Posts

உறங்காத தெரு

Image
அங்கங்கு குப்பை கிடக்கும் இந்தத் தெருவின் காலைப் பொழுதுகளில் அழகிய கோலங்கள், பால் வண்டிகளின் ஓசைகள் நடை செல்வோரின் செருப்போசைகள் வேப்ப மரக் காக்கையின் சத்தம் வீடு திரும்பும் கூர்க்கா என விடியும்.. அலுவலகம், பள்ளி என சரசரக்கும் மக்கள் கிளம்பிப் போன பின்னர் காய்கறி வண்டி, தபால் எனவும் மாலைப் பொழுதுகளில் குழந்தைகளின் சத்தம் எனவும் நீள்கிறது பகல்... மெல்லிய வெளிச்சம் மட்டும் பரவிக் கிடக்கும் இரவுகளில் நைட் ஷிப்ட் போய் வரும் ஓரிருவர் திரும்ப வரும் கூர்க்கா சுற்றி வரும் நாய்கள் எனவும்.. தெரு எப்போதும் உறங்குவதேயில்லை. ************* புகைப்படம் http://www.flickr.com/photos/seeveeaar/3837563809/ இங்கிருந்து.. நன்றி.

சாப்பாடு

Image
இந்தப் பெருநகரத்தில் உணவுக்கு அலைவதென்பது தினசரி வாடிக்கையாகி விட்டது. என்ன செய்தாலும் ஒரு நல்ல உணவகத்தை கண்டு பிடிக்க முடிவதில்லை. அப்படியே இருந்தாலும் மாதத்தில் பெரும் பணம் அதுக்கே கொடுக்க வேண்டிய அளவு விலைப்பட்டியல் இருக்கிறது. அப்படியே நமது பணம் காலியானாலும், அடுத்த நாள் நமது வயிறு ஓர் ஆட்டம் ஆடி நிற்பதை நாம் ஒன்றும் செய்ய முடியாது. இன்னும் மீறிப் போனால் மருத்துவமனைக்குச் சென்று காட்டக் கூடிய அளவு நிலைமை மோசம் ஆகலாம். சைவ, அசைவ உணவகம் என்று இல்லை. எல்லா இடத்திலுமே நாம் வாயைப் பிளக்கும் அளவுக்கு விலைகள். இதில் அசைவ உணவகம் பக்கம் சென்றால் இப்பொழுது இருக்கும் பெரிய ரூபாய் நோட்டு மதிப்பு இல்லாமல் ஒருவர் பசியாறுவது சிரமம். உணவக முதலாளிகளைச் சொல்லியும் குறையில்லை, குளிரூட்டப் பட்ட அறைகள், வாசலிலேயே சலாம் போடும் பணியாளன்(அந்தக் காலத்து ராஜா உடை முரண்), மேசைக்கு ஒரு ஆள், துடைக்க ஒரு ஆள், குழந்தைகள் விளையாட தனியாக ஒரு இடம், சிறு சிறு தொட்டி அழகுச் செடிகள், கிளம்பும் போது இலவசமாக வைக்கப் படும் வாழைபழம் (ரொம்ப சிறுசாக இருக்கும்), பீடா, இனிப்பு சோம்பு என அவ்வளவையும் அவர்கள் செலவில் செய்ய வேண்ட...

பெண்ணும் எழுத்தும்

' தீராத விளையாட்டுப் பிள்ளை ' ஆர்.வி.எஸ் அவர்கள் இந்தத் தொடருக்கு என்னை அழைத்திருந்தார். முதல் முறை என்னை அழைத்து எழுதச் சொல்லியவர், இரண்டாவது முறையாகவும் என்னை அழைத்திருக்கிறார். அழைப்புக்கு நன்றி சொல்லி இதோ எழுதத் தொடங்குகிறேன். ஆதி காலத்தில் மனிதக் குழுக்களுக்கு தலைவியாக பெண்தான் இருந்திருக்கிறாள். 'வால்காவிலிருந்து கங்கை வரை ' புத்தகத்தில் இதைப் பற்றி விரிவாகக் காணலாம். தலைவியின் வழிப்படியே அந்த குழுக்கள், அவளின் பினனால் நடந்து போயிருக்கின்றன. ஆனால், பின்னால் இந்த சமூகம் அப்படியே மாறிப் போயிருக்கிறது. மாறிப் போனதன் விளைவாகவே 'தையல் சொல் கேளேல்' என்றும், 'பெண் புத்தி பின் புத்தி' என்றும் எழுதி வைத்திருக்கிறார்கள். ஈன்று புறம் தருதலோடு தன் கடன் முடிந்ததாகவும் பதிவு செய்திருக்கிறார்கள். போன வாரம் கூட கண்ணகி பிறந்த நாள் என்று கொண்டாடினார்கள். ஏன் மாதவி முன்னிறுத்தப் படுவதில்லை இங்கே? . ஏனென்றால் பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், அதாவது கண்ணகி போல் இருக்க வேண்டும் என்று அடிக்கடி நினைவு படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மாதவியை கெட்டவள் போல் என்...

எனது டைரியிலிருந்து..

