நகரப் பொங்கல்



புதுச் சுண்ணாம்பு
பூசிய மண் சுவர்கள்
சாணம் மெழுகிய தரை
தோரணம் கட்டிய கோவில்கள்
'பூ பறிக்கப்போகிறோம்' எனும் பெண் பிள்ளைகள்
சொந்தபந்தங்கள் கூட்டம்
எனப் பொங்கலை வரவேற்கிறது
கிராமம்.

முந்தின இரவே
போட்ட கோலத்தில்
'Happy Pongal'
எனத் தனிமையில்
வரவேற்கிறது நகரம்
பொங்கலை.


Comments

  1. அடுக்குமாடிக் குடியிருப்பில், கோலம்போடும் அளவுக்கு வாசல்முன்பு வெற்றிடம் இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி யன்றோ, நண்பரே! பெரும்பாலும் sticker கோலங்களைத்தானே பயன்படுத்துகிறார்கள்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவிதை எழுதாத நாள்

சிறு துளிகள் (23/11/2010)

வீட்டுத் தோட்டத்தில்: செவ்வாழை