Posts

பின்தொடரும் நிழலின் குரல்

Image
அன்புள்ள ஜெயமோகன், புத்தக கண்காட்சிகளில் பின்தொடரும் நிழலின் குரல் நாவலை வாங்க விரும்பியதுண்டு. ஆனால், பல வருடங்களாக வாங்கவேயில்லை. சென்ற கோவை புத்தக கண்காட்சியில், முதல் புத்தகமாக வாங்கி உங்களிடம் கையெழுத்தும் பெற்றுக்கொண்டேன். ஒரு நாவலை வாங்குவதற்கும், படிப்பதற்கும் தக்க தருணம் அமையவேண்டும் போலிருக்கிறது. வாங்கின நாளிலிருந்தே படிக்கத்தொடங்கி, இப்பொழுதுதான் முடித்தேன். இத்தனை நாட்களில் கம்யூனிசம், ரஷ்யப்புரட்சி போன்றவை பற்றி அங்கங்கு கேள்விப்பட்டதுதான். பெரிதாக ஒன்றும் தெரியாமல் தான் இந்நாவலைப் படிக்கத் தொடங்கினேன். அருணாச்சலம், கே.கே.எம்.. எனத் தொடங்கிய நாவலில், வீரபத்ர பிள்ளை எழுதியதாக வரும் பகுதிகளைப் படிக்கும்பொழுது உண்மையிலேயே மனதில் குழப்பங்கள் தோன்றி குழம்பிப்போனேன். நாவலில் கடைசிப் பகுதியான ‘உயிர்த்தெழுதல்’ படித்த பின்னர்தான் அமைதி ஏற்பட்டது. விவாதங்களும், சித்தாந்தங்களும் என எவ்வளவோ இருந்தாலும் அவை அறத்தைச் சார்ந்தே இருக்கவேண்டும். போர் என்றாலும் அது அறத்தின் பொருட்டே நிகழ வேண்டும். ‘அல்லற் பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே செல்வத்தை தேய்க்கும் படை’ – அறமில்லையெனி...

அஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை

Image
கரும்பைப் பிழிந்து வரும் பாகைக் காய்ச்சினால், வெல்லம், சர்க்கரை போன்றவை கிடைக்கும். இதனைத்தான் நாம் பன்னெடுங்காலமாக பயன்படுத்தி வந்தோம். கூடவே, தேன், கருப்பட்டி போன்றவற்றையும் சுவைக்காகப் பயன்படுத்தினோம்.  வெள்ளை தவிர நமக்கு மற்ற நிறங்கள் பிடிக்காதே!. பழுப்பு நிறத்தில் இருக்கும் நாட்டுச் சர்க்கரையை, பல இரசாயனங்கள் கலந்து வெள்ளை ஆக்குகிறோம் என்று மாற்றினார்கள். நம்மையும் அந்த வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றினார்கள். ஒரு பொருளை, அதன் இயற்கை நிறத்திலிருந்து வேறு நிறத்திற்கு மாற்ற உபயோகித்த இரசாயனங்கள் 'உண்ணத் தகுந்த அளவில்' உள்ளது என்று கருதியிருக்கக் கூடும். ஆனால், ஒருவர் எடுத்துக் கொள்ளும் உணவைப் போல இன்னொருவர் எடுத்துக் கொள்வதில்லை. அதிகமாக எடுத்துக் கொள்ளும் நபர் அதிக இரசாயனங்களை உட்கொள்ள நேரிடுகிறது. உதாரணமாக பானங்கள் மற்றும் உணவு வகைகளில் அளவுக்கதிகமான சர்க்கரையைப் பயன்படுத்துகிறார்கள். சிறுவர்கள் மற்றும் இளைஞர்களைக் கவர, திகட்டும் அளவுக்கு சுவைக்காகப் பயன்படுத்தும் சர்க்கரை, பல நோய்களை நம் உடலுக்கு ஏற்படுத்துகிறது. முக்கியமாக, கேன்சர் போன்ற தீவிர நோய்களை வரவழை...

