Posts

காச்சர் கோச்சர் - விவேக் ஷான்பாக்

Image
ஒரே ஒருவரின் மாத சம்பளத்தை மட்டும் நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் போது இருந்த மகிழ்ச்சி, ஒரு தொழில் ஆரம்பித்து பின்னர் செல்வச் செழிப்பில் வாழும்போது அந்த மகிழ்ச்சி கிடைக்காத ஒரு குடும்பத்தை பற்றிய கதை. ஆனால் அவ்வளவு எளிதாக இந்த சிறு நாவலைச் சொல்லமுடியாது. கதையில் வரும் கதை மாந்தர்களும் சாதாரணமாக சித்தரிக்கப்படவில்லை.  அப்பா, அம்மா, மகன், மகள் மற்றும் சித்தப்பா என சிறிய குடும்பம். குடும்பத்தின் மூத்தவரான அப்பாவின் வருமானத்தை நம்பியே எல்லோரும் இருக்கிறார்கள். ஒருநாள் அப்பாவின் வேலை இல்லாமல் போக, சித்தப்பா தொழில் தொடங்கலாம் என்கிறார். அப்பாவின் பணியிலிருந்து வந்த சேமிப்பு பணத்தை வைத்து ஒரு மசாலா கம்பனி ஆரம்பிக்கிறார்கள். அப்பாவும், சித்தப்பாவும் தொழிலில் பங்குதாரர்கள்.  தொழில் நன்றாக செல்ல பணவரவும் வருகிறது. புது வீடு, பொருட்கள் என வேண்டியதை வாங்குகிறார்கள். சித்தப்பா மட்டுமே தொழிலை கவனித்து கொள்கிறார். கதையின் நாயகனான மகனும், பெண் பிள்ளையான மைதிலியும் இப்பொழுது பெரிய பிள்ளைகள். சித்தப்பா இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதைப்பற்றி குடும்பத்தினர் யாரும் அவரைத்...

பட்டாம்பூச்சி - ஹென்றி ஷாரியர் (தமிழில் - ரா.கி.ரங்கராஜன்)

Image
செய்யாத குற்றத்துக்கு தண்டனை பெற்ற கைதி, சிறையில் இருந்து தப்பிக்க போராடுவதே இந்நாவலின் களம். இந்நூல் பாப்பிலான் என்ற பெயரில் பிரெஞ்சில் வெளியாகி, தமிழில் ரா.கி.ரங்கராஜன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த நூலை மானிட சாசனம் என்று சொல்வதற்கு காரணம், எத்தனை துயரங்கள் வந்தாலும், தடைகள் வந்தாலும் மனித மனம் விடுதலை ஒன்றையே தனக்கான பெரும் சொத்தாக நினைப்பதை நாவல் விவரிக்கிறது. அந்தச் சுதந்திரத்துக்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க மனிதர்கள் தயாராகவே இருப்பார்கள்.  'விட்டு விடுதலையாகிப் பறப்பாய் இந்தச் சிட்டுக்குருவி போல ' என்று பாரதி சொன்னதுபோல் இந்நாவலில் வரும் நாயகன் பட்டாம்பூச்சி, விடுதலை ஒன்றையே நோக்கமாக கொண்டிருக்கிறான். செய்யாத குற்றத்துக்கு தான் தண்டனை அனுபவிக்க காரணமாக இருந்த ஜூரிகளை பழிவாங்க வேண்டும் என நினைக்கிறான் பட்டாம்பூச்சி. கடல் தாண்டி தான் சிறைக்கைதியாக இருக்கும் தீவிலிருந்து தப்பிக்க முயல்கிறான். எதற்கும் அவன் பயப்படுவதில்லை. கொஞ்சம் பணமும் மறைத்து வைத்திருப்பதால் அவனுக்கு அது உதவியாக இருக்கிறது. சில நண்பர்களையும் சேர்த்துக் கொள்கிறான்.  ஒரு முறையல்ல, ...

