Posts

நிர்மால்யம் - எம்.டி.வாசுதேவன் நாயர்

Image
மலையாளத்தில் வெளிவந்த படம் நிர்மால்யம் (1973).  இந்த படத்தை எழுதி, இயக்கியவர் எம்.டி.வாசுதேவன் நாயர். அவர் முதன்முதலாக இயக்கிய படமும் கூட. அப்படத்தின் திரைக்கதையை தமிழில் மீரா கதிரவன் மொழி பெயர்த்துள்ளார்.  அந்தக் காலத்தில் ஒரு வெளிச்சப்பாட்டின் வறுமையை, இயலாமையை நம்மை உணர வைக்கும் கதை நிர்மால்யம். ஒரு கையில் சிலம்பும், மறுகையில் பள்ளிவாளும், இடுப்பில் சலங்கைகளும் கட்டி ஆடும் வெளிச்சப்பாட்டை    தமிழில் அருள் வாக்கு சொல்பவர் என்று கூறலாம். நெற்றியில் பள்ளி வாளால் வெட்டிக் கொண்டு ஆவேசம் கொண்டு ஆடுவார்கள்.  தனது தந்தையான பெரிய வெளிச்சப்பாடு ஆடிய காலங்களில் குடும்பத்துக்கு வருமானம் குறைவில்லாமல் இருந்திருக்கிறது. கோவிலில் தொடர்ந்து பூஜைகளும் நடக்கும். எனவே கொஞ்சம் வசதியாகவே இருந்திருக்கிறார்கள் . கோவில் நிர்வாகிகளுக்கு கோவிலைப் பராமரிக்க மனதில்லாமல், பூஜை குறைய வருமானம் குறைந்து வறுமை வாட்டுகிறது. வெளிச்சப்பாடுக்கு அப்பு என்ற மகனும், அம்மிணி என்ற மகளும், இரண்டு சிறிய பெண் குழந்தைகள் என நான்கு பிள்ளைகள். மனைவி பெயர் நாராயண...

பாரீஸூக்குப் போ - ஜெயகாந்தன்

Image
ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்வதற்கான தனி மனித சுதந்திரம், தன் சுயத்தை வெளிக்கொணர்தல் என ஐரோப்பிய சித்தாந்தத்தில் நம்பிக்கையும் கொண்டு அங்கேயே வளர்ந்த மகன் , இந்தியா வந்து தனது தந்தையிடம் சில காலம் தங்கி இருக்கும் நாட்களை அடி நாதமாக கொண்டது ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய பாரீசுக்குப் போ நாவல்.  சாரங்கன் தனது தந்தை சேஷையாவின் தொழில் நண்பருடன் சிறு வயதிலேயே இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். அங்கேயே வளரும் அவனுக்கு வயலின் இசையில் நாட்டம் ஏற்பட அதைக் கற்றுக்கொள்கிறான். இங்கிலாந்துக்கு அவனை அழைத்துச் சென்றவர் அவனுக்கு கொஞ்சம் பணத்தை வங்கியில் போட்டுவிட்டு இயற்கை எய்துகிறார். பின்னர் பாரிஸுக்கு வரும் சாரங்கன் தனது பாதை இசையே எனக் கண்டு கொண்டு அதிலேயே முழு மூச்சாக இருக்கிறான். அவனுக்கு குடியும், புகை பிடித்தல் பழக்கமும் ஏற்படுகிறது. ஒரு வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்து விவாகரத்தாகி தனியே வசிக்கிறான். இருந்த பணம் அனைத்தும் செலவாகிவிட, அன்றாடச் செலவுக்கு அவனது வயலின் துணை செய்கிறது. நாற்பது வயதான சாரங்கன் தனது குடும்பத்தைச் சந்திக்க இந்தியா வரு...

