Posts

புனலும் மணலும் - ஆ.மாதவன்

Image
ஆற்றுக்கடவில் மணலை வாரித் தொழில் செய்யும் சிலரைப் பற்றியது இந்நாவல். சுழிகள் நிறைந்த ஆறு போலவே, வாழ்க்கையிலும் மேடு பள்ளங்கள். நீர் காணாத ஆறு போல வறுமை தாண்டவமாடும் வாழக்கை. வாரிக்கொடுத்த ஆறு இன்று சாக்கடை செல்லும் கால்வாயாய் பரிதாப தோற்றத்தில்.  அங்குசாமிக்கு சாலைத் தெருவில் மூட்டை சுமக்கும் வேலை. சின்ன வயதிலேயே சாலைத் தெருவில் வேலைக்கு வந்துவிட்டவர். தான் பிறந்த தமிழகத்தை விட்டு, மலையாளக் கரையிலேயே தங்கிவிட்டவர். ஒரு காவலர் வளாகத்தில் குடியிருக்கச் செல்கிறார் அங்குசாமி. அங்கே இருக்கும் தங்கம்மை என்ற பெண்ணுடன் பழக்கமாகி அவளையே கல்யாணம் செய்து கொள்கிறார்.  தங்கம்மைக்கு ஒரு போலீஸ்காரன் ஒருவனுடன் முன்னரே கல்யாணம் ஆகியிருந்தது. அவளுடன் இரண்டு மாதங்கள் மட்டுமே வாழ்ந்த அந்த போலீஸ்காரன் இறந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு குழந்தையும் உண்டாகிவிட்டது. பெண் குழந்தை. பெயர் பங்கி. பற்கள் விகாரமாய், கொஞ்சம் குண்டுக்கட்டான ஒரு மாதிரியான உடம்புடனும், கருமை நிறத்திலும் இருப்பாள் பங்கி. தங்கம்மைக்கு இப்படி ஒரு மகளா என முதல்முறை பார்க்கும்பொழுதே வியக்கிறார் அங்குசாமி. ஏனென்ற...

கிருஷ்ணப் பருந்து - ஆ.மாதவன்

Image
நீங்கள் ஒருவரை நல்லவன் என்றோ,கெட்டவன் என்றோ தீர்மானம் செய்யலாம். ஆனால்  நன்மையும், தீமையும் கலந்தவன் மனிதன்.  ஒரு கொலைகாரன் கோவிலுக்குச் செல்லும்போது அங்கே அவன் பக்தியுள்ளவனாக இருக்கிறான். ஒரு குழந்தையைப் பார்த்து சிரிக்கும்பொழுது அவன் அன்பை உணர்கிறான், அப்பொழுது அவன் கொலைகாரனாக இருப்பதில்லை. எப்படி அவன் கொலை செய்தவன் என்பது உண்மையோ, அதுபோலவே அவன் கோவிலுக்குப் போவதும், அன்பாய் இருப்பதும் உண்மை. மனிதர்களின் இந்த பண்பினை, தனது பெரும்பாலான கதைகளில் சொல்கிறார் ஆ.மாதவன்.  சாலைத்தெருவின் ஒரு ஓரத்தில் அந்த தோட்டவிளை அமைந்துள்ளது. குருஸ்வாமி அதன் சொந்தக்காரர். தாத்தா காலத்தில் அழிந்த சொத்துக்களோடு, அப்பாவும் சேர்ந்து அழிக்க, இந்த தோட்டம் மட்டும் எஞ்சியிருக்கிறது குருஸ்வாமிக்கு. அந்த தோட்ட வளாகத்தில் அவர் குடியிருக்கும் வீடு தவிர, ஒரு தேவி கோவில், தென்னை மரங்கள் மற்றும் சில குடியிருப்புகள் உண்டு. அந்த குடியிருப்புகளில் ஏழைப்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். அவர்களிடம் வாடகை என ஏதோ ஒரு பணத்தை குருஸ்வாமி வாங்கி கொள்கிறார். ஓவியம் வரையும், சாலைகளில் பாட்டுப் பாடும், பழைய பாத்தி...