சுதந்திரத்தின் நிறம் - லாரா கோப்பா

Image
காந்தியம் என்பது தன் நலனை விட ஏழைகளின் நலனே முக்கியம் என நினைக்க வைப்பது. அதற்காக எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் பின்வாங்காமல் அறவழியில் போராடும் குணம் கொண்டது. ஒரு செயலில் வெற்றி கிடைத்த பின்னர், ஓய்ந்து விடாமல் அடுத்து என்ன செய்யலாம் என சிந்திக்க வைப்பது.  கிருஷ்ணம்மாள் - ஜெகநாதன் இருவருமே சுதந்திர போராட்ட வீரர்கள். காந்திய வழியில் நடப்பவர்கள்.  கிருஷ்ணம்மாளைத் திருமணம் செய்யும் முன்னர் ஜெகநாதன் அவரிடம் 'எனக்கென எந்த சொத்தும் சேர்க்க மாட்டேன், ஒரு ஊரில் நிலையாக இருக்க முடியாது. சமைக்கத் தேவையான பாத்திரங்கள் கூட மண் பாத்திரங்கள்தான், ஏனெனில் வேறு ஊருக்குச் செல்லும்போது அப்படியே போட்டுவிட்டு போய்விடலாம். சுமைகள் குறையும்.' எனச் சொல்கிறார். சுதந்திரம் பெற பாடுபட்டவர்கள், அதை பெற்ற பின்னர் மகிழ்ச்சி அடைய முடிவதில்லை. ஏனெனில், புதிய அரசானது ஏழைகளுக்கு ஏதாவது செய்யும் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஆமை வேகத்தில் நடக்கும் காரியங்கள் எரிச்சலை வரவைக்கிறது. அப்பொழுது காந்தியர் வினோபா அவர்கள், நிலங்களைத் தானமாக வாங்கி ஏழை மக்களுக்கு வழங்க பூதான இயக்கம் ஒன்...

புத்தம் வீடு : ஹெப்சிபா ஜேசுதாசன்

எங்கள் சொந்த ஊரான நல்லகாளிபாளையத்தில் பனை மரங்கள் உண்டு. தெளுவு என்று எங்கள் ஊரில் சொல்கிற பதநீரும், நுங்கும், அதன் பின்னர் பனம்பழம், கிழங்கு என்றும் பனையோடு வாழ்ந்தவர்கள். பனங்கிழங்கைத் தோண்டி எடுத்த பின்னர் விதையை வெட்டினால் உள்ளே கெட்டியாய் தேங்காய் போல பருப்பு இருக்கும். அதையும் தின்று செரித்த நாள் அன்று. பனையேறிகள் நுங்கு வெட்டும் காலத்தில் அவர்களோடு சென்றால் இளநுங்கை எல்லாம் சீவித் தருவார்கள்.  பனையேறிகள் என்றால் அவ்வளவு ஒன்றும் வசதியானவர்கள் அல்ல அப்பொழுது. கருப்பட்டியும், நுங்கும், பனங்கிழங்கும் என வருடம் முழுவதும் பனை கொடுத்தாலும், அதை விற்று வரும் பணம் ஒரு பனையேறியின் குடும்பத்துக்கு பற்றாது. எப்படியும் நான்கு அல்லது ஐந்து குழந்தைகள் இருப்பார்கள். முதியவர்கள் இருப்பார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையைச் செய்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். இதில் புகைப்பழக்கமும் குடியும் உண்டென்றால் நித்தமும் குடும்பத்தில் சண்டையே.  ஹெப்சிபா அவர்கள் எழுதிய புத்தம் வீடு நாவலில் பனையேறும் மக்களும், சொந்த நிலமிருந்தும் வசதியில்லாத மக்களும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள் . கண்...

தத்வமஸி

Image
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஈஷா யோகா மையத்தின் யோக வகுப்பில் கலந்து கொண்டபோது இரண்டு சமஸ்கிருத பாடல்களைச் சொல்லிக்கொடுத்தனர். அப்பாடல்களின் மூலம் எது எனத் தெரியாமலே அதை மனனம் செய்துகொண்டேன். அந்தப் பாடல்கள்; அசத்தோமா சத் கமய தமசோமா ஜோதிர் கமய ம்ருத்யோர்மா அமிர்தம் கமய ஓம் சாந்தி. சாந்தி. சாந்தி. ஸக நா வவது ஸக நௌ புனக்தூ ஸக வீர்யம் கரவாவஹை தேஜஸ்வினா வதிதமஸ்து மாவித் விஷா வஹை ஓம் சாந்தி. சாந்தி. சாந்தி. மேற்கண்ட இருபாடல்களில் முதல் பாடலுக்கு அர்த்தம் தெரிந்தது. ஆனால் இரண்டாம் பாடலில் என்ன சொல்ல வருகிறார்கள் என்றே புரியவில்லை. ஏதோ ஒரு தமிழ் பக்தி பாட்டில் 'ஸக நா வவது' என்ற வரிகள் வரும். அதைக்கொண்டு இது ஏதோ ஒரு பக்தி பாட்டு என நினைத்து கொண்டேன். ஆனால், இது ஒரு உபநிடத வரி என்று , சுகுமார் அழீகோடு அவர்கள் எழுதிய தத்வமஸி புத்தகத்தின் மூலம் அறிய முடிந்தது. வேதம் என்பது அனைவருக்கும் உரிமையானது. வேதம் மந்திரங்கள் அடங்கியவை என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால், அவற்றையும் தாண்டி அறத்தை பேசும் வேதத்தையும், வேதத்தில் இருந்து முளைத்தாலும் தனிசிறப்பு வாய்ந்த உபனி...

