Posts

கொற்கை - ஜோ டி குருஸ்

Image
2013 ஆம் ஆண்டின் சாகித்ய அகாதெமி விருது பெற்றது கொற்கை நாவல். கடலையும், கடல் சார்ந்து இருப்போரின் வாழ்க்கையையும் பின்னிக்கொண்டு நெய்தது கொற்கை நாவல். 1900 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கும் நாவல் 2010 ஆம் ஆண்டில் முடிகிறது. மற்ற நாவல்கள் போல, கொற்கையில் குறிப்பிட்டுச் சொல்ல முக்கியமான கதாபாத்திரங்கள் இல்லை. ஆனால் நிறைய மாந்தர்கள் உண்டு.  "காலம். இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். பிரிட்டிஷ் இந்திய ஆட்சி, கிறிஸ்தவ சமயத்தின் பிரவேசம், சுதந்திர போராட்டம், சுதந்திர இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்கள், நவீனத்துவத்தின் வருகை ஆகியவை பரதவர் சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றங்களைத் துல்லியமாகவும் கலை அமைதியுடனும் சொல்கிறார் ஜோ டி குருஸ்"  என்று புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிடுகிறார் அரவிந்தன்.  மேலும் " கிறிஸ்தவ சமயத்தின் வரவு, உள்ளூர்ச் சாதிகள் கிறிஸ்தவத்தை எதிர்கொண்ட விதம், சுதந்திரப் போராட்டத்தின் தாக்கம், நவீன வாழ்வும் அரசியலும் உள்ளூர்ச் சமூகங்களைப் பாதிக்கும் விதம் என்று நாவலின் எல்லையைக் குறுக்கும் நெடுக்கு மாக விஸ்தரித்துக் கொண்டு போகிறார் ஜோ ட...

சார்த்தா - எஸ். எல். பைரப்பா

Image
அந்தக் காலத்தில் வணிகம் செய்வதற்காக நாடு விட்டு நாடு குழுவாக பயணம் செய்துள்ளனர். நீண்ட நாள் பயணம் என்பதால், ஒரு குழுவாகவே அனைவரும் இணைந்து சென்றுள்ளனர். இணைந்து செல்வதால் கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். அதிலும் புத்த மதத்தைச் சேர்ந்த வணிகர்களே அதிகம் இருந்துள்ளனர். அப்படி ஒரு குழுவாகச் செல்வதை சார்த்தா என அழைத்துள்ளனர்.  கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இக்கதை நடப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த சார்த்தா என்ற சொல், தமிழில் நமது இலக்கியத்தில் (சிலப்பதிகாரம்) உள்ளது என்கிறார் இந்நாவலை தமிழில் மொழிபெயர்த்த ஜெயா வெங்கட்ராமன். தனது முன்னுரையில் "வணிகர் கூட்டத்தின் தலைவன் சாத்தன், சாத்துவான் என அழைக்கப்பட்டான். வணிகச் சாத்துக்களின் காவல் தெய்வமாகிய அய்யனாருக்கும் சாத்தன் என்ற பெயருண்டு. ஒருவரை ஒருவர் சார்ந்து கூட்டமாகச் செல்வதால் 'சார்தல்' எனும் சொல்லிலிருந்து சாத்து எனும் சொல் வழக்கூன்றியது." என்கிறார் ஜெயா வெங்கட்ராமன். நாகபட்டன் என்கிற பிராமண இளைஞன் தனது தாய் மற்றும் மனைவி சாலினியுடன் வசித்து வருகிறான். அரசன் அமருக மகாராஜாவு...

