Posts

உண்மைக்கும் புரிதலுக்கும் உள்ள இடைவெளி

Image
நாம் புரிந்து கொண்டதென்பது ஒன்று. ஆனால் உண்மை என்பது இன்னொன்று. சில சமயங்களில் நாம் புரிந்து கொண்டதிலிருந்து, உண்மையானது வெகு தூரத்தில் இருக்கும் உதாரணத்துக்கு, கடவுள் இருக்கிறார் என்று சிலர் சொல்கிறார்கள். இல்லை என்றும் சிலர் சொல்கிறார்கள். ஆகவே,  ஒருவர் தான் புரிந்து கொண்டதிலிருந்து கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்ற முடிவுக்கு வருகிறார். யார் சொல்வது இங்கே உண்மை?. உண்மை என்பது ஒன்றாகத்தானே இருக்க முடியும். அசோகமித்திரன் அவர்கள் எழுதிய கதைகளின் சிறு தொகுப்பான ' 1945இல் இப்படியெல்லாம் இருந்தது '' புத்தகத்தை விஷ்ணுபுரம் விருது விழாவில் வாங்கினேன். அந்தப் புத்தகத்தில் தான் 'உண்மைக்கும் புரிதலுக்கும் உள்ள இடைவெளி' என்கிற கதை இருக்கிறது. மிகவும் சிந்திக்கச் செய்த கதை. ஒரு தம்பதியினர், அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. நடுத்தர காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒருநாள் அத்தை வருகிறாள். அத்தை வந்த பின்னர், வீட்டு வேலை மற்றும் சமையலை அத்தையே பார்த்துக் கொள்கிறார். முதலில் ஒரு குறையும் சொல்லாமல் இருக்கும் அத்தை, போக போக வீட்டில் தான் இல்லாமல்...

கற்கள்

இவன் வயிற்றில் இருந்தபோது ஒருநாள்  நாட்டு ஓடு போட்ட கூரையின் மேல் சடசடவென கல்மாரி விழுந்தது...  நடந்து பழகியவன் ஒருநாள் கல் தடுக்கி விழுந்த காயத்திற்கு நான்தான் மருந்து போட்டு விட்டேன்... கல்லைத் தூக்கி வீசியதில் பக்கத்துக்கு வீட்டு பையனின் மண்டை உடைந்து ரத்தம் வழிந்ததில் பையனின் அம்மாவுடன் ஜென்மப் பகை வந்தது... தள்ளாத வயதில் முதியோர் இல்லத்தில் தவிக்க விட்டுப் போனவன் அவன் அவனே ஒரு பாறாங் கல்லோ என்று இப்பொழுது நினைக்கிறேன்....

குறும்படம்: தணல்

Image
ஒரு சிலிண்டர் வெடிக்க நிறைய காரணம் இருக்கலாம். இப்படிதான் வெடித்தது என்று வெடித்த பின்னர் நிரூபிக்கலாம். ஆனால், அதனால் ஏற்பட்ட இழப்பு என்பது முடிந்து போன ஒன்று. சிலிண்டர் வெடிப்புக்கே நாம் காரணங்களைத் தேடிக் கொண்டிருக்கும்போது, அணு உலைகள் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. என்னதான் அது பாதுகாப்பு வசதிகளுடன் இருந்தாலும், இந்தக் குறும்படத்தில் சொல்வது போல நிகழக் கூடும். மனிதர்களை இழந்த பின்னர் நாம் காரணங்களைத் தேடிக் கொண்டிருப்போம் ஒரு காலத்தில், அது யாருக்காக?. இந்தக் குறும்படத்தில் எங்கள்  நண்பன் பாலா ஒரு பாத்திரமாக நடித்துள்ளான். வாழ்த்துக்கள் பாலா. 'தணல்' குழுவுக்கு வாழ்த்துக்கள். 

ஆக்காட்டி.. ஆக்காட்டி..

