Posts

எல்லோருக்கும் மழை

Image
எல்லோருக்கும் பெய்கிறது மழை 'காலையில் இருந்து இப்படித்தான் கொட்டிட்டு கெடக்குது ஒரு வேல செய்ய முடியல' 'எப்பதான் நின்னு தொலையுமோ' 'இன்னைக்கு ஒண்ணும் பண்ண முடியாது' 'மழ நின்னாதான் பொழப்பு ஓடும்' என்பவர்களுக்கும் சேர்ந்தே பெய்து கொண்டிருக்கிறது மழை. படம்: இணையத்தில் இருந்து.. நன்றி.

நின்னைச் சரணடைந்தேன்

Image
நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன் பொன்னை உயர்வை புகழை விரும்பிடும் என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று... துன்பமினியில்லை.. சோர்வில்லை.. தோற்பில்லை.. உச்சி தனை முகர்ந்தால் கர்வம் ஓங்கி வளருதடி மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா நின்றன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா போனதெல்லாம் கனவினைப் போல் புதைந்தழிந்தே போனதனால் நானும் ஒரு கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ? காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் கோலமும் பொய்களோ ? - அங்கு குணங்களும் பொய்களோ காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ

புகை புகையாக

தூயோன் புத்தகத்தில், கோபிகிருஷ்ணன்... முயற்சி.. திருவினை பதினேழு ஆண்டுகள் முழு மூச்சாக ஊதித் தள்ளியதில் உனக்கு நுரையீரல்களில் அரிப்பு நோய் கண்டிருக்கிறது என்று வருத்தத்துடன் அவர் சொன்னபோது இவ்வளவு நாள் பட்ட கஷ்டம் வீண்போகவில்லை என்றானதில் ஒரு ஆத்மீக ஆனந்தம். ************************************** திருப்தி புகை புகையாகப் புகைத்ததில் ஒரு நுரையீரலை இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்று அவர் சொன்னபோது ஒரு வேஷ்டி இருக்கும்போது இன்னொன்றுக்கு ஆசைப்படுவது ஆடம்பரம் என்று சொன்ன மகாத்மாவின் நினைவு வந்து ஆனந்திக்கச் செய்தது.

நாலணா

Image
கவிஞரும், பதிவுகள் எழுதி வரும் திரு.மகுடேசுவரன் அவர்கள் தனது வலைத் தளத்தில் விலையின் தாழ்நிலை அலகுகள் என்ற பதிவில் இருபத்தைந்து பைசா நாணயம் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டதைப் பற்றி எழுதியிருக்கிறார். அதைப் படித்ததன் விளைவே இந்தப் பதிவு. "காலணாவுக்கு தேறாதவன்" என்று நீங்கள் யாரோ ஒருவர் சொல்லிக் கேட்டிருக்கலாம். ஆனால், இப்பொழுது அந்தப் பைசாவே வழக்கத்தில் இல்லாமல் ஆகிவிட்டது. கடந்த சில வருடங்களாகவே, எந்தப் பொருளும் இருபத்தைந்து காசுகள் வைத்து விற்கப்படுவதில்லை. சில சமயங்களில் வெற்றிலை, வாழை இலை என சிலப் பொருட்கள் மட்டுமே அந்த விலையில் விற்கப்படுகிறது. தனியாக கேட்டால் 1.50 எனவும், நிறைய வாங்கினால் நூறு வாழை இலைகள் 125 ரூபாய் எனவும் மாறிவிட்டது. சின்ன வயதில் இருபத்தைந்து காசுகள் கொடுத்து வெற்றிலை, பாக்கு என்றும், பால் ஐஸ், சேமியா ஐஸ் என்று வாங்கித் தின்றது நினைவுக்கு வருகிறது. நாலணாவுக்கு கடையில் வெற்றிலை கேட்கும் பாட்டிகளுக்கு இது தெரியுமா? நான் இங்கிலாந்துக்கு சென்றபோது, கண்டு ஆச்சரியப்பட்டது இன்னும் அந்நாட்டில் சில்லறைக் காசுகள் இருப்பதைப் பார்த்து தான். அங்கே, ...