என் சரித்திரம் - உ.வே.சா

Image
அச்சு பதிப்பு புத்தகங்கள் பதிப்பதற்கு முன்பு , நம்முடைய தமிழ் இலக்கியங்கள், இலக்கண நூல்கள், செய்யுள், உரைகள் போன்றவை ஓலையில் எழுதி பாதுகாக்கப்பட்டன. ஓலைச் சுவடிகளை படியெடுத்தே ஒவ்வொருவரும் படித்திருக்கிறார்கள். தமிழ் அறிஞர்களிடம் இருந்து வாய்மொழிப் பாடமாகவும் ஒவ்வொரு தலைமுறையாக நூல்கள் கற்பிக்கப்பட்டன. ஓலைச் சுவடியில் மெய்யெழுத்து, கால், வல்லினம் போன்றவை இருக்காது. அதனால் இன்னொருவர் படியெடுக்கும் பொழுது இயல்பாகவே பிழைகள் ஏற்பட்டு விடும். அதனால் பல ஆண்டுகள் கழித்து ஒரு செய்யுளானது பல பிழைகளுடன் இருக்கும், அதனை ஒப்பு நோக்க நல்ல மூலம் உள்ள சுவடி வேண்டும்.  தமிழ்த் தாத்தா என்றழைக்கப்படும் உ.வே.சா கும்பகோணம் அருகில் உள்ள உத்தமதானபுரம் என்ற ஊரில் பிறந்தவர். அவரின் தந்தை வேங்கட சுப்பையர் கர்நாடக பாடல்கள் பாடுவதிலும், புராணக் கதைகளைச் சொல்வபராகவும் இருந்துள்ளார். கதை பிரசங்கம் செய்வதே குடும்ப வருமானம். சிறுவயதில் இருந்தே உ.வே.சா, குடும்ப பாரம்பரியம் காரணமாக கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்கிறார். ஆனால், அவருக்கு தமிழ் மீதே ஆர்வம் ஏற்படுகிறது. க...

போரும் அமைதியும் (War And Peace) - லியோ டால்ஸ்டாய்

Image
'போரும் அமைதியும்' நாவல் மிகப்பெரிய மூன்று பாகங்களைக் கொண்டது. அனைத்து நிகழ்வுகளையும் நாவல் விரிவாகவே கொண்டு செல்கிறது. நெப்போலியன் ரஷ்யா மீது போர் தொடுத்து, நிறைய இழப்புக்கு பின்னர் போரில் பின்வாங்கிய 1800-ன் ஆண்டுகளை அடிப்படையாக கொண்டு நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றுடன் புனைவையும் கலந்து படைக்கப்பட்ட இந்நாவல் வரலாற்று நாவல் அல்ல என்று டால்ஸ்டாய் அவர்களே குறிப்பிட்டுள்ளார். இந்நாவலை எழுதுவதற்கு உண்டான வரலாற்று  தகவல்களை சேகரிக்க நீண்ட நாட்கள் ஆகியிருக்கிறது அவருக்கு.  ஒரு வருடம் முன்பாகவே இந்நாவலை படிக்க ஆரம்பித்து 100 பக்கங்கள் மேல் போன பின்னரும் குழப்பங்கள் காரணமாக பிடி கிடைக்காமல் அப்படியே வைத்துவிட்டேன். இம்முறை எப்படியேனும் படிக்க எண்ணி வலைத் தளங்களில் தேட, எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் ஒரு பதிவில், 'ரஷ்யப் பெயர்கள் குழப்பமாக இருக்கும். ஒருவருக்கே மூன்று பெயர்கள் இருக்கும். எனவே பெயர்களை கவனித்து வந்தால் கதாபாத்திரங்கள் புரியும்.' என எழுதி இருந்தார். ஒவ்வொரு முறையும் பெயர்கள் வரும்போது தனியாக குறிப்பெடுக்க ஆரம்பித்தேன். நாவலின்...

கோரா - இரவீந்திரநாத் தாகூர்

Image
சிப்பாய் கலகத்தின் போது இறந்த ஐரிஷ் பெற்றோரின் ஆண் குழந்தையை தம்பதிகளான கிருஷ்ணதயாளும், ஆனந்தமாயியும் எடுத்து வளர்க்கிறார்கள். குழந்தை இல்லாத காரணத்தால் அவனை வளர்த்து கோர்மோகன் பாபு என்ற பெயரும் வைக்கிறார்கள். சுருக்கமாக கோரா. பிராமண குடும்பம் என்பதால் முதலில் எந்த ஆச்சாரமும் பார்க்காத கிருஷ்ணதயாள் கோரா வளர வளர எல்லாச் சடங்குகளையும் கடைபிடிக்கிறார். ஆனந்தமாயி அதற்கு எதிராக எல்லாச் சடங்குகளையும் விட்டுவிட்டு, மனிதர்களே முக்கியம் என்று வாழ்ந்து வருகிறார்.  கோராவுக்கு அவர்கள் தன் பெற்றோர் அல்ல என்பது தெரியாது. கோரா நல்ல உயரமும், ஆங்கிலேய நிறமும் கொண்டு விளங்குகிறான். தன் அம்மாவுக்கு நேர் மாறாக அவன் இந்து சமய சடங்குகளை கடை பிடிக்கிறான். மற்றவர்களையும் அவன் தனது கொள்கைகளை விளக்கி ஒப்பு கொள்ள வைக்கிறான். அதற்காக அவன் மற்ற சாதி மக்களை ஒதுக்கி வைப்பதில்லை. அவர்களின் நிலைமை முன்னறேவும் விரும்புகிறான். தன் நாட்டு மக்களை யாரேனும் இழிவு செய்தால் கோரா கோபம் கொள்கிறான். தன் கருத்துகள் பற்றி இதழ்களில் கட்டுரைகளும் எழுதும் கோராவுக்கு நிறைய நண்பர்களும் அவனைப் பின்...

