Posts

பள்ளம்

காற்றே இல்லை எனச் சொல்லும் இதே மனிதன் தான் வேம்பு போன்ற மரங்களை வெட்டிவிட்டு வீட்டைச் சுற்றிலும் குரோட்டன்ஸ் வைத்தவன்.. ஆற்றில் நீர் இல்லாததை 'பச்..  தண்ணியே இல்லை' எனக்கடந்து போகும் இதே மனிதர்கள்தான் மக்கவியலாத பொருளையும், கழிவு நீரையும் கொட்டுகிறார்கள்.. நீர் இல்லாதபோது, நிறைய மணல் அள்ளலாம் எனச் சிலர் சந்தோசப் படுகிறார்கள்.. ஆற்று நீரை அப்படியே குடிக்காதீர்கள் அதில் கழிவுகள் இருக்கிறது என்று சொல்கிறார்கள்.. உழைத்து மூப்பேறிய மூத்த தலைமுறை விவசாயியின் ஒடுங்கிய வயிறு போலான பள்ளங்களோடு ஆறு அத்தனையையும் கவனித்துக் கொண்டிருக்கிறது..

மனம் எனும் தோணி

வாழ்க்கை - நாம் வாழ்வது. வாழ்வைப் பற்றிப் பேசும்பொழுது பெரும்பான்மையான கவிஞர்கள், படகோடு ஒப்பிடுவார்கள். கணியன் பூங்குன்றனார், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பாடலில், 'நீர்வழிப் படூம் புனை போல்' எனச் சொல்கிறார். 'வாழ்க்கை என்னும் ஓடம்.. வழங்குகின்ற பாடம்..' என்று கே.பி. சுந்தராம்பாள் அவர்கள் பாடிய பாடலையும் கேட்டு இருக்கிறோம். திருநாவுக்கரசர் பாடிய கீழ்க்கண்ட பாடல், பள்ளியில் படிக்கும்பொழுது மனப்பாடச் செய்யுளாக இருந்தது. இது ஒரு பக்திப் பாடலாக இருந்தாலும், சொல்லப்பட்ட உவமைகளும், பொருளும் என்னைக் கவர்ந்தவை. மனமெனும் தோணி பற்றி மதியெனுங் கோலை ஊன்றிச் சினமெனும் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது மதனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா உனையுனு முணர்வை நல்கா யொற்றியூர் உடைய கோவே. பாடல் பொருள் எளிதில் விளங்கக் கூடியதே. "மனம் என்ற தோணியில், மதி எனும் துடுப்பைக் கொண்டு, சினம் என்ற சரக்கை ஏற்றி இந்த வாழ்க்கை எனும் கடலில் ஓடும்போது, ஆசைகள்(பற்றுகள்) எனும் பாறையில் மோதி, நினைவிழக்கும் பொழுது உன்னை நினைக்கும் உணர்வைத் தருவாய்... ஒற்றியூர் ப...

இறங்கள் !!

போன வாரம் திருப்பூர் சென்றிருந்தோம். சிக்னலுக்கு காத்திருந்த பொழுது, டிவைடர் கற்களில் டி.எம்.எஸ். அவர்களுக்கு ஒரு கட்சியின் சார்பாக இரங்கல் சுவரொட்டி ஒட்டி இருந்தார்கள். அதில் கடைசியில் இப்படி ஒரு வாக்கியம் இருந்தது; டி.எம்.எஸ். அவர்களுக்கு​ --------- ------------------------------ ------------- ------  (கட்சியின்) சார்பாக இறங்கள் இதில் உள்ள எழுத்து பிழை ஒரு பக்கம் என்றாலும், நம்மையும் இறக்கச் சொன்ன இந்தச் சுவரொட்டியைப் பார்த்து அழுவதா, சிரிப்பதா எனத் தெரியவில்லை. அழுத்தம் திருத்தமாகத் தமிழை உச்சரித்துப் , பாடிய டி.எம்.எஸ். அவர்களின் ஆவி நிச்சயம் மன்னிக்காது. இரங்கல் - இறங்கள் !! (இரண்டு வார்த்தைகளும் ஒன்று என நம்பி சுவரொட்டி தயாரித்தவர் வாழ்க) நாங்கள் பள்ளியில் படிக்கும் பொழுது, எங்கள் தமிழ் அய்யா அடிக்கடி ஒரு வாக்கியம் சொல்வார்; "மாவட்ட கல்வி அதிகாரி சிற்றுண்டிச் சாலைக்குச் சென்றார்" - மேற்கண்ட வாக்கியத்தில், தெரியாமல் ஒரு கால் சேர்த்தால்; " மாவாட்ட கல்வி அதிகாரி சிற்றுண்டிச் சாலைக்குச் சென்றார்" !! தெரியாமல் எங்காவது இது மாதிரி சே...

விழுதுகள்

Image
விழுதுகள்( http://vizhudugal.org/ ) அமைப்பை, நண்பர்கள் இணைந்து 2008 ஆம் ஆண்டு ஆரம்பித்தோம். கடந்த வருடங்களில் எங்களுக்கு ஊக்கமும், உறுதியும் அளித்து வரும் எங்கள் நண்பர்களுக்கு அன்பு நன்றிகள். எங்கள் விழுதுகள் அமைப்பை பற்றி எனது பதிவுகள்;   விழுதுகள் - நனவாகியதொரு கனவு ஒரு விருது இந்த வருடத்தில் நாங்கள் கீழ்க்கண்ட கிராமங்களில் எங்கள் மாலை நேர வகுப்பை எடுத்து வருகிறோம். 1. மாரம்பாளையம் 2. மாதம்பாளையம் 3. கள்ளிபாளையம் 4. ஜெ. ஜெ. நகர் 5. நேரு நகர் 6. எம். கவுண்டம்பாளையம் 7. பெரிய கொமாரபாளையம் இந்த ஏழு மையங்களும், பு. புளியம்பட்டியை ஒட்டியுள்ள கிராமப்புற பகுதிகள். இன்னும் இரண்டு மூன்று ஊர்களில் மையங்களை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம். இறையருளும், நண்பர்களின் ஆதரவும் எங்களை வழி நடத்திச் செல்லும். சில புகைப்படங்கள்:    (புத்தக விழாவில்.. )    (மாரம்பாளையம் மாணவர்களுடன்...)     (நீலிபாளையம் மாணவர்களுடன்.. )    (ஒருநாள் சுற்றுலாவில்.. பவானிச...

விஷ்ணுபுரம் - ஜெயமோகன் (நாவல்)

Image
விஷ்ணுபுரம் நாவல் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தேன். விஷ்ணுபுரம் பற்றி நான் அறிந்த வரையில் அல்லது  படித்து புரிந்த வகையில் இந்த கடிதத்தை அவருக்கு எழுதி இருந்தேன். அவரும் பதில் எழுதி இருந்தார். நான் அவருக்கு எழுதியதும், அவருடைய பதிலையும் இங்கே கொடுத்துள்ளேன்.  ************************** அன்பின் ஜெயமோகன், நீண்ட நாட்களாக படிக்க வேண்டும் என்ற ஆவல் கொண்ட புத்தகம் விஷ்ணுபுரம். பல வருடங்களாக இணையத்தில் உங்களைத் தொடர்ந்து படித்து வந்த போதிலும், விஷ்ணுபுரம் படிக்கவே இல்லை.விஷ்ணுபுரம் மட்டும் அல்ல, இன்னும் கொற்றவை, பின் தொடரும் நிழலின் குரல், காடு.... என படிக்க வேண்டும். போன மாதம் விஷ்ணுபுரம் வாங்கி, இப்பொழுது படித்து முடித்து விட்டேன். இன்னும் பிரமிப்பு போகவில்லை, ஒரு கனவு உலகத்துக்குள் சென்று வந்தது போல இருக்கிறது. அவ்வபொழுது வரும் கவிதையான வரிகள் படிக்கும் பொழுது நினைவில் இருக்கிறது. அடுத்த அத்தியாயம் போகும்பொழுது அது மறந்து விடுகிறது. திரும்ப திரும்ப படிக்க வேண்டும், நினைவில் நிறுத்த வேண்டும். "பூரணத்திலிருந...

மானசரோவர் - அசோகமித்திரன் (நாவல்)

Image
சினிமா உலகம் என்பது அலங்காரங்களால் ஆனது. நாம் நினைப்பது போல் வெளிப் பார்வைக்கு அது சந்தோசமான உலகம் போல தோன்றினாலும், அது அப்படியில்லை. அசோகமித்திரன் அவர்களின் இந்த நாவல் ஒரு நடிகனுக்கும், சினிமாத் துறையில் இருக்கும் இன்னொருவருக்கும் இடையில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றிய நாவல். வட நாட்டு நடிகன் சத்யன்குமார். சத்யனுக்கு அவன் குடும்பத்தினர் யாரும் இல்லை. தமிழ்நாட்டில் சில படங்களுக்கு நடிக்க வரும்பொழுது, இங்கே வேலை செய்யும் கோபாலுடன் பழக்கம் ஏற்படுகிறது. அது நட்பாகத் தொடர்கிறது. சத்யன் குமார் சென்னை வந்தால், கண்டிப்பாக அங்கே கோபால் இருக்க வேண்டும். கோபாலுக்கு இலக்கியத்தில் விருப்பம் உண்டு என்பதால், அது சத்யனுக்கு பிடித்துப் போகிறது. இருவரும் சந்திக்க நேர்ந்தால் பேசிக் கொண்டே இருப்பார்கள். சத்யனுக்கு, கோபாலைப் பிடிக்கும் என்பதால் தயாரிப்பாளர்கள் கோபால் என்ன சொன்னாலும் கேட்பார்கள். கோபாலுக்கு மனைவி, பையன் என குடும்பம் உண்டு. ஒரு பெண் பிள்ளையை கல்யாணம் செய்து, அனுப்பி விட்டார். மனைவி ஜம்பகம். அவளுக்கு கோபால் சினிமாத் துறையில் வேலை ச...

இரை விழுங்கும் பல்லிகள்

அதிகாலையில் அடுத்த அறைக்குச் செல்ல மின் விளக்கு பொத்தானை அழுத்தினேன். அறையில் ஏதோ ஒரு பக்கம் பதுங்கி இருந்த கரப்பான் பூச்சி ஒன்று காலுக்கடியில் ஓடியது. பெரியதும் இல்லை, ரொம்ப சின்ன பூச்சியும் இல்லை. என் காலைக் கடந்து அது மூலைக்கு ஓடியது. அங்கே ஒரு பல்லி இருப்பது அதுக்கு தெரியவில்லை போலும். அந்தப் பல்லியும் சின்னதுதான். பதுங்கி இருந்த பல்லி, அந்த கரப்பான் பூச்சியின் தலையைப் பிடித்துக் கொண்டது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கத் தொடங்கியது. இரண்டொரு நிமிடத்தில், மொத்தமும் பல்லியின் வயிற்றுக்குள் சென்று விட்டது. பல்லி வீங்கிய வயிற்றுடன் சுவர் மேலே ஏறி விட்டது.  இந்தப் பல்லி என்று இல்லை. சில வருடங்களுக்கு முன், ஒரு பெரிய மலைப்பாம்பு, ஒரு மானை விழுங்குவதைப் பார்க்க நேர்ந்தது. அப்படியே இறுக்கி பிடித்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே போனது மான். பாம்பு இறுக்கிப் பிடிக்கும் வேகத்தில், மானின் எலும்புகள் உடைந்து எளிதாக உள்ளே போய் விடும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நம்மைப் போல தொலைக்காட்சி பார்த்துக்கொண்டோ, ஒரு நாளைக்கு மூன்று வேளை என்றோ அவைகளுக்கு வாய்க...