18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்

Image
ஹைதராபாத்தில் நிஜாம் ஆட்சி நடந்துகொண்டிருந்த காலகட்டம். இந்தியாவுடன் சேராமல் தனியாகவே இருந்தது நிஜாம் அரசு. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் ஒரு வருடம் கழித்து இந்தியாவுடன் இணைகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற சில நிகழ்வுகளுடன் நாவல் விரிகிறது.  கதை சந்திரசேகரன் என்னும் பால்ய வயது இளைஞனைச் சுற்றியே செல்கிறது. அவன் படித்த பள்ளி, கல்லூரி, நண்பர்கள், கிரிக்கெட்,  லான்சர் பாரெக்ஸ் எனும் ரயில்வே குடியிருப்பு,  அதில் குடியிருக்கும் பக்கத்து வீட்டினர்,  இவ்வளவு பிரச்சனையிலும் அவர்கள் வளர்க்கும் பசு பற்றி என நாவலில் ஏகப்பட்ட தகவல்கள். பக்கத்து வீட்டு இஸ்லாமியர்களுடன் ஏற்படும் சண்டைகள், பின்னர் ஆட்சி மாற்றத்தில் அவர்கள் காட்டும் வேறுபாடு என சொல்லிக் கொண்டே செல்கிறார் அசோகமித்திரன்.  ஒரு சாமான்ய மனிதனின் பார்வையில் நாவல் சொல்லப்படுகிறது. பெரும்பாலும் வரலாறு, அரசியல் மாற்றங்கள் பற்றி எல்லாருமே அறிந்திருந்தாலும், அதற்கு நாம் என்ன செய்வது என்பது போலிருக்கும் சாமானியர்கள். காந்தி கொல்லப்பட்டதை அறிந்த சந்திரசேகரன், ஒரு இஸ்லாமியர் தான் அவரைக் கொன்...

உப்பு வேலி - ராய் மாக்ஸம் (The Great Hedge Of India - Roy Moxham)

Image
உப்பு மிகச் சாதாரணமாக கிடைக்கிறது இப்பொழுது. ஆனால், ஒருகாலத்தில் மிக அதிக வரி விதிக்கப்பட்டு எளியோர் வாங்கமுடியாத விலையில் இருந்த ஒரு பொருள் அது. ஒரு குடும்பத்தின் ஒரு வருடத்துக்கான உப்பின் விலை, ஒருவனுடைய இரண்டு மாத சம்பளமாகும். வருட சம்பளத்தில் ஆறில் ஒரு பங்கு உப்புக்கு மட்டுமே செலவு செய்யவேண்டிய கொடுமை.  1750 ஆம் வருடங்களில், கிழக்கிந்தியக் கம்பெனி மூலம் ஆட்சியை நடத்திய பிரிட்டிஷ் பிரபுக்கள் உப்பு, பாக்கு போன்றவற்றுக்கு வரியை அதிகப்படுத்தினர். எளிய மக்கள் உப்பை அதிக விலைகொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். வரியோடு சேர்ந்த உப்பின் விலை அதிகமாக இருந்ததால், கடத்தல் அதிகரித்து தரம் குறைந்த உப்பு கலப்படம் செய்யப்பட்டு சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனையாகியது. கடத்தலைத் தடுக்க இந்தியாவின் குறுக்காக புதர் மற்றும் மரங்களினால் ஆன வேலி உருவாக்கி சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. இந்தச் சாவடியில் எண்ணற்ற காவல் அதிகாரிகள் பாதுகாப்பில் குறைந்த கூலியில் அமர்த்தப்பட்டனர்.  இந்த புத்தகத்தை எழுதிய ராய் மாக்ஸம் இங்கிலாந்தில் ஒரு பழைய புத்தகத்தில் இந்த வேலியைப் பற்றிய குறிப்பைப் ...

தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம்

Image
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தாத்ரிக்குட்டி என்னும் பெண்ணால் கேரள மாநிலத்தில் புயல் வீசியது. சடங்குகளும், நம்பிக்கைகளும் பெண்களுக்கு எதிராக இருந்த காலகட்டம். பெண்கள் மார்பின் மேல் போடும் சீலைத்துணிக்கும் வரி விதித்த கொடுமை நடந்த காலம்.  அந்தக் காலத்தின் சாட்சியாய் வரலாற்றில் வாழ்ந்து வருகிறாள் தாத்ரி. தாத்ரிக்குட்டியை சிலர் கலகக்காரியாகவும், சிலர் கீழ்ப்பிறவியாகவும் எண்ணினர். அவ்வாறு அவர்கள் நினைக்க என்ன காரணம்?.  கேரளாவின் நம்பூதிரி குடும்பங்களில், குடும்பத்தின் மூத்த மகன் மட்டுமே சொத்துக்கு அதிபதி. போலவே மூசாம்பூரி என்றழைக்கப்படும் மூத்த மகன் மட்டுமே, மற்ற நம்பூதிரிக் குடும்பங்களில் உள்ள பெண்ணை மணக்க முடியும். மற்ற ஆண்பிள்ளைகள் வேறு சாதிப் பெண்களைத்தான் மணக்க வேண்டும். இதனால், நம்பூதிரி குடும்பங்களில் கல்யாணமாகாத பெண்கள் நிறையப் பேர் இருந்திருக்கின்றனர். ஒரு மூத்த நம்பூதிரிக்கு பல பெண்களைக் கட்டிக் கொடுத்திருக்கின்றனர். போலவே, சிறு வயது பெண்ணானாலும், வயதான நம்பூதிரிக்கு வேறு வழியில்லாமல் கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள்.  கல்யாணம் செய்து கொண்டு நம்பூதிரி க...