அவன் காட்டை வென்றான் - கேசவ ரெட்டி

Image
'அவன் காட்டை வென்றான்' நாவல் ஒரு கிழவரையும், அவர் வளர்க்கும் பன்றிகளையும், காட்டையும் பற்றிய கதை. அவருக்கு பெயர் எல்லாம் நாவலில் இல்லை. அவருடன் வசிப்பது அவரின் பேரன் மட்டுமே. வேறு யாருமில்லை. காடு எப்பொழுதுமே ஆச்சரியங்களும், அதிசயங்களும் நிரம்பியது. காடுகளை ஒட்டியே வாழ்ந்த நம் முன்னோர்கள் பார்த்த காடுகள் இப்பொழுது இல்லை. காடுகளை நாம் இப்பொழுது மாற்றிவிட்டோம்.  அன்று காலை அவருக்கு முடியாததால், பன்றிகளை மேய்க்க பையனை அனுப்புகிறார். பொழுது சாய்ந்த பின்னரும் பையன் பன்றிகளைத் திருப்பி ஓட்டி வராததால் கிழவர் பயந்து போகிறார். பன்றிகளுக்கு ஏதாவது நடந்திருக்குமோ இல்லை பையன் எங்காவது போயிருப்பானோ என்றெல்லாம் நினைக்கிறார். திடீரென அவருக்கு, ஒரு சினைப்பன்றியை மேய்ச்சலுக்கு அனுப்பியது நினைவுக்கு வருகிறது. ஒருவேளை அந்தப் பன்றிதான் எங்காவது தொலைந்து போய், பையன் தேடிக் கொண்டிருக்கிறானோ என நினைக்கிறார்.  கொஞ்ச நேரம் கழித்து பையன் பன்றிகளோடு திரும்புகிறான். சினைப்பன்றி தொலைந்து போனதால், அதைத் தேடினேன் ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அழுகிறான் பேரன். சரி, நான் ப...

புனலும் மணலும் - ஆ.மாதவன்

Image
ஆற்றுக்கடவில் மணலை வாரித் தொழில் செய்யும் சிலரைப் பற்றியது இந்நாவல். சுழிகள் நிறைந்த ஆறு போலவே, வாழ்க்கையிலும் மேடு பள்ளங்கள். நீர் காணாத ஆறு போல வறுமை தாண்டவமாடும் வாழக்கை. வாரிக்கொடுத்த ஆறு இன்று சாக்கடை செல்லும் கால்வாயாய் பரிதாப தோற்றத்தில்.  அங்குசாமிக்கு சாலைத் தெருவில் மூட்டை சுமக்கும் வேலை. சின்ன வயதிலேயே சாலைத் தெருவில் வேலைக்கு வந்துவிட்டவர். தான் பிறந்த தமிழகத்தை விட்டு, மலையாளக் கரையிலேயே தங்கிவிட்டவர். ஒரு காவலர் வளாகத்தில் குடியிருக்கச் செல்கிறார் அங்குசாமி. அங்கே இருக்கும் தங்கம்மை என்ற பெண்ணுடன் பழக்கமாகி அவளையே கல்யாணம் செய்து கொள்கிறார்.  தங்கம்மைக்கு ஒரு போலீஸ்காரன் ஒருவனுடன் முன்னரே கல்யாணம் ஆகியிருந்தது. அவளுடன் இரண்டு மாதங்கள் மட்டுமே வாழ்ந்த அந்த போலீஸ்காரன் இறந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு குழந்தையும் உண்டாகிவிட்டது. பெண் குழந்தை. பெயர் பங்கி. பற்கள் விகாரமாய், கொஞ்சம் குண்டுக்கட்டான ஒரு மாதிரியான உடம்புடனும், கருமை நிறத்திலும் இருப்பாள் பங்கி. தங்கம்மைக்கு இப்படி ஒரு மகளா என முதல்முறை பார்க்கும்பொழுதே வியக்கிறார் அங்குசாமி. ஏனென்ற...