Posts

கர்ண மகாராஜன் சண்டை

Image
விஜய் டிவியில், மீண்டும் மகாபாரதம் தொடர் வெளியாகப் போகிறது என்று ஓடிக் கொண்டிருந்தது. அக்கா மகனும், நானும் வெண்முரசு பற்றி பேசத் தொடங்கினோம். அப்பா எங்களை ஆழ்ந்து கவனித்தார்.  "அது என்ன கதை புக்கா?" எனக் கேட்டார். நான் பதில் சொல்வதற்குள், "இருங்க அப்புச்சி.. புக்க எடுத்துட்டு வர்றேன்". என்று அறைக்குச் சென்று, நான் வாங்கி இருந்த முதற்கனல், மழைப்பாடல் புத்தகங்களை தூக்கிக் கொண்டு வந்தான் மருமகன்.  புத்தகங்களைப் பார்த்ததுமே, "என்ன இவ்வளவு பெரிசா இருக்கு" என்றவாறே, புரட்ட ஆரம்பித்தார். என்ன விலை என்றவரிடம், விலையைச் சொன்னதும், இவ்வளவு விலையா என ஆச்சரியப்பட்டார்.  "இல்லப் பா.. ஓவியம் எல்லாம் நல்ல பேப்பர்.. நல்ல அட்டை.. அதுனாலதான்." என்று சமாளித்தேன்.  அப்பொழுதே  புத்தகத்தைப் புரட்ட ஆரம்பித்தார். கொஞ்ச நேரத்தில், "புளியம்பட்டி புத்தக கடைல கர்ண மகராஜன் சண்டை-னு ஒரு புக் கேட்டேன். இல்லேன்னு சொல்லிட்டான். அது கெடைக்குமான்னு பாரு" என்றார். "அது என்ன புக். எப்போ படிச்சீங்க" "நான் சின்ன வயசுல படிச்சது".அப்பா...

தாத்தா வீடு

தக்க ஊதியம் கிட்டாததற்க்கும் எப்பொழுதும் பற்றாக்குறையில் ஓடிய தின வாழ்வுக்கும் காரணம் இது பாட்டன் வீடாம்... பாட்டன் வீட்டில் மகன் இருக்கலாம் பேரனுக்கு ஆகாதெனச் சொல்லிக் கொண்டிருக்கிறான் கட்டம் போட்டு குறி சொல்லியவன். மங்கிப் போன புகைப்படத்தில் கையில் கைத்தடியுடன் அந்தக் கட்டங்களை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார் தாத்தா..

புகைப்படங்கள்: Horti Intex - 2014

Image
கோவை கொடிசியாவில் கடந்த 7,8 மற்றும் 9 தேதிகளில் International Horti Intex - 2014 நடைபெற்றது. பூக்கள், காய்கறிகள் மற்றும் தானிய வகைகளில் பறவைகள், விலங்குகள் என அழகுபடுத்தியிருந்தார்கள்.   அங்கு எடுத்த புகைப்படங்கள்..

மாடித் தோட்டம் (Terrace Garden)

Image
ஜூலை மாதம் ஆரம்பித்த மாடித் தோட்டம் அறுவடை முடியப் போகிறது. கீரைகள் குறை இல்லாமல் வளர்ந்தன. கொத்தவரை, வெண்டை போன்றவை பூச்சி தாக்குதலால் சரியாக வரவில்லை. இனி அடுத்த விதைப்பை ஆரம்பிக்க வேண்டும். முதல் முறை என்பதால், நிறைய காய்க்கவில்லை. போலவே ரசாயனங்கள் பயன்படுத்தவில்லை. சாணி உரம், ஆட்டுப் புழுக்கை உரம், கொஞ்சம் செம்மண் என்று கலந்துதான் வைத்தேன். அடுத்த முறை, மண்புழு உரம் பயன்படுத்திப் பார்க்க வேண்டும்.  தக்காளி  கத்தரி  மிளகாய்  பீன்ஸ்  பீட்ரூட் (ஒன்றே ஒன்று !) கீரைகள்  அறுவடை செய்த பின்னர்: நண்பர் சிவா அவர்களின்  http://thooddam.blogspot.in/ எனும் பதிவில் மாடித் தோட்டம் பற்றிய  பதிவுகள் இருக்கின்றன. மாடித் தோட்டம் அமைக்க உங்களுக்கு ஆர்வமிருப்பின், இவரின் பதிவுகள்  மிகுந்த பயனளிக்க கூடியவை. 

மாடித் தோட்டம் - கீரைகள் (Terrace Garden)

Image
வீட்டுத் தோட்டத்தில் வாழை, தென்னை போன்ற பயிர்கள் இருந்தமையால், போதிய வெயிலும் இடமும் இன்றி கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை வளர்க்க முடியாமல் இருந்தோம். இருந்தாலும், அவரை , பீர்க்கை போன்ற கொடி வகைகளை மொட்டை மாடிக்கு இழுத்து பந்தல் போட்டதில், நன்றாகவே விளைந்தது. இந்த வருடம் அடுத்த முயற்சியாக, மொட்டை மாடித் தோட்டத்தை அமைத்துள்ளோம்.   தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத் துறை மூலமாக, சென்னை மற்றும் கோவைப் பகுதிகளில் மானியத்துடன் கூடிய 'நீங்களே செய்து பாருங்கள் (Do It Yourself kit)' கொடுத்திருந்தார்கள். விலை ரூபாய் 1325. தேர்தல் காரணமாக, சில பொருட்கள் தாமதமாக வந்து சேர்ந்தன. ஆனாலும், மாடித் தோட்டம் போடத் தகுந்த காலமான ஜூலையில் எல்லாப் பொருட்களையும் கொடுத்து விட்டார்கள். தென்னை நார்க் கழிவுடன், தொழு உரம் சேர்த்து ஒரு வாரம் கழித்து விதைகளை நடத் தொடங்கலாம். அசொஸ்பைரில்லம், சூடோமோனோஸ் போன்ற உயிரி உரங்களையும், நார்க் கழிவுடன்  சேர்க்க வேண்டும். தக்காளி, கத்திரி மற்றும் மிளகாய் விதைகளை குழித்தட்டில் விதைத்து வளர்ந்து வருகின்றன. வெண்டை, முள்ளங்கி போன்ற விதைகளை அப்ப...