ஒரு குடும்பம் சிதைகிறது - எஸ்.எல். பைரப்பா

Image
தொடர்ந்து வரும் இழப்புகளும், உறவுகளின் பிரச்சினைகளும், சகிக்க முடியா வறுமையுமே வாழ்க்கை என்று ஒரு சிலருக்கு அமையுமென்றால் அப்படிப்பட்ட வாழ்க்கையின் பொருள்தான் என்ன, அவர்களுக்கு மகிழ்ச்சி என்பதே இந்த பூமியில் கிடைக்காத ஒன்றா என்ற கேள்வியில் இந்த நாவல் அமைகிறது. அதன் விடை இந்த நாவலிலும் இல்லை, நாமும் தேடினால் கண்டறிய முடியாத ஒன்று அது.  தாய் கங்கம்மாவுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். பிராமண குடும்பம். அவளின் கணவர் ராமண்ணா ஊரில் கணக்குப்பிள்ளையாக இருந்து இறந்துவிட்டார். கொஞ்ச நிலமும் உண்டு. இரண்டு பிள்ளைகளும் சிறியவர்கள் என்பதால் தற்காலிகமாக அந்த வேலையை இன்னொருவர் பார்த்து வருகிறார். இரண்டு பிள்ளைகளில் மூத்தவர் சென்னிகராயன், இளைய மகன் அப்பண்ணய்யா. இருவருமே வீட்டுக்கு அடங்காத பிள்ளைகள். அதற்கு காரணம் கூட தாய் கங்கம்மா தான். எல்லோரையும் எடுத்தெறிந்து பேசும், யாரையும் மதிக்காத குணம் என அவள் ஒரு தனிப்பிறவி. எப்பொழுதும் கெட்ட வார்த்தைகள் மூலமாகவே பேசுகிறாள். புரோகிதர்கள் மற்றும் ஒருசில பெரிய மனிதர்களுக்கு அவள் பயப்படுகிறாள். ஆனால், அறிவ...

நளபாகம் - தி. ஜானகிராமன்

Image
காமேச்வரன் தன்னுடைய சிறு வயதிலேயே அன்னையை இழந்து, பின்னர் தந்தை கல்யாணம் செய்துகொண்ட சித்தியின் கொடுமையால் வீட்டை விட்டு வெளியேறுகிறான். ரயிலில் அவனை சந்திக்கும் வத்சன் என்பவர் அவனைக் கூட்டிச்செல்கிறார. அவருக்கு சமையல் கலை தெரியும் என்பதால் ஒரு கோவிலில் சமைக்கும் வேலை அவருக்கு. அவருடனேயே தங்கி கொள்ளும்  காமேச்வரன், சமையலைக் கற்றுகொண்டு அவரையே குருவாக எண்ணிக் கொள்கிறான். அவரின் இறப்புக்கு பின்னர் அவனுடைய நினைவுகளில்  அவர் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறார்.  காமேச்வரன் இப்பொழுது காசி, பத்ரிநாத் எனச் செல்லும் யாத்ரிகர்களுக்கு சமை ப்பவனாக தனி ரயிலில் வேலைக்கு இருக்கிறான். அவன் சமையலை அனைவரும் புகழ்கிறார்கள். அப்படி ஒரு பயணத்தில்தான் ரங்கமணி அம்மாள், ஜோதிடர் முத்துசாமி என அவனுக்கு அறிமுகமாகிறார்கள்.  ரங்கமணி அம்மாவுக்கு கணவர் இல்லை. கல்யாணம் ஆன சில வருடங்களிலேயே கணவனை இழக்கிறார். குழந்தை இல்லாததால் தன்னுடைய மாமியார் சுவீகாரம் எடுத்துக் கொள்ள வற்புறுத்துவதால் சொந்தத்தில் துரை என்பவனை மகனாக ஏ...