சமையலறைக் கழிவுகளில் உரம்

Image
மண் தொட்டி ஒன்றை எடுத்துக் கொள்ளவும்.  தினமும் சமையலறையில் மீதமாகும் காய்கறிக் கழிவுகளை அதில் போட்டு வரவும். காலிபிளவர் தண்டு போல பெரிய கழிவுகளாக இருந்தால் பொடியாக நறுக்கி போடவும்.  தொட்டி முக்கால் பாகம் நிறைந்ததும், மாட்டுச் சாணத்தில் கொஞ்சம் நீர் ஊற்றி கரைத்து, தொட்டியில் அந்தக் கழிவுகளின் மேலே ஊற்றி விடவும். வளமான மண் கிடைத்தால் கொஞ்சம் தூவி விடலாம்.  சாணத்தில் இருந்து புழுக்கள் உருவாகி கழிவுகள் மக்க ஆரம்பிக்கும்.  தொட்டியில் நீர் வெளியேற கீழே துளைகள் இருப்பது அவசியம். தொட்டியை அப்படியே வைத்திருக்கவும். வாரம் ஒருமுறை கொஞ்சம் நீர் தெளித்து கிளறி விடவும்.  ஒரு மாதம் போனால் கருப்பு நிறத்தில் மக்கிப் போன உரம் கிடைக்கும்.  ரசாயனம் இல்லாத உரம் தயார். இதன் மேல் கொஞ்சம் மண்ணைப் போட்டு இனி செடிகளை வளர்க்க வேண்டியது தான்.  இங்கே படத்தில் உள்ளது புதினா. மக்கிப் போன உரத்தில் விளைந்தது.  பழைய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால், அடியில் இரண்டு மூன்றுதுளைகள் போட்டுக் கொள்ளவும்.   மூன்று...

நிசப்தம் - வா. மணிகண்டன்

Image
சென்ற மாதத்தில், ஒரு மாணவனுக்கு உதவி வேண்டி எழுத்தாளர் வா.மணிகண்டன் அவர்களிடம் பேசினேன். உடனே உதவுவதாக சொல்லிய அவர், கோபி புத்தகத் திருவிழாவில் 18.7.2015 அன்று சந்திக்கலாம் என்றார்.  மணிகண்டன் அவர்களின் பேச்சு நிகழ்வும், கோபி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு, புத்தகங்கள் வாங்க, ஒவ்வொரு பள்ளிக்கும் ஐந்தாயிரம் ரூபாய் என ஏழு பள்ளிகளுக்கு வழங்கும் நிகழ்வும் அன்று நடைபெற இருந்தது. . நானும், நண்பன் கமலக்கண்ணனும் புத்தக கண்காட்சியில் கலந்து கொள்ள கோபி புறப்பட்டோம். கண்காட்சி நடைபெற்ற  மண்டபம் முன்னர் பார்த்ததும், ஒரே கூட்டமாக இருந்தது. 'பரவால்லியே, நம் மக்களுக்கு புத்தகங்கள் வாங்க இவ்வளவு ஆர்வமா'  என்று நினைத்துக்கொண்டு வண்டியை நிறுத்திவிட்டு மேலே பார்த்தால், பேனரில்  'ஆடி தள்ளுபடி விற்பனை விழா' என்று இருந்தது. சப்பென்று ஆகிவிட்டது. அதானே, நம் மக்கள் அவ்வளவு சீக்கிரம் புத்தகங்கள் வாங்கி விடுவார்களா என்ன?. இரண்டு மண்டபங்களும் சேர்ந்து இருந்தது. பக்கத்து மண்டபத்தில் தான் புத்தக திருவிழா. அங்கே அளவான கூட்டம்.  மணிகண்டன் அவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டோம்....

உடல் எடையைக் கட்டுப்படுத்தும் கைக்குத்தல் அரிசி !

Image
நாம் வழக்கமாக கடைகளில் வாங்கும் வெள்ளை நிற அரிசி நன்றாக பாலிஷ் செய்யப்பட்டு தீட்டப்பட்ட அரிசி ஆகும். அரிசியில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் தீட்டப்பட்டு, பளீரென்ற வெண்மை நிறத்தில் நாம் உண்பது வெறும் மாவுப்பொருளை மட்டுமே. நாம் மெல்லவும் மென்மையாக இருப்பதால், அளவுக்கு அதிகமாக சாப்பிட நேர்கிறது. மேலும் உடம்பில் தேவையில்லாத பிரச்சினைகளை உண்டு பண்ணுகிறது தீட்டப்பட்ட அரிசி(Polished Rice). தீட்டப்படாத அரிசியே கைக்குத்தல் அரிசி. கை க் குத்தல் அரிசியில் நார்ச்சத்து, பி விட்டமின்கள், செலனியம், மாங்கனீஸ், உடலுக்குத் தேவையான கொழுப்புச் சத்துக்களும் அடங்கியுள்ளன. அரிசியின் முனைகளில் இரண்டு சக்தி வாய்ந்த டையாஸ்டேஸ் மற்றும் பெப்டேஸ் சத்துக்கள் உள்ளன. இந்தச் சத்துக்கள் பட்டை தீட்டப்பட்ட அரிசியில் இருக்காது. கைக்குத்தல் அரிசி சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்: கைக்குத்தல் அரிசியைச் சாப்பிடுவதால் நன்மைகள் ஏராளம். அதைச் சமைத்து உண்ணும் பொழுது இயற்கையாகவே, நாம் அதை நன்றாக மென்றுதான் உண்ண முடியும். எனவே, எளிதில் உமிழ்நீருடன் கலந்து செரிமானம் ஆகும். * ஆரோக்கியமான எலும்பு மற்...