Image
ஒரு காலத்தில் எனக்குப் பிடித்த சில கவிதைகளை டைரியில் எழுதி வைத்திருந்தேன். அதிலும் ஆனந்த விகடனில் வரும் கவிதைகள் தான் அதிகம் இருக்கும். அவற்றில் சிலவற்றை இங்கே பகிர்கின்றேன்; இருந்தவை .. தொலைந்தவை .. - கல்யாண்ஜி (ஆனந்த விகடன்) கார்த்திகை ராத்திரி ஏற்றின கடைசி விளக்கை வைத்துத் திரும்புமுன் அணைந்து விடுகிறது முதல் விளக்குகளுள் ஒன்று. எரிகிறபோது பார்க்காமல் எப்போதுமே அணைந்த பிறகுதான் அதைச் சற்று அதிகம் பார்க்கிறோம். எரிந்த பொழுதில் இருந்த வெளிச்சத்தைவிட அணைந்த பொழுதில் தொலைந்த வெளிச்சம் பரவுகிறது மனதில் பிரகாசமாக. ******************************** வலி - ஜி.ஆர்.விஜய் (ஆனந்த விகடன்) விழுங்கிய மீன் தொண்டையில் குத்துகையில் உணர்கிறேன் தூண்டிலின் ரணம். ******************************** வானம் மட்டும் இருக்கிறது - பா.சத்தியமோகன் (ஆ.வி. கற்றதும் பெற்றதும் பகுதியில் - சுஜாதா குறிப்பிட்டது) ஆமாம் ஆமாம் நீ பேசும் ஒவ்வொன்றும் வரிக்கு வரி நிஜம் முற்றுப்புள்ளி உள்ளிட்ட அனைத்தும் ஏற்கத் தயார் அனைத்துக்கும் ஆமாம். சங்கிலியால் கட்டப்பட்டது யானையென்றாலே தப்புதல் கடினமாச்சே சங்கிலியால் கட்டுண்ட டம்ளர் தப்பு...

டிப்ஸ்

Image
உணவகத்தில் உண்டு முடித்ததும் பில்லைக் கொண்டுவந்து வைத்து பணத்துக்கு காத்திருந்தான் சர்வர் 'பணம் நானே கொடுத்துக்கிறேன்' என எழுந்து திரும்பி நடந்த என் முதுகில் வழிந்து கொண்டிருக்கிறது முன்பின் தெரியாத அவனின் வன்மப் பார்வையும், கோபமும். படம் : இணையத்திலிருந்து , நன்றி .

அசடன் (இடியட்)

Image
பியாதோர் தஸ்தாயெவ்ஸ்கி எழுதியுள்ள நாவலான 'இடியட்'டை பேராசிரியர் எம்.ஏ. சுசீலா அவர்கள் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இந்த மாத இறுதி அல்லது வரும் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அறுநூறு ரூபாய் மதிப்புள்ள புத்தகத்தை, முன் வெளியீட்டுத் திட்ட விலையாக ரூபாய் முன்னூற்றி ஐம்பதுக்கு முன் பதிவு செய்து கொள்ளலாம். இந்நாவல் பற்றி சுசீலா அவர்கள் தம் பதிவொன்றில் இப்படி கூறியுள்ளார்: மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் இன்னொரு மனிதனை இனம் காண நேரும்போது ஏற்படும் கரைகாணா மானுட வேதனைகளையும்,உள்ளச் சிதைவுகளையும் இந்நாவலின் மூலம் கண்டடைய முனைந்திருக்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி. இப் புத்தகத்துக்கு முந்தைய மொழி பெயர்ப்பான குற்றமும் தண்டனையும் பற்றிய எனது பதிவு: குற்றமும் தண்டனையும் (Crime and Punishment) சுசீலா அவர்களின் பதிவு : அசடன் மொழியாக்கம்-முன் வெளியீட்டுத் திட்டம் இடியட்/அசடன் முன்பதிவு நாள் நீட்டிப்பு... புத்தகம் முன்பதிவு செய்ய: Bharathi Book House,D-28, Corporation Shopping Complex,Periyar Bus Stand, Madurai. விலை;ரூ.600.00 முன் வெளியீட்டுத் திட்ட விலை;ரூ;350.00 கூரியர் செலவு;ரூ;75.00 ஏப்ரல்...

சார்லி சாப்ளின்

Image
இன்று Google-ன் முதல் பக்கத்தில், சாப்ளினின் பிறந்த தினத்தை நினைவு படுத்தியிருந்தார்கள். அவரவர் பிரச்சினைகளில் மூழ்கி விழுந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில், நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகின்றன கலைகள். காலங்கள் தாண்டியும் கலைகள் வாழ்வதற்கு கலைஞர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள். மற்றவரைச் சிரிக்க வைத்தல் என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்கு அவன் கோமாளி வேசம் உட்பட என்னென்னவோ செய்ய வேண்டியிருக்கிறது. தனது காயங்களை மறைத்து அல்லது மறந்து தான் அவர்கள் கலையை வெளிப்படுத்துகிறார்கள். காலங்கள் பல கடந்தும் நம்மை சிரிப்பில் ஆழ்த்தும் அந்த மகா கலைஞனை இந்நாளில் நினைவு கூறுவோம். அவரின் படங்களை பற்றி நான் எழுதிய பதிவுகளின் சுட்டிகள்: சிட்டி லைட்ஸ் சினிமா - மாடர்ன் டைம்ஸ் (Modern Times) தி சர்க்கஸ் (The Circus) ஒரு வீடியோ: