Posts

கடல் - ஜெயமோகன்

Image
அன்பான இயேசுவின் பாதையில் சாத்தான்களின் வருகைகளை நாவல் வடிவில் சொல்லப்பட்டது கடல். இரண்டு விதமான வாய்ப்புகள் நமக்கு இருக்கின்றன. தப்பான செயல்கள் பாவம் என்றாலும் அவற்றை நம் சுயநலத்துக்காக செய்து கொண்டு, அதில் கிடைக்கும் புகழ், மகிழ்ச்சி மற்றும்  செல்வச் செழிப்புடன் வாழ்வது. இன்னொரு பாதை முட்களும் துயரங்களும் நிரம்பியது. செல்வத்தையும் புகழையும் ஒதுக்கிவிட்டு அன்புடனும் , எந்நிலையிலும் உண்மையுடன் இருப்பது. இது கடினமான பாதை என்றாலும் நீண்ட காலத்தில் மகிழ்ச்சியும், நாம் பாவங்கள் செய்யவில்லை என்ற நிம்மதியும் கிடைக்கும். இந்நாவல் மூன்று பாத்திரங்களை மையமாகக் கொண்டது.  சாம் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் சாம். தங்கத் தொட்டில் கூட உண்டு. அவர்களின் வீட்டில் வேலை செய்த வேலைக்காரி ஒருநாள் தன்னுடைய குழந்தையை அந்தத் தொட்டிலில் படுக்க வைக்கிறாள். அதனைக் கண்ட சாமின் தந்தை அந்த வேலைக்காரியை அடித்தும், அந்தக் குழந்தையை வெய்யிலில் படுக்க வைத்தும் தண்டனை கொடுக்கிறார். பாதிரியார் உட்பட யார் சொல்லியும் அவரின் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. மறுநாள் அந்தக்...

சாய்வு நாற்காலி - தோப்பில் முஹம்மது மீரான்

Image
கடற்கரையோர கிராமம் தென்பத்தன். அங்கே உள்ள 'சவ்தா மன்சில்' என்னும் மாளிகையில் முஸ்தபாகண்ணு தன்னுடைய பரம்பரை கவுரவம் கொண்ட சாய்வு நாற்காலியில், அந்த வீட்டு வேலைக்காரியும் சிறு பெண்ணுமான ரைஹானத்தை ரசித்து, அவளை கல்யாணம் செய்து கொள்ள கனவு கண்டு அந்த சுகத்தில் சாய்ந்து  கொண்டிருக்கிறார். அப்பொழுது அவரின் மனைவி மரியம் பீவி 'மதரஸா பள்ளி மீது காற்றுக்கு மரம் விழுந்து குழந்தைகள் இறந்து விட்டார்கள்' எனச் சொல்ல, முஸ்தபாவோ  அதனைப் பற்றி எந்தக் கவலையும் படாமல் 'எனக்கு சாப்பிட என்ன இருக்கிறது, டீ குடிக்கும் நேரம் வேற ஆச்சு'  என்கிறார்.  சவ்தா மன்சில் இல்லத்தின் காரணவர் முஸ்தபாகண்ணு. அவரின் பாட்டனாரான பவுரீன்பிள்ளை என்பவர் அப்போது மன்னராக மருமக்கள் வழி உரிமையில் இருந்த மார்த்தாண்ட வர்மாவுக்கு அணுக்கமாக இருந்தவர். மார்த்தாண்ட வர்மாவின் சிறு வயதில் மக்கள் வழி மரபு உரிமைக்காக போராடும் எட்டு வீட்டு பிள்ளைகள் என்பவர்களால் அவர் துரத்தப்பட, தென்பத்தன் ஊரில் அடைக்கலமாகும் அவரைப் பாதுகாத்து அனுப்பி வைக்கிறார் பவுரீன்பிள்ளை. பின்னர் மார்த்தாண்ட வர்மா முடிசூடிய பின்னர் அவருக்கு வேண்டிய ந...

