Posts

சித்திரை மழையில்

Image
வழக்கமாக வைகாசி பாதிக்கு மேல்தான் மழை பெய்ய ஆரம்பிக்கும். இந்த வருடம் சித்திரை மாதத்திலேயே பெய்ய தொடங்கிவிட்டது. நான்கு நாட்களாக மழையில் ஊரே பசுமை போர்த்தியது போல இருக்கிறது. வாடிகிடந்த செடி கொடிகள் எல்லாம் மழையில் தளிரத் தொடங்கியிருக்கிறது. மழையால் வெயில் ஓடிபோய் ஒளிந்து கொண்டது போல, நிலம் சில்லென்று இருக்கிறது.  வண்ணநிலவன் நாவலில் இப்படிச் சொல்கிறார்; "மழையை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது எல்லோருடைய மனமும் கடவுள் தன்மையை அடைந்து விடுகிறது. யாரும் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள் போல தோன்றுவார்கள் மழையின்போது" -- ஆம் மழை கடவுள், மழையை நேரில் பார்க்கும்போது சில நேரங்களில் நாமும் கடவுள் தன்மை பெற்று விடலாம். மழை பெய்து ஓய்ந்த நேரம் எடுத்த படங்கள் இவை;   

மியாவ் மியாவ்

Image
எங்கிருந்தோ வந்த அந்த வெண் மியாவைப் பார்த்ததும் பையனுக்கு கொண்டாட்டம் மியாவைப் பார்த்ததும் அவனுக்கு சோறு உள்ளே சென்றது மியாவுக்கும் போடச் சொல்ல அதுவும் கொஞ்சம் பசியாறியது பின்னர் அடிக்கடி வந்து போனது இன்னும் கொஞ்ச நாள் கழித்து சின்ன மியாவுடன் வந்து வீட்டைச் சுற்றியது காருக்கடியில், மாடிப்படியில் செடிகளுக்கு அடியில் எனச் சுற்றிக்கொண்டே இருக்கிறது சின்ன மியாவ். அம்மா மியாவ் பார்த்தும் பார்க்காமலும் இருக்கிறது இப்போதெல்லாம் அவனுக்கு சோறு ஊட்டினால் மியாவுக்கும் வைக்கச் சொல்கிறான் நமக்கு பால் விலை எப்போதாவது உறுத்த அவனுக்கோ எப்போதும் மியாவின் பசியே தெரிகிறது. படம்: இணையத்தில் இருந்து : நன்றி

அது அப்படித்தான்

வெளியே பனி கொட்டிக் கொண்டிருந்தது. வெள்ளை வெளேர் என்ற சாரல். ஊரில் காணக் கிடைக்காத பனிமழை. இந்த பிரிட்டிஷ் நாட்டுக்கு வந்து நான்கைந்து மாதங்கள் ஆகி விட்டன. வாரம் முழுவதும் வேலையும், வெள்ளிக்கிழமை அன்று வெளியே செல்வதும்  கூட தங்கி இருப்பவர்களின் வழக்கம். நான் அங்கே போனதும், அவர்களுடன் செல்ல நானும் பழகிவிட்டேன். கண்டிப்பாக வெள்ளிக்கிழமை அன்று செல்வது 'பப்'(pub) ஆகத்தான் இருக்கும். முதல் நாள் சென்றபோது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. வந்தவர்களின் செல்ல நாய்களும், ஒரு சிலர் குழந்தைகளுடனும், குறை ஆடை அழகிகளும், போதை சிரிப்புகளும், இசையும், சிறு சிறு விளையாட்டுகளும் என தனி உலகமாக இருந்தது. சும்மா நின்று வேடிக்கை பார்த்தாலே நேரத்தை முழுங்கிவிடும். அடுத்த நாள் விடுமுறை என்பதால், பின்னிரவு நேரம் அறைக்கு திரும்புவதும் அடுத்த நாள் காலை பத்து மணிக்கு மேல் விழிப்பதும் பழகிப் போனது. அந்த வார வெள்ளியும் அப்படித்தான் நேரமாகவே கிளம்பி விட்டோம். ஆளுக்கொரு பியருடன் நின்றும், நடந்தும், அமர்ந்தும் பேசிக்கொண்டே அருந்தினோம். ஒரு கோப்பையை குடித்து முடிக்க ஒரு மணி நேரத்துக்கும் ம...