தாரா - ம.நவீன்

Image
புத்த மதத்தில் இரக்கமும், கருணையும் கொண்ட பெண் தெய்வம் தாரா. முக்கியமாக நேபாளில் தாரா தெய்வம் ஓவியங்கள் மற்றும் சிலைகளில் வடிக்கப்படுகிறது. பல நிறங்களில் தாரா தெய்வம் வரையப்பட்டாலும், பச்சை நிறமும் கையில் நீலத் தாமரையும் கொண்ட தாராவே முதன்மையானவள்.  ஷரியா நிருத்ய என்னும் நடனம் பரதம் போன்ற ஒன்று. நேபாளில் இக்கலை கற்றுக் கொடுக்கப்படுகிறது.  இக்கலையில் பிரகாசிக்க தாராவின் அருள் வேண்டும் என்று நம்பப்படுகிறது.  தாராவைப் பற்றியும்,  ஷரியா நிருத்ய நடனம் பற்றியும் மேலும் தெரிந்துகொள்ள வல்லினம் தளத்தில் கோகிலவாணி எழுதிய பச்சை நாயகி  , கடவுளும் கலையும் கட்டுரைகளைப் படிக்கலாம்.     தமிழ், நேபாளி என இரண்டு சமூகங்களுக்கு இடையே நடக்கும் பூசல் எவ்வாறு மற்றவர்களைப் பாதிக்கிறது எனச் சொல்லும் கதை தாரா. மலேசியாவில் இரண்டு சமூகமும் தன் வாழ்க்கையை அந்நிலத்தில் வாழ, படும் அவலங்களை பேசுகிறது இந்நாவல். முதலாளிகள் லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்குபவர்கள். உள்ளூர் தொழிலாளிகள் சம்பளம் கூட கேட்டு பிரச்சினை செய்தால், வெளியூரில் இருந்து குறைந்த சம்...

காட்டில் உரிமை - மகாசுவேதா தேவி

Image
நாடு, ஊர் என்ற பிரிவினை இல்லா காலத்தில் ஒரு பழங்குடி பரந்து விரிந்த காட்டில் ஒரு முளைக் குச்சியை அடித்து, தனது எல்லையை நிறுவி அங்கே தனது குடும்பத்தை நடத்துகிறான். பின்னர் அவன் குலம் பெருக அவ்விடம் ஊராக, கிராமமாக பிரபலம் அடைகிறது. அதன் பின்னர் அரசாங்கமும், பணக்கார மனிதர்களும், வட்டிக்கு விடுபவர்களும் அவர்களின் நிலத்தை அபகரிக்கிறார்கள். தன் நிலமும், அதில் செய்த விவசாயம் மட்டுமே அறிந்த அந்தப் பழங்குடிகள் பின் னர்  என்ன செய்வார்கள்?.  தங்கள் சுயத்தை மீட்க அதிகாரத்தின் மேல் போருக்குச் சென்ற பழங்குடிகள் பற்றிய உண்மைக் கதை காட்டில் உரிமை. நம் நாட்டை பிரிட்டிஷ் மன்னர்கள் ஆண்ட 18ம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் நிகழ்ந்தது.  முண்டா பழங்குடிகளிடம் இருந்து நிலத்தை அபகரித்துக் கொள்கிறார்கள் ஜமீன்தார்கள், வட்டிக்கு பணம் குடுக்கும் லேவாதேவி ஆட்கள், மற்றும் ஆங்கிலேயர். ஆங்கிலம் தெரியாத முண்டாக்கள் நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்தாலும் வெல்ல முடிவதில்லை. மேலும் வழக்கு தொடுத்த காரணத்துக்காக மேலும் மேலும்  இன்னல்களையே சந...

நீலகண்டப் பறவையைத் தேடி - அதீன் பந்த்யோபாத்யாய - தமிழாக்கம்: சு. கிருஷ்ணமூர்த்தி

Image
நீலகண்டப் பறவையைத் தேடி - ஒரே பாத்திரத்தையோ அல்லது அப்பாத்திரம் சம்பந்தப்பட்ட சம்பவங்களையோ மட்டும் வைத்துச் சொல்லப்படும் கதையல்ல. அது ஒரு பல்கோண ஆராய்ச்சியின் விளைவு. ரொமான்டிக் உணர்ச்சிப் பெருக்கு. குடும்பம் சீர்குலையும் பரிதாபம், பசி, பசிக்கு எதிரான போராட்டம், மதவெறி, மனித மதிப்பீடுகள் இவை எல்லாவற்றையும் காண்கிறோம்.  பத்தாண்டு கால உழைப்பில் உருவான இந்நாவலின் முன்னுரையில் மேற்கண்ட குறிப்பு உள்ளது.  வங்காளத்தில் உள்ள ஒரு கிராமத்தில், சுதந்திரப் போராட்ட காலத்தில் நடக்கும் கதை நீலகண்டப் பறவையைத் தேடி. அவ்வூரின் இயற்கை, ஆறுகள், ஏரிகள், மக்கள் என விவரித்துச் செல்கிறது நாவல். காதல், காமம், பசி, அன்பு, துரோகம் என அனைத்து உணர்வுகளையும் தொட்டுச் செல்லும் நாவல் இது.  கிராமத்தில் பெரிய மனிதரான மகேந்திர நாத்துக்கு மூன்று ஆண் பிள்ளைகள். செல்வாக்கான குடும்பம் கூட, அவர்களை ஊர் மக்கள் டாகுர் என அழைக்கிறார்கள். மூத்த பிள்ளையான மணீந்திரநாத் ஆங்கிலேயப் பெண்ணை காதலிக்கிறார். காதலை தந்தை எதிர்க்க, வேறு ஒரு பெண்ணுடன் அவருக்கு திருமணம் நடைபெறுகிறது. காதல் கைகூடாத ஏக்கத்தால் அவர் மனந...

