Posts

மாடித் தோட்டம் - கீரைகள் (Terrace Garden)

Image
வீட்டுத் தோட்டத்தில் வாழை, தென்னை போன்ற பயிர்கள் இருந்தமையால், போதிய வெயிலும் இடமும் இன்றி கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை வளர்க்க முடியாமல் இருந்தோம். இருந்தாலும், அவரை , பீர்க்கை போன்ற கொடி வகைகளை மொட்டை மாடிக்கு இழுத்து பந்தல் போட்டதில், நன்றாகவே விளைந்தது. இந்த வருடம் அடுத்த முயற்சியாக, மொட்டை மாடித் தோட்டத்தை அமைத்துள்ளோம்.   தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத் துறை மூலமாக, சென்னை மற்றும் கோவைப் பகுதிகளில் மானியத்துடன் கூடிய 'நீங்களே செய்து பாருங்கள் (Do It Yourself kit)' கொடுத்திருந்தார்கள். விலை ரூபாய் 1325. தேர்தல் காரணமாக, சில பொருட்கள் தாமதமாக வந்து சேர்ந்தன. ஆனாலும், மாடித் தோட்டம் போடத் தகுந்த காலமான ஜூலையில் எல்லாப் பொருட்களையும் கொடுத்து விட்டார்கள். தென்னை நார்க் கழிவுடன், தொழு உரம் சேர்த்து ஒரு வாரம் கழித்து விதைகளை நடத் தொடங்கலாம். அசொஸ்பைரில்லம், சூடோமோனோஸ் போன்ற உயிரி உரங்களையும், நார்க் கழிவுடன்  சேர்க்க வேண்டும். தக்காளி, கத்திரி மற்றும் மிளகாய் விதைகளை குழித்தட்டில் விதைத்து வளர்ந்து வருகின்றன. வெண்டை, முள்ளங்கி போன்ற விதைகளை அப்ப...

ரப்பர் - ஜெயமோகன்

Image
ஜெயமோகன் எழுதிய முதல் நாவல் ரப்பர். ஓரிடத்தில், ரப்பர் மரங்கள் பற்றி இப்படிச் சொல்கிறது நாவல்;  "ரப்பர் மரம் தன் பக்கத்தில் எந்த ஒரு உயிரினத்தையும் வாழ விடாது. பறவைகள் வந்து கூடடையாது. தினம் தினம் ரப்பர் பாலை சொட்டிக் கொண்டு, பாலுக்காக அறுத்த காயங்களைக் கொண்டிருக்கும் ரப்பர் மரங்கள் ராணுவ வீரனைப் போல் அமைதியாக நின்று கொண்டிருக்கின்றன. நம் மண்ணுக்கான மரமில்லை, மற்ற மரங்களைப் போல நீரைச் சேமிப்பதில்லை." *************** பொன்னுப் பெருவட்டர் படுக்கையில் இருக்கிறார். வாழ்ந்து முடித்த இந்த  தள்ளாத வயதில், இன்னொருவரின் உதவியோடு உயிர் வாழ்வதில் பெரும் கோபம் கொண்டவராக இருக்கிறார். முதுமையில், படுக்கையில் படுத்த பின்னர் எல்லா வயதானவர்களுக்கும் கோபம் வருவதுண்டு. ஒவ்வொன்றுக்கும், மற்றவர்களை எதிர்பார்த்திருக்க வேண்டியது ஒரு சுமை. இந்தக் கணமே, தான் இந்த உலகத்தை விட்டுச் சென்று விடலாகாதா என எண்ணுகிறார். தன்னைப் பார்த்துக்கொள்ளும் குஞ்ஞியிடம், விஷம் குடுத்து விடு என்று வேண்டுகிறார். இந்த வீடு, இந்த ரப்பர்  தோட்டம் எல்லாம் பொன்னுப் பெருவட்டரின் காலத்தில் அவரே உரு...

ஒற்றை வைக்கோல் புரட்சி - மசானபு ஃபுகோகா

Image
வேளாண்மையில் நிலத்தை உழ வேண்டியது முக்கியம். அப்பொழுதுதான் நிலம் பண்பட்டு, நல்ல விளைச்சலைத் தரும். ஆனால்,  ஒரு நிலத்தை உழுது 25 வருடங்கள் ஆகின்றன. அதில் வரும் விளைச்சல், மற்ற எந்த உயர்தர பண்ணைகளைக் காட்டிலும் அதிகம். அதெப்படி, நிலத்தை உழாமல் விளைச்சல் எடுக்க முடியும்?. இயற்கை முறையில், தன் பண்ணையில் இருபத்தைந்து வருடங்களாக நிலத்தை உழாமல், பயிரிட்டு வருவதாகச் சொல்கிறார், 'ஒற்றை வைக்கோல் புரட்சி' புத்தகத்தின் ஆசிரியர் மசானபு ஃபுகோகா. *********** நிலத்தை உழுது, உரங்களைக் கொட்டி, வீரியமிக்க விதைகளை விதைத்து, பூசிகொல்லிகளைத் தெளித்து நாம் செய்யும் விவசாயம் மிகக் கேடானது. அப்படி வேலை செய்து, பயிரிட்டாலும் மிஞ்சுவதோ ஒன்றுமில்லை. 'உழுகிறவன் கணக்குப் பார்த்தால், உழக்கு கூட மிஞ்சாது' என்று சொல்வார்கள் ஊரில். இவ்வளவு செலவழித்து, விவசாயம் பார்த்தால், வருமானம் என்பது சொற்பமே. இயற்கை முறையில், குறைந்த செலவில் விவசாயம் பார்க்கலாம் என்றாலும்.. அது சரிப்பட்டு வருமா என்ற தயக்கம் இருக்கும். வேளாண்துறை விஞ்ஞானிகளும், அறிஞர்களும் ரசாயனம், பூ...

