எப்படி சொல்வது...



எல்லாவற்றையும்
சொல்லி விட முடிகின்றது..

சொந்தங்கள்
ஆசையாக கட்டிய வீடு
பிறந்த மண்
வெளியில் வைத்திருந்த ரோஜா செடி
கருப்பு பூனை குட்டி
சேகரித்த புத்தகங்கள்
குமிழ் போட்ட கதவு

என
எல்லாமே வந்து போகும்
நடுநிசியில்
அயல் நாட்டுக்கு வந்து
அகதியாய்
தவிப்பதை எப்படி சொல்வது ?
"ஏப்பா.. இங்கே வந்தோம்"
என கேட்கும் மகளிடம்.......

(புகைப்படம் என் கிராமத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னால் எடுத்தது)

Comments

  1. கஷ்டமான விஷயம் தான் இளங்கோ..

    ReplyDelete
  2. புலம் பெயர் மக்களின் துயரம் சொல்லில் அடக்க முடியாத ஒன்று...
    நன்றி பிரகாஷ்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவிதை எழுதாத நாள்

சிறு துளிகள் (23/11/2010)

போரும் அமைதியும் (War And Peace) - லியோ டால்ஸ்டாய்