் காய்களைத் தள்ளிவிட்டதில் விற்றவனும் கிழிந்து போனதொரு பத்து ரூபாய்த் தாளை மடித்துக் கொடுத்ததில் வாங்கியவனும் உள்ளூர மகிழ்ந்த கணத்தில்... கடவுள் தன் கையிலிருந்த தராசையும் எடைக் கற்களையும் வீசியெறிந்து விட்டு நித்திரையைத் தொடர்ந்தார். படம்: இணையத்தில் இருந்து - நன்றி இது ஒரு மீள்பதிவு

சுதந்திர தினம் - விழுதுகள்

Image
எங்கள் விழுதுகள் அமைப்பு பற்றி ஏற்கனவே இந்தப் பதிவுகளில் எழுதியிருக்கிறேன்.  விழுதுகள் - நனவாகியதொரு கனவு ஒரு விருது சுதந்திர தினமான நேற்று, விழுதுகள் மையங்களில் சிறப்பாக கொண்டாடினோம். அனைத்து மையங்களிலும் விழா நடத்த முடியாது என்பதால், கள்ளிப்பாளையம், ஜெ.ஜெ நகர் மற்றும் எம். கவுண்டம்பாளையம் ஆகிய மையங்கள் இணைந்து விழாவை, எம். கவுண்டம்பாளையம் பள்ளி அரங்கில் நடத்தினோம். விளையாட்டு, நாடகம், நடனம், பேச்சு என மாணவர்கள் அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாக பங்கேற்றார்கள். சளைக்காமல் அவர்கள் பங்கேற்று பெற்ற மகிழ்ச்சி என்பதோடு அல்லாமல், எங்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டார்கள் எங்கள் மாணவர்கள். அங்கு எடுத்த புகைப்படங்கள்:

சினிமா:A Separation (எ செபரேசன்) படத்திலிருந்து...

Image
எ செபரேசன் படத்தின் கதையை போன பதிவில் எழுதி இருந்தேன். (A Separation) அப்படத்தை பற்றி எனது பார்வையில் தோன்றியவற்றை இப்பதிவில் எழுதி இருக்கிறேன்.  சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான, ஆஸ்கார் விருதைப் பெற்ற இப்படம் பற்றி எழுத நிறைய இருக்கிறது. . * கணவன் - மனைவி விவாகரத்துக்களில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். ஒரு வகையில் அவர்கள் வேறு வழியில்லாமல் விவாகரத்தை நாடினாலும், பெற்றோர் இருவரிடமும் பாசம் வைத்திருக்கும் குழந்தைகள் படும் துயரத்தை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. இந்தப் படத்தில், நடேர் மற்றும் சிமினின் மகளான டெர்மி அமைதியாக வந்து போகிறாள். பதினோரு வயதான அவள் இருவரிடமும் மாட்டிக் கொண்டு தவிக்கிறாள். * இரான் நாட்டை விட்டு மனைவி போக விரும்ப, கணவனோ பயமில்லாமல் இங்கேயே வாழ வேண்டும் என்று சொல்கிறான். * தள்ளாத வயதில் அல்சீமர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தன் தந்தையை பாசத்துடன் கவனித்துக் கொள்கிறான் நடேர். அவருக்கு சவரம் செய்து, கழிவறைக்கு அழைத்துச் சென்று, குளிப்பாட்டி என அவருக்காக அவன் செய்யும் பணிவிடைகளும், அவரை விட்டுப் பிரிய மனமில்...