ராமன், லட்சுமணன் மற்றும் அனுமார்

நண்பர்கள் நாங்கள் நால்வர் ஒருநாள் வெளியே சுற்றி வரலாம் என்று கிளம்பினோம். முந்தின இரவில் மழை பெய்து குளிராக இருந்தது சாலை. போகும் வழியில், நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த சின்ன டிபன் கடை முன் வண்டியை நிறுத்தி, சாப்பிட உள்ளே சென்றோம். கடையின் முன் தோசை மாஸ்டர், உள்ளே ஒருவர், கல்லா அருகில் லுங்கி கட்டி முன்டாப் பனியன் அணிந்த ஒருவர் என சிறு கடை. சாப்பிட்டு முடித்து நாங்கள் வெளியே வரவும், ராம லட்சுமண அனுமார் வேஷம் போட்ட மூன்று பேர் கல்லாக் காரனிடம் ஒரு நோட்டை நீட்டிக் கொண்டிருந்தார்கள். ராமருக்கும், லட்சுமணனுக்கும் தலையில் கிரீடம். அனுமாருக்கு பிளாஸ்டிக் வாயும், வாலும். அண்ணன் தம்பிகள் இருவருக்கும் நீலக் கலர் முகம், கை என அப்பி இருந்தனர். அனுமாருக்கு கலர் இல்லை, சரி அவர் மனித இனம்தான் என நினைத்து அப்படியே விட்டிருக்கலாம். மூவருக்கும் காலில் சலங்கைகள். மடி மடியாக வைத்து தைக்கப்பட்ட பச்சை, மஞ்சள், சிவப்பு கலர் துணிகள். துவைத்து நெடு நாட்கள் ஆகியிருக்க வேண்டும். ராமர் கையில் மட்டும் ஜிகினா துணி சுற்றிய வில். "மொதலாளி இல்ல.. கெளம்புங்க.." என்றார் கல்லாக்காரர். "இல்லீங்க.. ஒவ்வொரு ...

சிறு துளிகள் (25/06/2011)

சேனல் 4 இலங்கையில் தமிழர்கள் வதம் செய்யப்பட்ட காட்சிகளை இங்கிலாந்து நாட்டின் சேனல் நான்கு ஒளிபரப்பி இருக்கிறது. எந்த ஊடகங்களும் இதைப் பற்றிய விவவரங்களை வெளியிடவில்லை இந்தியாவில். பத்தோடு சேர்ந்து இதுவும் ஒரு செய்தியாக சில சேனல்களில் படித்தார்கள். இந்த வார விகடனில் வெளியான கட்டுரையில் 'அந்தக் காட்சிகளை இங்கு இருக்கும் ஊடகங்கள் திரும்ப திரும்ப காட்ட, அது என்ன சாமியாரின் படுக்கை அறையா?' என்று இறுதியாக கேட்டிருந்தார் கட்டுரை ஆசிரியர். இதைப் பார்க்கும்பொழுது நமக்கு என்ன தேவை என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக ஊடகங்கள் மாறி வருகின்றன என்பதைத்தான் காட்டுகிறது. பெட்ரோலியப் பொருட்கள் செய்தி ஒன்று: கச்சா எண்ணெய் விலை குறைவால், மும்பை பங்குச் சந்தை ஐநூறு புள்ளிகள் ஒரே நாளில் ஏற்றம். செய்தி இரண்டு: கச்சா எண்ணெய் விலை உயர்வால், தத்தளித்த (!!) எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை ஈடு கட்ட நள்ளிரவு முதல் டீசல் மூன்று ரூபாயும், சிலிண்டர் ஐம்பது ரூபாயும் உயர்ந்தது. இதில் எது உண்மை.. ?? எது நடக்கிறதோ இல்லையோ இன்னும் விலைவாசி ஏறத்தான் போகிறது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் நாம் நம் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக...

எனது டைரியிலிருந்து - 3

தோற்ற மயக்கம் எஸ்.ஆர். இராஜாராம் (ஆனந்த விகடன்) துல்லிய நீர்ப்பரப்பில் துறவிபோல் வந்தமர்ந்து மெல்லிய தன் உடலை மேற்பரப்பில் பிரதியாக்கி தண்ணீரில் தவம் செய்யும்.. பார்ப்பதற்கு பரவசம்தான் மீனுக்குத்தானே தெரியும் கொக்கின் குரூரம். ============================================ துபாய் இ. இசாக் (ஆனந்த விகடன்) கனவுகளில் வந்து கொஞ்சுகிற முகத்தைக் காணப் போகிற மகிழ்ச்சி எனக்குள். ரசித்து ரசித்து வாங்கிய பொம்மைகளோடு காத்திருக்கிறேன் நெடுநேரமாக. வீடு நுழைந்த முகம் கண்டு தொட்டுக் கொஞ்சி மகிழ நெருங்கையில் 'யாரும்மா.. இவங்க?' என்கிறாள் மழலை மொழியில் என் மகள். ============================================ வதை ஜி. விஜயலெட்சுமி (ஆனந்த விகடன்) திருவிழாக் கூட்டத்தில் குழந்தையைத் தொலைத்துவிட்டு தவிக்கையில்.. சின்ன வயதில் வீட்டுத் தொழுவத்தில் தெருநாய் ஈன்ற குட்டிகளை கோணிப்பையில் திணித்து ஊருக்கு வெளியே கள்ளிக்காட்டில் கொண்டுபோய் விட்டதெல்லாம் நினைவுக்கு வருகிறது. ============================================ கவனம் சே. சதாசிவம் (ஆனந்த விகடன்) நகரும் தார்ச்சாலை இருபக்க மரங்கள் பசுமையான வயல்வெளிகள் முப்பரி...