பாற்கடல் - லா.ச.ராமாமிருதம்

குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்துதான் லட்சுமி, ஐராவதம், உச்சஸ்வரன் எல்லாம் உண்டாயின. ஆலகால விஷமும் அதிலிருந்து தான் உண்டாகியது. உடனே அதற்கு மாற்றான அமிருதமும் அதிலேயேதான். -- ஜகதா கல்யாணமாகிய புது மணப்பெண். கணவன் வீட்டில் இருக்கிறாள். கல்யாணம் முடிந்ததும், கணவன் உடனே வெளியூரில் வேலைக்குச் சேர்கிறான். வீட்டில் நடக்கும் எல்லாவற்றையும், தன் புதுக்கணவனுக்குச் சொல்ல கடிதம் எழுதுகிறாள். அந்தக் கடிதமே பாற்கடல்.  நான்கு தலைமுறைகள் ஒரே வீட்டில் வாழும் குடும்பம். கூட்டு வாழ்வுக்கே உரித்தான மன வருத்தங்கள், சிறு சிறு சலசலப்புகள் இந்தக் குடும்பத்திலும் உண்டு. ஆனால் எல்லாவற்றையும் ஜகதாவின் மாமியார் தாங்கிப்பிடிக்கிறார். எல்லாக் குடும்பத்திலும் அப்படி ஒருவர் உண்டுதானே.  எதையாவது தெரிந்துகொண்டால் அதை எங்காவது எழுதிவைத்து விடும் பழக்கம் கொண்டவள் ஜகதா. "படித்த பெண் வேறு. அதனால் புருசனுக்கு கடிதம் எழுதுகிறாள்" என்று அவளைச் சொல்லுகிறார்கள். தன் அம்மா வந்ததை, தீபாவளிக்கு அழைத்ததை, புது அம்மாவான மாமியார் பேசுவதை, குடும்ப அங்கத்தினர்களை,  அவளின் ஏக்கத்தை, கண்ணீரை, ஒருநாள் மா...

நிழலின் தனிமை - தேவிபாரதி

Image
மனித மனத்தின் ததும்பல்களையும் சீற்றத்தையும் பகையையும் வேட்கையையும் தந்திரத்தையும் அவமானத்தையும் தோல்வியையும் தீவிரத்துடன் வெளிப்படுத்தும் படைப்பு இது. - சுகுமாரன்  -- ஏதோ ஒரு நேரத்தில் சில வஞ்சினங்களை உரைத்திருப்போம் நாம். அது பணப்பிரச்சினை, காதல் தோல்வி எனப் பல காரணங்களால் வந்திருக்கலாம். காலங்கள் போகப்போக அவற்றை நாம் மறந்திருப்போம். சில மனிதர்கள் எப்பொழுதும் அதை மறப்பதில்லை. இறக்கும் வரையிலும் அந்த வஞ்சினத்தை நிறைவேற்ற முடியாமல் உள்ளம் தகிக்கும் கையாலாகாத மனிதர்கள் அதிகம். நினைத்துப் பார்த்தால் எல்லாவற்றுக்கும் விடையாய் இருப்பது மரணம் மட்டுமே.  மின்மயானத்தில் ஒலிக்கப்படும் பாடலில் இந்த வரிகள் உள்ளது. மரணத்தினால் சில கோபங்கள் தீரும். மரணத்தினால் சில சாபங்கள் தீரும்.  -- நாவலின் கதாநாயகன் அரசுப்பள்ளியில் பணியாளர். ஒரு ஊருக்கு மாற்றலாகப் போகும்போது கருணாகரன் எனும் மனிதரைச் சந்திக்க நேர்கிறது. பல வருடங்களாக கருணாகரனைப் பழி தீர்க்க காத்திருக்கிறான்.  கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வரும் கருணாகரன், பணப்பிரச்சினையில் நாயகனின் தமக்கை சாரதாவை பள்ளி...