Posts

வீட்டுத் தோட்டத்தில் மிளகு

Image
கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்னர் எங்கள் வீட்டில் வளர்ந்திருந்த வெற்றிலையைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர், 'மிளகு நல்லா வளரும், நான் கொண்டு வர்றேன்' என்றார். அவரின் சொந்த ஊர் வால்பாறை. சொன்னவாறே நான்கு மிளகு குச்சிகளை ஒடித்துக் கொண்டு வந்தார். அந்த நான்கில் மூன்று குச்சிகள் பட்டுப் போக, ஒன்று மட்டும் எப்படியோ தழைந்து, பக்கத்தில் இருந்த பலாவைப் பற்றிக்கொண்டது. நீண்ட நாட்கள் கழித்து, இப்பொழுது பூத்திருக்கிறது. இதில் மிளகு காய்க்குமா, இல்லையா எனத் தெரியவில்லை. பார்ப்போம்.

நான்கு இட்டலிகள்

உலகத்துக் கவலைகளில் மூழ்கியிருந்தேன் நான். நான்கு இட்டலிகளை வட்டிலில் வைத்து 'தின்று இளைப்பாற்றுங்கள் நன்கு செரிக்கும்' என்கிறாள் அரசி. செரிப்பது மனமா, வயிறா எனக் குழம்புகிற அரசனாய் நான்.

அன்பே கடவுள்

Image
தல்ஸ்தோயின் சிறுகதை. கடவுள் ஒரு தேவதை செய்த தவறால், அத்தேவதைக்குச் சாபம் கொடுத்து பூமிக்கு அனுப்பி விடுகிறார். கூடவே, பூமியில் மனிதர்களுடன் வாழ்ந்து மூன்று கேள்விகளுக்கு விடைகள் கண்டறிந்தால், மீண்டும் தன்னிடம் வந்து சேரலாம் என்கிறார் கடவுள். அந்த மூன்று கேள்விகள்; 1. மனிதனிடம் குடிகொண்டிருப்பது எது? 2. மனிதனுக்குக் கொடுக்கப்படாதது எது? 3. மனிதன் எதனால் வாழ்கின்றான்? தேவதை கண்டுபிடித்த பதில்கள்; 1. அன்பு 2. வரப்போவதை அறியக்கூடிய அறிவு 3. தன்னைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருப்பதால் மனிதன் வாழவில்லை; பிறரிடம் அன்பு செலுத்துவதன் மூலமே அவன் வாழ்கிறான். அன்பே கடவுள். (Leo Tolstoy)

தென்னாப்பிரிக்காவில் காந்தி (ராமச்சந்திர குஹா) - Gandhi Before India

Image
துளியும் வன்முறையை நாடாமல், சமரசம் மூலமாக எவ்வாறு வெற்றியைப் பெறுவது என்பது காந்தி கண்ட வழிமுறை.  காந்தியம் என்பது வெறும் வார்த்தையல்ல. வாழ்க்கை முறை. நன்கு படித்த, அதுவும் நூறாண்டுகளுக்கு முன்னர் லண்டனில் சட்டக்கல்வி பயின்ற காந்தி போன்ற ஒருவர், தன்னுடைய துறையிலேயே மேலே வர முயல்வார். அவரின் காலத்தில் அவர் பெற்ற கல்வி மதிப்புமிக்கது. ஆனால், அவர் அதை உதறித் தள்ளிவிட்டு சத்தியாகிரகத்தை கைக்கொண்டார். அவர் அப்படி மாறுவதற்கு என்னென்னெ காரணங்கள், அவர் சந்தித்த ஆளுமைகள் என இந்தப் புத்தகம் விளக்குகிறது. 'வன்முறையை நான் ஒருபொழுதும் ஆதரிக்க மாட்டேன்.  எதிர்த்தரப்பை கொல்வதன் மூலம் ஒருவன் ஆட்சிக்கு வரலாம். ஆனால், அந்த ஆட்சி கொலைகாரர்களால் ஆனது. மக்களை அவர்கள் எப்படி காப்பார்கள்.'  என்கிறார் காந்தி. வெள்ளையர்கள் என்றாலும் அவர்களும் மனிதர்களே, அவர்களை நம்மை மதிக்கச் செய்ய முடியும் என்று நம்புகிறார். அவ்வாறே, பல வெள்ளையின நண்பர்களைப் பெறுகிறார். இருபது வருடங்கள் அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்திருக்கிறார். இந்த காலகட்டத்திலேயே, சத்தியாகிரகம் மற்றும் அதனால் விளையும் நன...

