Posts

ரோஸ்

"ஏய்... ரோஸ்.. ரோஸ்.. ச்ச்ச்ச்சு.... " என்றால் எங்கிருந்தாலும் ஓடி வரும். வளர்த்தது பக்கத்து வீட்டு ஆயாதான் என்றாலும் எங்கள் வீட்டுக்கு வெளியில் போட்டிருக்கும் சாக்கில்தான் எப்போதும் படுத்திருக்கும். "யார் ஊட்டுச் சோத்த தின்னுட்டு.. யார் ஊட்ல படுத்திருக்க ..... ? " எனக் கேட்டவாறே அந்த ஆயா எங்கள் வீட்டுக்கு வரும் போதெல்லாம், கிழவியை திரும்பி பார்த்துவிட்டு திரும்பவும் தலையை சாக்கில் சாய்த்துக் கொள்ளும். வெள்ளை கலரில், அங்கங்கே பழுப்பு நிறத்தில் ஒல்லியாக இருக்கும். குரைப்பதை தவிர, யாரையும் கடித்ததில்லை. யாராவது வீட்டுக்கு வந்தால் வாசலிலேயே நின்று விடுவார்கள். "ஏங்க, இந்த நாயி கடிக்குமா? " எனக் கேட்பார்கள். " ஒன்னும் பண்ணாது.. வாங்க.. " என்று சொன்னாலும் பயந்து கொண்டேதான் வருவார்கள். ஒரு காவல் ஆள் போலவே இருந்தது ரோஸ். ஆண் நாய்க்கு எதற்கு, "ரோஸ்" அப்படின்னு பேரு வெச்சிங்க என்று அந்த ஆயாவிடம் கேட்டால் "அதெங்க.. நானா வெச்சேன்... பேரனுக வெச்சாங்க.... அப்படியே கூப்பிட ஆரம்பிச்சுட்டேன்.. " என்றது. ரொம்ப சாதுவாக இருக்கும். எந்நேரமும் எங...

வீடும் பள்ளியும்..

'சாதிகள் இல்லை பாப்பா' 'உதவி செய்' 'பகுத்துண்டு வாழ்' என்று பள்ளியில்.. 'அந்த ப்ரெண்டு என்ன சாதி' 'ரப்பர் பென்சில யாருக்கும் குடுக்காத' 'டிபன் பாக்ஸ்ல இருக்குறத நீ மட்டும் சாப்பிடு' என்று வீட்டில்.. பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டியது குழந்தைகளுக்கா இல்லை பெரியவர்களுக்கா?.

பாஸ்வேர்டாகிய பழைய காதலி !

Image
குடும்பப் பெயர்களை எண்களோடும் சிறப்பு எழுத்துக்களோடும் சேர்த்து வளைத்து எழுதியதில் ஒவ்வொரு முறையும் கடவுச் சொல் பஞ்சம் அடைந்தது. கடவுச் சொல்லை மாற்றச் சொன்ன இணையத் தளத்தில் புதியதொரு சொல்லை இட்டேன். அது என் பழைய காதலியின் பெயரென சொல்லிவிட்டுப் போகிறான் நண்பனொருவன். அது வெறும் கடவுச் சொல் என எப்படி அவனுக்குப் புரியவைப்பது ?. படம் : இணையத்திலிருந்து.

பாதி உடல் தங்கமாக அலையும் நரி.. !

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் உப பாண்டவம் நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார். அந்தக் கதை நாம் ஏற்கனவே கேட்ட கதைதான். அந்தக் கதை இதோ மீண்டும். கொடும் பஞ்சம் சூழ்ந்த முன்னொரு காலத்தில், ஒருவன் தன் மனைவி மகன் மருமகளோடு ஒரு ஊரில் வசித்து வந்தான். பஞ்சத்தால் எதுவும் கிடைக்காத ஒரு நாளன்று வெளியே சென்ற அவன் கொஞ்சம் சோள தானியத்தோடு தன் வீட்டுக்கு வருகிறான். அவன் மனைவி அதை அரைத்து மாவாக்கி கஞ்சி சமைக்கிறாள். சமைத்த பின்னர் அதை அருந்தும்பொழுது ஒரு துறவி பசியால் அவன் வீட்டுக்கு வருகிறார். துறவியின் பசியை அறிந்த அவன் தனக்கான உணவின் பங்கை அவருக்கு கொடுக்க, அதைத் துறவி அருந்துகிறார். மீண்டும் அவர் பசியடங்காமல் இருக்க, மனைவி மகன் மற்றும் மருமகள் ஆகியோரும் தங்கள் பங்கை அந்த துறவிக்கு அளிக்க பசியடங்கிய அவர் அந்த இடத்தை விட்டுப் போகிறார். இவர்களின் செயலால் மனம் மகிழ்ந்த தேவதை ஒன்று இனி அவர்கள் எப்போதும் செல்வத்தில் திளைப்பார்கள் என வரம் தந்து விட்டுச் செல்கிறது. அப்பொழுது அங்கே வந்த நரி ஒன்று, சோளம் அரைத்த இடத்தில் படுத்துப் புரள அதன் உடல் பாதி தங்கமாக மாறிவிடுகிறது. எ...

ஒரு வனதேவதையின் உக்கிரம்

Image
ஆதியில் தண் பசுமையும் குளிர் காற்றும் பட்சிகளின் வாழ்வும் பகலவனின் ஒளி புகாத கானகத்தினுள் ஒரு வேம்பினடியில் மடித்து வைத்த பாதங்களோடு அமர்ந்து சாந்தம் கொண்டிருந்தேன். கொடும் கரம் கொண்டு பசுமையழித்து கரும் நிறம் கொண்ட சாலைகள் போட்டு என்னை ஒரு நாற் சுவருக்குள் அடைத்தது ஒரு கூட்டம். தூக்கிய காலும் வெறித்த பார்வையுமாய் மாறிப்போன எனக்கு தினந்தோறும் பூசைகள் பலிகல்லில் வடிக்கப்பட்ட குருதி தெளிக்கப்பட்ட பன்னீர், வாடிய மாலைகள் என எதுவும் பிரியமில்லை. அறிந்துகொள்ளுங்கள் மக்களே நான் இன்னும் சாந்தம் கொள்ளவில்லை எனக்கு ஒரு கானகம் வேண்டும். படங்கள் : இணையத்திலிருந்து.

கஞ்சி குடிப்பதற்கு இலார் - வீணாகும் உணவு தானியங்கள்

Image
இரவு மீதமான இரண்டு இட்லிகளை, காலையில் வந்து பசிக்கு கேட்கும் பிச்சைக்காரனுக்குப் போடாமல், சாக்கடையிலோ அல்லது குப்பையிலோ கொண்டுபோய்க் கொட்டும் செயலுக்கு நிகரானது வீணாகும் உணவு தானியங்களை வறுமையால் வாடுவோருக்கு அளிக்காமல் வீணாக்குவது. சரி அந்த தானியங்களை என்ன அவர்கள் காசிலா வாங்கினார்கள். ஒரு லிட்டர் பெட்ரோல் அடித்தால் வரி, தலை வலிக்கு மாத்திரை வாங்கினால் வரி, சோப்பு வாங்கினால் வரி என எல்லாவற்றிலும் வரியை வாங்குகிறார்கள். அப்புறம் அதுவும் பத்தவில்லை என்று, எங்கள் மக்களைக் காண்பித்து 'எங்களுக்கு கடன் கொடுங்கள்' என்று உலக வங்கிகளிடமும் வாங்கி விடுகிறார்கள். ஆக இந்த பணத்தை வைத்து அவர்கள் எங்கள் விவாசாயிகளிடம் தானியங்களை பெரிய கொள்முதல் பண்ணி வாங்கி விடுகிறார்கள். (இதில் எத்தனை பேர் ஊழல் செய்கிறார்களோ). வாங்கிய தானியங்களை வைத்து பாதுகாக்க போதுமான கிடங்குகள் இல்லை என்று சொல்லுகிறார்கள். ஒரு அமைச்சர் வருகிறார் என்றால் ஒரு வாரத்தில் இடம் பிடித்து, பெரும் மேடை அமைத்து, புதிய சாலை போட்டு, தோரணம் கட்டி அவரை வரவேற்க முடிகிற இவர்களால் ஒரு கிடங்கை அமைக்க முடியவில்லை என்பது எப்படி இருக்கிறது?...

வால்காவிலிருந்து கங்கை வரை

Image
ராகுல சாங்கிருத்தியாயன் அவர்கள் எழுதி, அதைத் தமிழில் கண. முத்தையா அவர்கள் மொழிபெயர்த்த 'வால்காவிலிருந்து கங்கை வரை' புத்தகத்தின் நான் படித்த பதிப்பு இருபத்தி எட்டாம் பதிப்பு. மனித வரலாற்றை சிறு சிறு கதைகள் மூலம் அற்புதமாக விவரிக்கும் நூல். கி.மு. வில் ஆரம்பித்து இந்திய சுதந்திரப் போராட்ட காலம் வரை நம்மைக் கைபிடித்து அழைத்துச் செல்கிறது இந்தப் புத்தகம். அதிலும் எனக்கு ஒரு மிகப் பெரிய ஆச்சரியம், ஆதி காலத்தில் மனிதக் குழுவுக்கு தலைவியாக பெண்தான் இருந்திருக்கிறாள் என்பது. தாயின் வழிகாட்டலில்தான் ஒரு குழுவே பினனால் நடந்து போயிருக்கிறது. அப்படிப்பட்ட பெண்களின் நிலைமை ஒடுக்கப்பட்டு, கணவன் இறந்தால் உடன்கட்டை ஏறும் பிற்காலப் பழக்கமும் வந்து போகிறது நாவலில். கல்லால் செய்யப்பட்ட ஆயுதங்கள் மறைந்து, இரும்பாலும் செம்பாலும் செய்யப்பட்ட கருவிகள், புதிய வகைத் துணிகள் எனப் பல பொருட்கள் தோன்றிய கால கட்டங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறது புத்தகம். எந்தச் சமரசமும் செய்து கொள்ளாமல் எல்லாவற்றையும் அலசிப் பார்த்துள்ளார் ராகுல்ஜி. நமது வேதங்கள், உணவுப் பழக்க வழக்கம் (முக்கியமாக மாட்டு இறைச்சி), ஆதி கால...