இரு கதைகள்

எதார்த்த சிறுகதைகள் என்ற வரிசையில் ' சொல்வனம் ' இதழில் சில கதைகள் வெளியாகி உள்ளன. அறுபது வயதுக்கு மேல் ஒரு பெண்மணி, தன் கணவன், பிள்ளைகள் என அவர்களுடன் இருக்கவே விருப்பபடுவார்கள். தனியாக, தான் விரும்பியபடி வாழ அவர்கள் நினைக்கும்போது, வயதை காரணமாக வைத்து மற்றவர்கள் தடுப்பார்கள். பொருளாதாரம் ஒரு காரணமாக இருந்தாலும், இந்த வயதுக்கு மேல் எப்படி தனியே சென்று வாழ்வது என்ற பயமும் இருக்கும். அம்பை அவர்களின் ' அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு ' கதையில் வரும் சந்தியாபாய், கணவன் மற்றும் பிள்ளைகளிடம், இந்த வீட்டில் எனக்கும் பங்கு இருக்கிறது, நானும் என் நகைகளைக் குடுத்து இருக்கிறேன், என் பங்கை எனக்கு கொடுங்கள். நான் எங்கள் கிராமத்துக்குச் சென்று என் தங்கையுடன் வாழ்கிறேன்.. என்று சொன்னதும் குடும்பத்தினர் ஆடிப் போகிறார்கள். புத்தி பிசகி விட்டது என்று எண்ணுகிறார்கள். சந்தியா பாயின், கணவரும் பிள்ளைகளும் மோசமானவர்கள் இல்லை, அவர்கள் எல்லோரும் இவரைத் தாங்குகிறார்கள். ஆனால், எதையே இழந்தது போல இருக்கும் இருக்கும் இந்த வாழ்க்கையை அவர் துறந்து, தான் நேசித்த தோட்டங்களும் ...

வீட்டுத் தோட்டத்தில்: வெற்றிலை, பப்பாளி, கேரட்

Image
வெற்றிலை:     பப்பாளி: கேரட்:   மஞ்சள் மற்றும் புதினா: கற்பூரவள்ளி மூலிகை:  

வீட்டுத் தோட்டத்தில்: சம்பங்கி, பலா மற்றும் செம்பருத்தி

Image
போன வருடம் கொடிசியாவில் நடந்த விவசாயக் கண்காட்சியில் வாங்கிய சம்பங்கி கிழங்கு அழகாகப் பூத்திருக்கிறது இப்பொழுது. கடந்த வருடங்களை விடவும்  இந்த வருடம் பலா மரத்தில் பிஞ்சுகள் அதிகம் விட்டது. எப்படியும் ஒன்றிரண்டாவது காய் நிற்கும் என நாங்கள் நினைத்திருக்க, எல்லாப் பிஞ்சுகளும் உதிர்ந்து விட்டது. அடுத்த வருடம் பலா பிடிக்குமா எனத் தெரியவில்லை.    சிவப்பு செம்பருத்தியை, வைத்த இரண்டு மாதங்களிலேயே பூச்சி பிடித்து வாடி விட்டது. அடித் தண்டுக்கு மேல் முழுவதும் வெட்டி விட, இப்பொழுது தினமும் பூக்கள் பூக்கிறது.  

வீட்டுத் தோட்டத்தில்: செவ்வாழை

Image
பள்ளியில் 'செவ்வாழை' கதை பாடமாக இருந்தது. ஓர் ஏழையின் வீட்டில் வளரும் செவ்வாழை குலை தள்ளி இருக்கும். அவனின் குழந்தைகள், மனைவி என அந்தக் குலை பெரிதாகி எப்பொழுது பழம் பழுக்கும், நாம் தின்னலாம் எனக் காத்திருப்பார்கள். ஆனால், அந்த ஊரில் இருக்கும் பெரிய மனிதர், தன் வீட்டு விசேசத்துக்கு, அந்த வாழையை வெட்டிக் கொடுக்கச் சொல்ல, வேறு வழியில்லாமல் வெட்டித் தந்து விடுகிறான் அந்த ஏழை. குழந்தைகள் ஏக்கத்துடன் பார்த்து அழுவார்கள். அந்தக் கதையை நீங்களும் படித்திருக்கலாம். சரி, இங்கே எங்கள் வீட்டில் வளர்ந்த செவ்வாழை பற்றி. ஊரில் இருந்து கொண்டு வைத்த ஒரே வாரத்தில் தேன் வாழை துளிர் விட்டது. செவ்வாழைக் கன்றும் அதனுடனே வைத்ததுதான். வளரலாமா, வேண்டாமா என்ற நீண்ட யோசனைக்குப் பின்னர் கொஞ்சமாக வெளியே எட்டிப் பார்த்தது. தேன் வாழை பழம் பழுத்து குலை வெட்டிய பின்னர்தான், செவ்வாழை குலை தள்ளியது. குலை தள்ளி நான்கு மாதங்கள் ஆகியும் பழுக்கவில்லை. விவசாயியான நண்பனின் அப்பாவிடம் கேட்டபொழுது, காய் ரோஸ் நிறமாக மாறும்பொழுது வெட்ட சொன்னார். தினமும் நிறம் மாறும் மாறும் என குலையை பார்...