குறும்படம் - PAROKSH

Image
12 நிமிடங்கள் மட்டுமே வரும் குறும்படம் என்றாலும், படைப்பாக்கம் வியக்க வைக்கிறது. படம் பார்த்து முடிக்கும்பொழுது இறுதியில், உங்களிடமிருந்து வரும் புன்னகையே இப்படத்தின் வெற்றி.

பின்தொடரும் நிழலின் குரல்

Image
அன்புள்ள ஜெயமோகன், புத்தக கண்காட்சிகளில் பின்தொடரும் நிழலின் குரல் நாவலை வாங்க விரும்பியதுண்டு. ஆனால், பல வருடங்களாக வாங்கவேயில்லை. சென்ற கோவை புத்தக கண்காட்சியில், முதல் புத்தகமாக வாங்கி உங்களிடம் கையெழுத்தும் பெற்றுக்கொண்டேன். ஒரு நாவலை வாங்குவதற்கும், படிப்பதற்கும் தக்க தருணம் அமையவேண்டும் போலிருக்கிறது. வாங்கின நாளிலிருந்தே படிக்கத்தொடங்கி, இப்பொழுதுதான் முடித்தேன். இத்தனை நாட்களில் கம்யூனிசம், ரஷ்யப்புரட்சி போன்றவை பற்றி அங்கங்கு கேள்விப்பட்டதுதான். பெரிதாக ஒன்றும் தெரியாமல் தான் இந்நாவலைப் படிக்கத் தொடங்கினேன். அருணாச்சலம், கே.கே.எம்.. எனத் தொடங்கிய நாவலில், வீரபத்ர பிள்ளை எழுதியதாக வரும் பகுதிகளைப் படிக்கும்பொழுது உண்மையிலேயே மனதில் குழப்பங்கள் தோன்றி குழம்பிப்போனேன். நாவலில் கடைசிப் பகுதியான ‘உயிர்த்தெழுதல்’ படித்த பின்னர்தான் அமைதி ஏற்பட்டது. விவாதங்களும், சித்தாந்தங்களும் என எவ்வளவோ இருந்தாலும் அவை அறத்தைச் சார்ந்தே இருக்கவேண்டும். போர் என்றாலும் அது அறத்தின் பொருட்டே நிகழ வேண்டும். ‘அல்லற் பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே செல்வத்தை தேய்க்கும் படை’ – அறமில்லையெனி...

அஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை

Image
கரும்பைப் பிழிந்து வரும் பாகைக் காய்ச்சினால், வெல்லம், சர்க்கரை போன்றவை கிடைக்கும். இதனைத்தான் நாம் பன்னெடுங்காலமாக பயன்படுத்தி வந்தோம். கூடவே, தேன், கருப்பட்டி போன்றவற்றையும் சுவைக்காகப் பயன்படுத்தினோம்.  வெள்ளை தவிர நமக்கு மற்ற நிறங்கள் பிடிக்காதே!. பழுப்பு நிறத்தில் இருக்கும் நாட்டுச் சர்க்கரையை, பல இரசாயனங்கள் கலந்து வெள்ளை ஆக்குகிறோம் என்று மாற்றினார்கள். நம்மையும் அந்த வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றினார்கள். ஒரு பொருளை, அதன் இயற்கை நிறத்திலிருந்து வேறு நிறத்திற்கு மாற்ற உபயோகித்த இரசாயனங்கள் 'உண்ணத் தகுந்த அளவில்' உள்ளது என்று கருதியிருக்கக் கூடும். ஆனால், ஒருவர் எடுத்துக் கொள்ளும் உணவைப் போல இன்னொருவர் எடுத்துக் கொள்வதில்லை. அதிகமாக எடுத்துக் கொள்ளும் நபர் அதிக இரசாயனங்களை உட்கொள்ள நேரிடுகிறது. உதாரணமாக பானங்கள் மற்றும் உணவு வகைகளில் அளவுக்கதிகமான சர்க்கரையைப் பயன்படுத்துகிறார்கள். சிறுவர்கள் மற்றும் இளைஞர்களைக் கவர, திகட்டும் அளவுக்கு சுவைக்காகப் பயன்படுத்தும் சர்க்கரை, பல நோய்களை நம் உடலுக்கு ஏற்படுத்துகிறது. முக்கியமாக, கேன்சர் போன்ற தீவிர நோய்களை வரவழை...