சினிமா: A Separation

Image
விவாகரத்துப் பெற விண்ணப்பம் செய்திருக்கிறார்கள் ஒரு தம்பதியினர். அவர்கள் வாழ்வது ஈரான் நாட்டில். பதினோரு வயதில் பள்ளி செல்லும் மகள். கணவன் - நடேரின் தந்தை அல்சீமர் என்னும் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்.  சுய நினைவில்லாத அவரால் எந்த வேலையும் செய்ய முடியாது. அது போலவே எதையும் புரிந்து கொள்ளவும் முடியாது. மனைவி - சிமின், வெளிநாடு செல்ல வேண்டும் என்று கேட்க, நடேர் தன் வயதான தந்தையை விட்டு வர முடியாது என்று சொல்கிறான். எனவே, சிமின் விவாகரத்து வேண்டி மனுச் செய்கிறாள். நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. சிமின், தனது பொருட்களுடன் தன் தாய் வீட்டுக்குச் செல்கிறாள். மகள் - டெர்மி, தன் தாயுடன் செல்ல மறுத்து தன் தந்தையுடனே தங்கி விடுகிறாள். நடேர் வேலைக்குப் போன பின்னர் தன் தந்தையைக் கவனித்துக் கொள்ள ஒரு பணிப்பெண்ணை வேலைக்கு அமர்த்துகிறான். அப்பெண்ணின் பெயர் ரசியாக். டெர்மியின் ஆசிரியைக்கு பழக்கமானவள் அப்பெண். முதல் நாள் வேலைக்கு வருகிறாள் ரசியாக். அவளுடன் கூடவே அவளின் சிறு மகளும். அவள் தன் தாயின் வயிற்றில் தலையை வைத்து ஏதாவது சத்தம் வருகிறதா என க...

சிநேகம்

Image
எப்பொழுதும் தேங்காய்த் தொட்டி தேடி அலையும் கண்ணம்மாவுக்கு ஊர் வைத்த பெயர் பைத்தியக்காரி. பூ வரைந்த பாவாடையும் பாவாடை வரை நீண்ட மேல் துணியும் ஒரு கையில் அடுக்கி வைத்த தேங்காய்த் தொட்டிகளும் மேல் தொட்டி நிறைய கூழாங் கற்களுமாக வீதியில் நடந்து கொண்டிருப்பாள். தொட்டியும், கூழாங் கல்லும் எங்கே கிடந்தாலும் ஓடிப் போய் அள்ளிக் கொள்ளுவாள் யாராவது திட்டினால், கெட்ட வார்த்தைகளும் கல்லடியும் கிடைக்கும். மனிதர்கள் யாரும் தர முடியாத சிநேகத்தை தான் கண்டெடுக்கும் ஒவ்வொரு தொட்டியிலும், கல்லிலும் பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறாள் கண்ணம்மா.. படம்: இணையத்தில் இருந்து.. நன்றி. (மீள்பதிவு)  

குடிமகன்களை குடிக்கும் மகன்களாக்கியது...

டாஸ்மாக் - எல்லோருக்கும் தெரிந்த இடம். கிராமம், நகரம் என்ற வேறுபாடில்லாமல் எங்கும் இருக்கிறது. குறிப்பிட்ட தூரத்துக்குள் அரசுப் பள்ளிகள் இருக்கிறதோ இல்லையோ, டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. ஒரு பொருள் எளிதாக எங்கும் கிடைத்தால் அதை மக்கள் வாங்கவே விரும்புவார்கள். அந்தப் பொருள் ஏதோ டீ போலவோ, பிஸ்கட் போலவோ, போதை தராமல் இருந்தால் பரவாயில்லை. ஆனால் போதையை தரும் இந்தக் கடைகளை என்ன செய்யலாம்?. பிறந்த நாளா -  லோன் கிடைக்கவில்லையா - லோன் கிடைத்து விட்டதா - மேனஜேர் திட்டினாரா - மேனஜேர் பாராட்டினாரா - சம்பளம் உயர்வா - குழந்தை பிறந்ததா - காதலி போனை எடுக்கவில்லையா - மனைவி கூட சண்டையா - கல்யாணமா - நண்பர்கள் சந்திப்பா - உறவினர்கள் யாராவது இறந்து விட்டார்களா - இப்படி எது நடந்தாலும், எந்தப் பிரச்சினை என்றாலும் நம் மக்கள் சொல்லும் வார்த்தை "வா.. குடிக்கலாம்" என்பதே.  பத்தடி தூரத்தில் கிடைக்கும் பொழுது எல்லோரும் விரும்புவது டாஸ்மாக்கையே. எங்கள் சிறு வயதுகளில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த கடை இன்று ஊருக்கு நட்ட நடுவில். சுற்றிலும் தள்ளாடும் மக்கள். அலைமோதும் கூட்டம். சனி, ஞாயிற...