கருப்பு கொள்ளு

Image
இளைத்தவனுக்கு எள்ளும், கொழுத்தவனுக்கு கொள்ளும் - என்று சொல்லுவார்கள். கால்சியம், இரும்புச் சத்துக்கள் அதிகமாகவும், கொழுப்புச் சத்துக்கள் குறைவாகவும் இருப்பதால் நம் முன்னோர்கள் இப்படிச் சொல்லி வைத்திருக்கிறார்கள். சாதரணமாக நாம் காணக்கூடிய சிவப்பு நிறக் கொள்ளைக் காட்டிலும், அதிக சத்துக்கள் நிறைந்தது கருப்பு நிறக் கொள்ளு. கொள்ளு ரசம், பருப்பு, துவையல் என சிவப்பு நிறக் கொள்ளைப் போலவே இதிலும் செய்யலாம். சளி, இருமல் போன்ற தொந்திரவுகள் இருக்கும்போது, கிராமப்புறங்களில் இப்பொழுதும் கொள்ளுச் சாறு எனப்படும் கொள்ளு ரசம் அருந்தும் பழக்கம் இருக்கிறது. இதன் அருமைகள் பற்றித் தெரியாமல், கொள்ளு என்றாலே தள்ளிச் செல்பவர்கள் நிறையப் பேர். இது போன்ற பாரம்பரிய உணவுகளை மறந்து விட்டு, நம் முன்னோர்கள் கேள்விப்பட்டிராத சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய் போன்றவற்றுக்கு ஆட்படுகிறோம். பாரம்பரிய உணவுகளை நாம் உட்கொள்ளத் தொடங்குவோம், நோயற்ற வாழ்வை வாழ்வோம். கருப்பு கொள்ளு சுண்டல்  --------------------------------------- தேவையானவை: கருப்பு கொள்ளு - 100 கிராம்  தாளிக்க - நல்லெண்ணெய்,...

தரு இயற்கை அங்காடி(Tharu Organic, Kovai)

Image
தானியங்களை அதன் மேல் உமி மட்டும் நீக்கி விட்டு, அப்படியே உண்ட அந்தக் காலங்களில் எந்த நோயும் அணுகவில்லை. இப்பொழுது வெள்ளை ஆக்குகிறோம் என்ற பெயரில் "பாலிஷ்" செய்து உண்கிறோம். நார்ச் சத்து எல்லாம் நீக்கி விட்டு, வெறும் மாவை மட்டும் உணவாக உண்கிறோம். மெல்ல வேண்டியதில்லை, உடனே ஒரே கொதியில் சோறு வெந்து விடுகிறது, சுவையாக இருக்கிறது எனப் பல காரணங்கள் சொல்லிக் கொள்கிறோம்.  அது போலவே சிறு தானியங்களும். கேழ்வரகு, தினை, கம்பு, வரகு, பனிவரகு, சாமை என எவ்வளவோ தானியங்கள் உண்டு. ஆனால், இவற்றை எல்லாம் நாம் உணவாக எடுத்துக்கொள்வதில்லை. தீராத பின் விளைவுகளைத் தரும் ரெடிமேட் உணவுகளின் பின்னர் ஓடிக் கொண்டிருக்கிறோம்.  பலர் இப்பொழுது சிறு தானியங்களை உணவாக எடுத்துக்கொள்ளத் தொடங்கினாலும், அதையும் பாலிஷ் செய்து விற்கிறார்கள். வரகு, குதிரைவாலி போன்ற தானியங்களை நாம் பாலிஷ் செய்வதால், அதில் உள்ள முதன்மையான சத்துக்களை இழக்க நேர்கிறது.  கடைகளில் சிறு தானியங்களை வாங்கி சமைத்து உண்டிருக்கிறோம் நாங்கள். ஆனால் எல்லாம் பாலிஷ் செய்தவையாக இருந்தது. நாமே ஒரு கடை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ண...