அர்ச்சுனன் தபசு - மாமல்லபுரத்தின் இமயச் சிற்பம் - சா. பாலுசாமி

Image
அர்ச்சுனன் தபசு எனப்படும் சிற்பத்தொகை மாமல்லபுரத்தில் காணப்படுகிறது. இதனை பகீரதன் தவம் என ஆய்வாளர்கள் சிலர் கூறியுள்ள கருத்துகளை மறு ஆய்வு செய்து இந்நூலை சா.பாலுசாமி அவர்கள் எழுதியுள்ளார்.  கடினமான பாறையில் செதுக்கப்பட்ட அர்ச்சுனன் தபசு சிற்பத் தொகையை மகாபாரத கதைகளில் சொல்லப்பட்டது போல அமைந்துள்ளது, அதில் உள்ள மிருகங்கள், பறவைகள், மரங்கள் என யாவும் இமய மலைத் தொடர்களில் உள்ளவையே என்றும் நிறுவுகிறார் பாலுசாமி. மேலும் அவர் இமய பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்து, பல்லாண்டுகள் முயற்சிக்கு பின்னரே இந்நூல் வெளிவந்துள்ளது. கின்னர, கிம்புருடர்கள், நாக இணையர், கங்கையில் குளிப்பவர்கள், முனிவர்கள் என ஒவ்வொரு சிற்பம் பற்றியும் விளக்குகிறார். இது பகீரதன் தவம் அல்ல அவர் மறுக்க ஒரு பெரிய காரணத்தைச் சுட்டுகிறார். அதாவது, சிற்பத்தில் காட்டுவது கங்கை நதி என்பது எல்லோரும் ஒப்புக்கொள்வது. பகீரதன் தவம் செய்ததே கங்கை நதி பூமியில் இறங்க வேண்டும் என்பதற்காக, ஆனால் அவன் தவம் செய்யும்போதே கங்கை நதி பாய்ந்து கொண்டுள்ளது. மற்ற காரணங்கள் நிறைய இருந்தாலும், இது முதல் தவறு ...

பருவம் - எஸ்.எல். பைரப்பா

Image
எஸ்.எல். பைரப்பா கன்னடத்தில் எழுதிய நாவலை பாவண்ணன் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். நாவலின் ஆசிரியர் பைரப்பா அவர்கள், குரு தேசம், விராடம், இமயம் மற்றும் பாரதப் போர் நடந்ததாகச் சொல்லப்படும் இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்தே இந்நாவலை எழுதியுள்ளார் அவர். வியாசரின் மகாபாரதம், பல அறிஞர்களின் நூல்கள் என ஆய்வு செய்து பல்லாண்டுகள் உழைத்தே பருவம் நாவலாக வெளிவந்துள்ளது என முன்னுரையில் குறிப்பிடுகிறார் பைரப்பா. ஒவ்வொருவரின் நினைவுகள் வழியாகவே நாவலைக் கொண்டு செல்கிறார் பைரப்பா. போர் தொடங்கும்போது ஆரம்பிக்கும் இந்நாவல், அந்த நினைவுகள் மூலம் பழைய கதைகள் கூறப்படுகிறது. தெரிந்த பாரதம், கதை மாந்தர்கள் என ஏற்கனவே நாம் அறிந்த கதைதான். ஆனால் அதை இந்நாவலில் சொன்ன முறை மிகவும் வித்தியாசமானது.  மகாபாரதத்தில் பீஷ்மர், பீமன், அர்ஜுனன், கர்ணன் போன்ற பெரிய வீரர்கள் எதையும் செய்து முடிப்பவர்களாக, கிருஷ்ணன் தெய்வத்துக்கு நிகராக வைத்து போற்றப்படுவார்கள். ஆனால் பருவத்தில் அவர்களும் மனிதர்களாகவே காட்டப்படுகிறார்கள். சாதாரண மனிதனுக்கு என்னென்ன பிரச்சினைகள் உண்டோ அத்தனையும் அவர்களு...