Image
'தவமாய் தவமிருந்து' படத்தில் இடம்பெற்ற பாடலான 'ஆக்காட்டி..' பாடல்,  ஓர் அற்புதம். படம் வெளியாகும் முன்னரே, நண்பன் ஒருவன் திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருந்தான். ஒரு ஒப்பாரி போல இருக்கும் இந்தப் பாட்டை அவன் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தான். நாங்கள் அவனை ஒரு மாதிரியாகப் பார்க்க, 'இந்தப் பாட்டை நல்லாக் கேளு.. அந்த வார்த்தைகளோட..' என்றான். பிறகு தான் நாங்கள் அந்தப் பாட்டை உன்னிப்பாக கேட்க ஆரம்பித்தோம். பாடல் முடிந்தவுடன், அதிலும் குறிப்பாக 'வலை என்ன பெருங் கனமா?' என்று முடியும்போது மனதை உலுக்க ஆரம்பித்து விட்டது.   'வலியும் வேதனையும் வலையோடு போயிருச்சு..' என்று இந்தப் பாடல் முடியும்போதெல்லாம் ஒரு புதிய நம்பிக்கை உதிக்கும் மனதில். திரையில் இந்தப் பாடலும், காட்சிகளும் இடம் பெறவில்லை. ஒரு குருவி, தன் குஞ்சுகளுக்கு இரை தேடிப்  போகும்போது, வலையில் மாட்டிக் கொண்டு விடுகிறது. அதிலிருந்து தப்பித்து வெளிவருவதை நடித்துக் காட்டுவார்கள் படத்தில்.  இது குருவிகளின் கதை மட்டும் அல்ல, நாள்தோறும் அல்லல் படும் மனிதர்கள் பற்றியும் தான்.  இங்கு...

வேகம்

Image
நீண்டு கிடக்கும் நெடுஞ்சாலைகள் ஒவ்வொரு நாளும் பயணம் ஓய்வில்லாத பயணம் சாலைகள் எப்போதும் முன்னால் விரிந்து கிடக்கிறது ஒரு போதும் மறந்து விடலாகாது நமக்குப் பின்னாலும் ஒரு நீண்ட பாதை உண்டென்பதை...

விஷ்ணுபுரம் 2012 விருது விழாவில்..

Image
விஷ்ணுபுரம் விருது 2010 ல் எழுத்தாளர் ஆ.மாதவன் அவர்களுக்கும், 2011 ல் எழுத்தாளர் பூமணி அவர்களுக்கும் வழங்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டுக்கான விருது கவிஞர் தேவதேவன் அவர்களுக்கு, கடந்த சனிக்கிழமை(22/12/2012)  அன்று கோவையில் வழங்கப்பட்டது.  விழாவில் இசை ஞானி இளையராஜா கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார். அவரின் திரை இசையில் தோன்றிய பாடலான, 'மாசறு பொன்னே வருக..' பாடலுடன் விழா துவங்கியது. எங்கு இந்தப் பாட்டைக் கேட்டாலும், கொஞ்ச நாட்களுக்கு இந்தப் பாட்டை வாய் பாடிக் கொண்டே இருக்கும். அழகான இந்தப் பாட்டை, அழகாகப் பாடிய இரண்டு சிறுமிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். திரு. அரங்கசாமி அவர்கள் வரவேற்புரை வழங்க, எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கினார். இசை ஞானியை தான் முதன் முதலாக சந்தித்ததைப் பற்றியும், அதற்குப் பின்னர் அவரைப் பற்றியும் குறிப்பிட்டார் நாஞ்சில் நாடன். அவரின் உரையில், தேவதேவன் அவர்களின் இரண்டு கவிதைகளைப் பற்றிக் குறிப்பிட்டார். அதில் ஒன்று, கீழ்வரும் கவிதை; ஒரு கர்ப்பிணிப் பெண்ணை அவளின் தாயிடம் ஒப்படைப்பது போல உன்னை...

குறும்படம்: Rags to Pads

அதைப் பற்றி பேசுவதே தவறு என்றுதான் நம் சமூகம் சொல்லிக் கொண்டிருக்கிறது, அதுவும் இந்த சமூகத்துக்கு அது ஒரு கேலிப் பொருள். ஆண்கள் மட்டும் அல்ல, பெண்களும் கூடத்தான். "நான் அவ வீட்டுக்கு வரல.. அவ ரொம்ப சுத்தம் பாக்குறவ.." என்று அந்த நாட்களில் வெளியே போகாமல் இருக்க காரணம், பெரும்பாலும் இன்னொரு பெண்தான். "வீட்லயே இருக்க வேண்டியது தானே.." என்று திட்டுபவர்களும் அதிகம். "மூன்று நாளா.." என்று கேலி செய்பவர்கள் திருந்துவது எப்போது?. அந்த நாள் என்று சொன்னாலே, முகத்தைச் சுளித்துக் கொள்பவர்களை என்ன செய்யலாம்.? மாதவிடாய் நாட்களில் நகரத்துப் பெண்கள் கூட சமாளித்துக் கொள்ளலாம். அதையும், கடையில் வாங்கிய பின்னர் பேப்பர் சுற்றி எடுத்து வரவேண்டிய கொடுமை இன்னொருபுறம். இயல்பாக இருப்பதை, மாத சுழற்சியை ஏன் நாம் மறைக்க நினைக்கிறோம். ஆனால், கிராமங்களில் இன்னும் பழைய துணிகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம் அல்லது அதன் விலை அவர்களுக்கு அதிகமாக இருக்ககூடும். பழைய துணிகளால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் நிறைய. கோவையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரை...