Posts

வீட்டுத் தோட்டத்தில்: வெற்றிலை, பப்பாளி, கேரட்

Image
வெற்றிலை:     பப்பாளி: கேரட்:   மஞ்சள் மற்றும் புதினா: கற்பூரவள்ளி மூலிகை:  

வீட்டுத் தோட்டத்தில்: சம்பங்கி, பலா மற்றும் செம்பருத்தி

Image
போன வருடம் கொடிசியாவில் நடந்த விவசாயக் கண்காட்சியில் வாங்கிய சம்பங்கி கிழங்கு அழகாகப் பூத்திருக்கிறது இப்பொழுது. கடந்த வருடங்களை விடவும்  இந்த வருடம் பலா மரத்தில் பிஞ்சுகள் அதிகம் விட்டது. எப்படியும் ஒன்றிரண்டாவது காய் நிற்கும் என நாங்கள் நினைத்திருக்க, எல்லாப் பிஞ்சுகளும் உதிர்ந்து விட்டது. அடுத்த வருடம் பலா பிடிக்குமா எனத் தெரியவில்லை.    சிவப்பு செம்பருத்தியை, வைத்த இரண்டு மாதங்களிலேயே பூச்சி பிடித்து வாடி விட்டது. அடித் தண்டுக்கு மேல் முழுவதும் வெட்டி விட, இப்பொழுது தினமும் பூக்கள் பூக்கிறது.  

வீட்டுத் தோட்டத்தில்: செவ்வாழை

Image
பள்ளியில் 'செவ்வாழை' கதை பாடமாக இருந்தது. ஓர் ஏழையின் வீட்டில் வளரும் செவ்வாழை குலை தள்ளி இருக்கும். அவனின் குழந்தைகள், மனைவி என அந்தக் குலை பெரிதாகி எப்பொழுது பழம் பழுக்கும், நாம் தின்னலாம் எனக் காத்திருப்பார்கள். ஆனால், அந்த ஊரில் இருக்கும் பெரிய மனிதர், தன் வீட்டு விசேசத்துக்கு, அந்த வாழையை வெட்டிக் கொடுக்கச் சொல்ல, வேறு வழியில்லாமல் வெட்டித் தந்து விடுகிறான் அந்த ஏழை. குழந்தைகள் ஏக்கத்துடன் பார்த்து அழுவார்கள். அந்தக் கதையை நீங்களும் படித்திருக்கலாம். சரி, இங்கே எங்கள் வீட்டில் வளர்ந்த செவ்வாழை பற்றி. ஊரில் இருந்து கொண்டு வைத்த ஒரே வாரத்தில் தேன் வாழை துளிர் விட்டது. செவ்வாழைக் கன்றும் அதனுடனே வைத்ததுதான். வளரலாமா, வேண்டாமா என்ற நீண்ட யோசனைக்குப் பின்னர் கொஞ்சமாக வெளியே எட்டிப் பார்த்தது. தேன் வாழை பழம் பழுத்து குலை வெட்டிய பின்னர்தான், செவ்வாழை குலை தள்ளியது. குலை தள்ளி நான்கு மாதங்கள் ஆகியும் பழுக்கவில்லை. விவசாயியான நண்பனின் அப்பாவிடம் கேட்டபொழுது, காய் ரோஸ் நிறமாக மாறும்பொழுது வெட்ட சொன்னார். தினமும் நிறம் மாறும் மாறும் என குலையை பார்...

மௌனி - எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?

மௌனியின் படைப்புகள் - புத்தகம் வாங்கி ஏறக்குறைய இரண்டு வருடங்கள் இருக்கும். இதற்கிடையில் இரண்டு மூன்று முறை படித்திருக்கிறேன். நேரடியான கதை சொல்லலில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. குறைந்த கதைகளே எழுதியிருந்த போதிலும், புதுமைப்பித்தன் இவருடைய எழுத்துக்களைப் பாராட்டி  இருக்கிறார். இரண்டு மூன்று முறை படித்த போதும், சில பத்திகள் ஒன்றும் புரியாமல் திரும்ப திரும்ப படித்திருக்கிறேன். ஆனால், மற்ற நாவல்களைப் போல மௌனியின் எழுத்துக்களை அவ்வளவு எளிதாக கடந்து போக முடிவதில்லை. நினைவில் ஆழ்ந்து அப்படியே சில நாட்கள் தூங்கி இருக்கிறேன். சில வரிகளை அவ்வளவு எளிதாக கடந்து போக முடியவில்லை. திரும்ப எத்தனை முறை படித்தாலும், புதியது போலவே இருக்கிறது. எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்? குடும்பம் ஒரு இயந்திரம். பழுதுபட்டுப் போன ஒரு பாகத்தினால் அது நின்று போவதில்லை. அதற்கு பிரதி பாகம் தானாகவே உருவாகி விடும். வாழ்க்கை ஒரு உன்னத எழுச்சி. போன்ற வாக்கியங்கள் கவித்துவம் மிக்கவை. அவரின் எழுத்துக்களில் சொல் புதிது, பொருள் புதிது. மீண்டும் படிக்க வேண்டும். அவரின் எழுத்துக்களை முழுதும் ...

தேர்தலோ.. தேர்தல் !

மக்களால் மக்களுக்கு பாடப் புத்தகத்தில் இப்படித்தான் இருந்தது மக்களால் மக்களுக்கு மக்களாட்சி.. ஒரு நாள் சாரை சாரையாக வந்தார்கள் வெள்ளை ஆடையில் நல்லவர்கள் ஆனார்கள் உங்கள் வீட்டுப் பிள்ளை உங்கள் காலடியில் கிடப்பேன் என்றெல்லாம் சொல்லி ஓட்டுக் கேட்டார்கள் வழக்கம் போல் ஜெயிக்கவும் தோற்கவும் ஆனார்கள் வெற்றி பெற்றவர்கள் அவரவர் முடிந்ததை அவரவருக்குத் தேவையான வரை கக்கத்தில் கட்டிக் கொண்டார்கள்.. நேரமிருக்கும்போது மக்களைச் சந்தித்து குறை கேட்பதோடு நிறுத்திக் கொண்டார்கள் அல்லது சந்திப்பையே தவிர்த்தார்கள் தேர்தல் நாள் அறிவித்தவுடன் திரும்பவும் அந்த நாள் வந்தது இந்த தடவை குத்தகை யார் கைக்கு போகுமென்பது எண்ணிக்கை முடிந்த பிறகு தெரியும்... சொல்ல மறந்து விட்டேன் பாடப் புத்தகத்தில் இப்படித்தான் இருக்கிறது மக்களால் மக்களுக்கு மக்களாட்சி.... தலைவர்கள் வருகிறார்கள்.. தேர்தலுக்கும் இடைத் தேர்தலுக்கும் வெள்ளம் வந்தாலும் தீ வைத்துக் கொண்டாலும் கட்சியினர் இல்லத் திருமணத்திற்கும் உதவிகள் வழங்கவும் கடைகள் திறப்பிற்கும் எங்கள் தலைவர்கள் அன்று ஒரு நாள் மட்டும் பார்க்க வருகிறார்கள் நோயுற்றிருக்கும் நோயாளிய...

தி ஷாசாங் ரெடெம்ப்சன் (The Shawshank Redemption)

Image
சிறைச்சாலைகளில் ஒவ்வொரு நாளும் கைதிகளின் பரேடு நடப்பது வழக்கம். வழக்கம் போல ஒருநாள், அந்த சிறையின் ஒரு வார்டில் கைதிகளின் பரேடு நடக்கிறது. எல்லா அறைகளிலும் இருந்து, கைதிகள் வெளியே வந்து நிற்க.. ஓர் அறை மற்றும் திறக்கவே இல்லை. காவலர்கள் கத்திக் கூப்பிடுகிறார்கள். அப்பொழுதும் எந்த பதிலுமில்லை. காவலர்கள், அந்த அறைக்குச் சென்று பார்க்கிறார்கள். அங்கே கைதியைக் காணவில்லை. இரவு அந்த அறைக்குச் சென்ற கைதி, எப்படித் தப்பியிருப்பான் என்பது புரியாமல் திகைக்கிறார்கள். பக்கத்து அறை நண்பனைக் கேட்கிறார்கள். அவனுக்கும் தெரியாமல், திகைத்து நிற்கிறான். ****** ஆண்டி ஒரு வங்கி அதிகாரி. அவனின் மனைவி கொலை வழக்கில், எதிர்பாராவிதமாக ஆயுள் தண்டனை பெறுகிறான் ஆண்டி. சிறைக்கு வரும் அவன், ரெட் என்ற நண்பனின் உதவியால், ஒரு சுத்தியையும், ஒரு நடிகையின் பெரிய புகைப்படத்தையும் வாங்கி தன்னுடன், அறையில் வைத்துக் கொள்கிறான். அவ்வப்பொழுது அந்த சுத்தியைக் கொண்டு, கற்களில் சின்ன சின்னப் பொருட்களைச்  செய்கிறான்.  அந்த சிறையின் வார்டன் பைபிள் மேல் ஆழ்ந்த பற்று கொண்டவர். ஆண்டியைச் ச...

யேசு கதைகள் - பால் சக்காரியா (தமிழில்: கே.வி. ஜெயஸ்ரீ)

Image
பால் சக்கரியா அவர்களின் 'யேசு கதைகள்' படித்தபொழுது அம்மாவைப் பற்றிய நினைவுகளும் வந்து போனது. பிறப்பால் இந்துவாக இருந்தாலும், ஒவ்வொரு முறை சர்ச்சையும் சிலுவையையும் காணும் போது, அம்மா கையெடுத்து வணங்குவதை மறந்ததில்லை. எழுதப் படிக்கத் தெரியாத அம்மாவை, இயேசு எப்படி ஈர்த்தார் எனப் புரியவில்லை. நான் பிறந்த சமயம், கொஞ்ச நாள் கிறித்துவ மருத்துவமனையில் தங்கியிருந்த போது பழகியிருக்கலாம். வாடிப்போன முகமும், குருதி வடியும் கைகளும், துயரமும் என அவர் சிலுவையில் தொங்கியிருந்த சிற்பங்களைப் பார்த்து, அட நம்மில் ஒருவர் என அம்மாவை நினைக்க வைத்திருக்கலாம். ஒவ்வொரு முறை பேருந்தில் போகும்பொழுதும், சர்ச்சைக் கடக்கும்போது வணங்கத் தவறவில்லை அம்மா. இந்தக் கதைகளிலும், யேசுவைச் சுற்றி பெண்கள்தான் இருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிடுவது போல, யேசு பெண்களுக்கு நெருக்கமானவராக இருக்கிறார். தங்கள் துயரங்கள், சந்தோசங்கள் என அவரிடம் சொல்ல ஆயிரம் இருக்கின்றன பெண்களுக்கு. ********* யாருக்குத் தெரியும் என்ற கதையில்,ஏரோது மன்னனின் உத்திரவுப்படி, குழந்தை யேசுவை...