எனது டைரியிலிருந்து - 5

எட்டுக்காலியும் நானும் எட்டுக்காலியும் நானும் ஒண்ணு இருவரும் பிழைப்பது வாய் வித்தையால். எட்டுக்காலிக்கு எச்சில் எனக்குப் பொய் இருவரும் வலை பின்னுகிறோம் அது எச்சிலைக்கூட்டி நான் உண்மையைக் குறைத்து எட்டுக்காலி வலை ஜீவித சந்தர்ப்பம் எனது வலை சந்தர்ப்ப ஜீவிதம் எட்டுக்காலிக்குத் தெரியும் எச்சிலின் நீளமும் ஆயுளும் எனக்குத் தெரியும் பொய்யின் தடுமாற்றமும் அற்பமும். வாய் வித்தைக்காரர்கள் இருவரும் எனினும் எட்டுக்காலி என்னைவிட பாக்கியசாலி... சொந்த வலையில் ஒருபோதும் சிக்குவதில்லை அது. -- சுகுமாரன் (ஆனந்த விகடன்) குற்ற மனசு ஆறாயிரத்துக்கு விற்றுவிட்ட பிறகும் ராவோடு ராவாக புதிய எஜமானனின் தொழுவத்துக் கயிற்றை அறுத்துக்கொண்டு பத்து கிலோ மீட்டர் பயணம் செய்து மூச்சிரைத்தபடி வீட்டு வாசலில் வந்து நிற்கிற வெள்ளைப் பசுவைப் பார்க்கும்போது உறுத்தத்தான் செய்கிறது தனிக்குடித்தனம் வந்தவனுக்கு. --- ஜெ. முருகன் (ஆனந்த விகடன்) திருத்தப்பட்ட வருத்தம் இறந்தவன் இறுதிப் பயணத்தில் எத்தனை பேர் வருகிறார்கள் என்று ஒருமுறை கண்களைத் திறந்து பார்த்தான் வாழ்ந்ததற்கு ...

வலி

காலை நேரம் பதினொரு மணி இருக்கும். கொஞ்சம் வெளி வேலையாக, வெளியே சென்றுவிட்டு தகிக்கும் வெய்யிலில் வண்டியில் வந்து கொண்டிருந்தேன். ஒரு சிறுபையன் வழியில் லிப்ட் கேட்டான். அவனுக்கு வயது பதினைந்துக்குள் இருக்கும். சட்டையும், அங்கங்கே கருப்பு மையுடன் கூடிய கால்சட்டையும் அணிந்திருந்தான். வண்டியை நிறுத்தி "எது வரைக்கும்?" என்றேன். "அம்பேத்கார் நகர் வரைக்கும்ணா" என்றான். "சரி ஏறு" "போலாங் ணா" என்றான். "ஸ்கூலுக்குப் போறியா" "இல்லீன்னா" "அப்புறம் இப்போ எங்க போயிட்டு இருக்க" "வீட்டுக்கு ணா... அம்மா எறந்திடுச்சு",  எனக்கு பக்கென்றது. "எப்படி, ஒடம்பு சரியில்லாம இருந்தாங்களா" "நல்லாதான்ணா இருந்தாங்க... என்னாச்சுன்னு தெரியல" "இப்போ எங்க போயிட்டு வர்றே" "வேலைக்கு ணா" "என்ன வேலை" "லேத் ணா" "நீ ஒரே பையனா" "இல்லன்னா.. தங்கச்சி ஒண்ணு இருக்குது" "வீட்ல வேற யாரு இருக்கா..." "பாட்டி இருக்குது" ...