மிளகு - நாவல் - இரா.முருகன்

Image
போர்ச்சுகல் அரசால் மிளகு ராணி என்று போற்றப்பட்ட அரசி  சென்னபைராதேவி , 54 வருடங்களுக்கும் மேலாக ஆட்சியில் இருந்திருக்கிறார். மிளகுக்கும் நறுமணப் பொருட்களுக்கும் பெயர் பெற்ற கொங்கன் பிரதேசமான கெருசோப்பா, ஹொன்னாவர் பகுதியை ஆண்டவர் ராணி சென்னா. கேரளாவின் கோழிக்கோடு தொடங்கி கோகர்ணம் மற்றும் கோவா வரை கடலை ஒட்டிய மலைப் பிரதேசங்களில் மழை பெய்து வளமான மண்ணில் மிளகு தாராளமாக விளைச்சல் கொடுத்திருக்கிறது. இப்பொழுது அந்த பகுதிகளுக்கு சென்றாலும் பசுமை நிறைந்த மிளகு தோட்டங்கள் காணக் கிடைக்கின்றன. நவீன காலத்தில் மனிதன் அழித்தது போக மீதி இருப்பதை நாம் பார்க்கும்போது , அந்தக் காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்ற எண்ணம் தோன்றும்.  தரமும், மணமும் நிறைந்த மிளகு போன்ற பொருட்களுக்கு வேண்டியே அந்தப் பகுதிகள் மீது தொடர்ந்து மற்ற நாடுகளின் தாக்குதல் இருந்திருக்கிறது. அதைத் தடுக்க விஜயநகரப் பேரரசுடன் இணைந்து ஆட்சி செய்கிறார் சென்னபைராதேவி. சமண மதத்தைத் தாய் மதமாக கொண்டவர் சென்னா. திருமணம் செய்துகொள்ளாத ராணி சென்னா, தன்னுடைய சொந்தத்தில் நேமிநாதன் என்பவனை வளர்ப்பு மகனாக...

வாராணசி - எம்.டி.வாசுதேவன் நாயர்

Image
எப்பொழுதும் சிதை எரிந்து கொண்டிருக்கும் நகரம் வாராணசி. ஆனால் அதன் முகம் அது மட்டும் அல்ல. அமைதியையும், காமத்தையும் இன்னொரு முகமாக கொண்டிருக்கும் நகரம் வாரணாசி. பேராசிரியர் ஸ்ரீனிவாசன் என்பவரின் அழைப்பை ஏற்று வாரணாசி நகருக்கு செல்கிறான் சுதாகரன். சுதாகரன் அங்கே செல்லும் அந்த குறிப்பிட்ட தேதியின் முன்னரே பேராசிரியர் இறந்துவிடுகிறார். அங்கே சில நாட்கள் தங்கி இருக்கும்போது அவனுடைய கடந்த கால வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறான். பெண்களுடன் சுதாகரனுக்கு எளிதில் தொடர்பு ஏற்படுகிறது. ஆனால் அந்த உறவுகளைத் தொடர இவன் விரும்புவதில்லை. எதற்கோ பயந்து தப்பித்துப் போகிறான். அதனை ஒருவாறு அந்தப் பெண்களும் அறிந்திருப்பார்கள் போல. இவன் விட்டுவிட்டு போன பின்னர் அவர்கள் அவனைத் தேடுவதில்லை. தங்களது பயணத்தில் ஒரு சிறு இளைப்பாறல் போல அமைகின்றன அவனுடனான உறவுகள். வயதான காலத்தில், முன்னர் சிலநாட்கள் ஈருடல் ஓருடலாக பழகிய சுமிதாவை கங்கை கரையில் சந்திக்கிறான். அவளோ அவனை யாரோ ஒரு வழிப்போக்கன் என நினைத்து போகிறாள். உண்மையாகவே அவளுக்கு அவனை நினைவில் இல்லை.  ...

கொற்கை - ஜோ டி குருஸ்

Image
2013 ஆம் ஆண்டின் சாகித்ய அகாதெமி விருது பெற்றது கொற்கை நாவல். கடலையும், கடல் சார்ந்து இருப்போரின் வாழ்க்கையையும் பின்னிக்கொண்டு நெய்தது கொற்கை நாவல். 1900 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கும் நாவல் 2010 ஆம் ஆண்டில் முடிகிறது. மற்ற நாவல்கள் போல, கொற்கையில் குறிப்பிட்டுச் சொல்ல முக்கியமான கதாபாத்திரங்கள் இல்லை. ஆனால் நிறைய மாந்தர்கள் உண்டு.  "காலம். இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். பிரிட்டிஷ் இந்திய ஆட்சி, கிறிஸ்தவ சமயத்தின் பிரவேசம், சுதந்திர போராட்டம், சுதந்திர இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்கள், நவீனத்துவத்தின் வருகை ஆகியவை பரதவர் சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றங்களைத் துல்லியமாகவும் கலை அமைதியுடனும் சொல்கிறார் ஜோ டி குருஸ்"  என்று புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிடுகிறார் அரவிந்தன்.  மேலும் " கிறிஸ்தவ சமயத்தின் வரவு, உள்ளூர்ச் சாதிகள் கிறிஸ்தவத்தை எதிர்கொண்ட விதம், சுதந்திரப் போராட்டத்தின் தாக்கம், நவீன வாழ்வும் அரசியலும் உள்ளூர்ச் சமூகங்களைப் பாதிக்கும் விதம் என்று நாவலின் எல்லையைக் குறுக்கும் நெடுக்கு மாக விஸ்தரித்துக் கொண்டு போகிறார் ஜோ ட...