உண்மை கலந்த நாட்குறிப்புகள் - அ. முத்துலிங்கம்

Image
வாழ்க்கை எங்கே ஆரம்பித்து எப்படி முடியும் என்பதை யார் அறிவார். ஆனாலும், ஒவ்வொரு கணத்தையும் நேசித்து வாழ துறவிகளால் மட்டுமே முடிகிறது. எழுத்தாளர் அ.முத்துலிங்கம் கூட அப்படிதான் இந்த நாவலை எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். ஒவ்வொரு கணத்தையும் இந்த மனிதர் என்னமாய் வாழ்ந்து பார்த்து, அதை நினைவில் வைத்துக்கொண்டு எவ்வளவு அற்புதமாய் எழுதியிருக்கிறார். அவர் இந்த நாவலைப் புனைவு என்று சொன்னாலும், ஒவ்வொரு அத்தியாயத்திலும், இது புனைவு இல்லை, நடந்தது என்றே நினைக்க வைக்கிறது அவரின் எழுத்து. எத்தனை நாடுகள், எத்தனை வகைப்பட்ட மனிதர்கள், அவர்களின் பழக்கங்கள் என உலகத்தை சுற்றிக்காட்டுகிறது புத்தகம். அவரே சொல்வது போல, நாவலை எங்கே இருந்து வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். அவர் சென்ற ஊருக்கெல்லாம் நம்மையும் கூடவே கூட்டிக்கொண்டு போகிறார். அவரது தளத்தில் இருக்கிற இந்தப் பேட்டி முழுவதும் இந்த நாவலைப் பற்றியே இருக்கிறது. அ. முத்துலிங்கம் - நேர்காணல் அந்த நேர்காணலில் ஓரிடத்தில் இப்படிச் சொல்கிறார்; "பல சம்பவங்கள் என் மன அடுக்கின் அடியில் போய் கிடக்கும். அந்தச் சம்பவம் நடந்தபோது அது பெரிதா...

சினிமா: காந்தி(Gandhi)

Image
என் சிறுவயதில், வெள்ளிக்கிழமை காலை வேளைகளில் ரேடியோவில் 'சத்திய சோதனை செய்தவரே, ஒரு சரித்திர சாதனை புரிந்தவரே' என்ற பாடலுடன், நம் தேசத் தந்தை மகாத்மாவின் சத்திய சோதனையைப் படிப்பார்கள். அதற்குப் பின்னர், ஒரு போட்டியில் வெற்றி பெற்றதற்காக 'சத்திய சோதனை' புத்தகத்தை எனக்குப் பரிசாகத் தந்தார்கள். மகாத்மாவின் சிறுவயதிலிருந்து, அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பி விடுதலைப் போரில் பங்கேற்றது வரை அதில் எழுதியிருப்பார். இப்படி அங்குமிங்குமாக, மகாத்மாவைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கிறேன். அது மட்டுமில்லாமல், எங்கள் அப்பா ஒரு கைத்தறி நெசவாளர் என்பதால் காந்தியின் மீது சிறுவயதில் இருந்தே ஒரு பற்று இருந்தது. அன்று எங்கள் ஊருக்கு யாராவது  வந்தால், கையால் தயாரித்த நூல் மாலையைத்தான் போடுவார்கள். அத்தனை பேர் வீட்டிலும் கைத்தறி சத்தம் கேட்ட ஊரில், இன்று ஓரிருவரைத் தவிர வேறு யாரும் நெய்வதில்லை. அது கிடக்கட்டும். கொஞ்ச நாட்களுக்கு முன்னர், விஜய் டிவியின் 'நீயா நானா' நிகழ்ச்சியில், கோபிநாத் 'எத்தனை பேர் காந்தி படத்தைப் பார்த்திருக்கிறீர்கள்?...