சார்த்தா - எஸ். எல். பைரப்பா

Image
அந்தக் காலத்தில் வணிகம் செய்வதற்காக நாடு விட்டு நாடு குழுவாக பயணம் செய்துள்ளனர். நீண்ட நாள் பயணம் என்பதால், ஒரு குழுவாகவே அனைவரும் இணைந்து சென்றுள்ளனர். இணைந்து செல்வதால் கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். அதிலும் புத்த மதத்தைச் சேர்ந்த வணிகர்களே அதிகம் இருந்துள்ளனர். அப்படி ஒரு குழுவாகச் செல்வதை சார்த்தா என அழைத்துள்ளனர்.  கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இக்கதை நடப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த சார்த்தா என்ற சொல், தமிழில் நமது இலக்கியத்தில் (சிலப்பதிகாரம்) உள்ளது என்கிறார் இந்நாவலை தமிழில் மொழிபெயர்த்த ஜெயா வெங்கட்ராமன். தனது முன்னுரையில் "வணிகர் கூட்டத்தின் தலைவன் சாத்தன், சாத்துவான் என அழைக்கப்பட்டான். வணிகச் சாத்துக்களின் காவல் தெய்வமாகிய அய்யனாருக்கும் சாத்தன் என்ற பெயருண்டு. ஒருவரை ஒருவர் சார்ந்து கூட்டமாகச் செல்வதால் 'சார்தல்' எனும் சொல்லிலிருந்து சாத்து எனும் சொல் வழக்கூன்றியது." என்கிறார் ஜெயா வெங்கட்ராமன். நாகபட்டன் என்கிற பிராமண இளைஞன் தனது தாய் மற்றும் மனைவி சாலினியுடன் வசித்து வருகிறான். அரசன் அமருக மகாராஜாவு...

என் சரித்திரம் - உ.வே.சா

Image
அச்சு பதிப்பு புத்தகங்கள் பதிப்பதற்கு முன்பு , நம்முடைய தமிழ் இலக்கியங்கள், இலக்கண நூல்கள், செய்யுள், உரைகள் போன்றவை ஓலையில் எழுதி பாதுகாக்கப்பட்டன. ஓலைச் சுவடிகளை படியெடுத்தே ஒவ்வொருவரும் படித்திருக்கிறார்கள். தமிழ் அறிஞர்களிடம் இருந்து வாய்மொழிப் பாடமாகவும் ஒவ்வொரு தலைமுறையாக நூல்கள் கற்பிக்கப்பட்டன. ஓலைச் சுவடியில் மெய்யெழுத்து, கால், வல்லினம் போன்றவை இருக்காது. அதனால் இன்னொருவர் படியெடுக்கும் பொழுது இயல்பாகவே பிழைகள் ஏற்பட்டு விடும். அதனால் பல ஆண்டுகள் கழித்து ஒரு செய்யுளானது பல பிழைகளுடன் இருக்கும், அதனை ஒப்பு நோக்க நல்ல மூலம் உள்ள சுவடி வேண்டும்.  தமிழ்த் தாத்தா என்றழைக்கப்படும் உ.வே.சா கும்பகோணம் அருகில் உள்ள உத்தமதானபுரம் என்ற ஊரில் பிறந்தவர். அவரின் தந்தை வேங்கட சுப்பையர் கர்நாடக பாடல்கள் பாடுவதிலும், புராணக் கதைகளைச் சொல்வபராகவும் இருந்துள்ளார். கதை பிரசங்கம் செய்வதே குடும்ப வருமானம். சிறுவயதில் இருந்தே உ.வே.சா, குடும்ப பாரம்பரியம் காரணமாக கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்கிறார். ஆனால், அவருக்கு தமிழ் மீதே ஆர்வம் ஏற்படுகிறது. க...