Friday, December 17, 2010

தி சர்க்கஸ் (The Circus)

இது ஒரு மீள் பதிவு !

இப்பொழுது உள்ளது போல டிவி சானல்கள் இல்லாத காலத்தில் சர்க்கஸ் என்பது எல்லோருக்கும் வியப்பை அளித்தது. யானை, சிங்கம், ஒட்டகம் என விலங்குகளை பார்க்கவும் ஒரு வாய்ப்பாக இருக்கும். வில்லாக உடம்பை வளைத்து சர்க்கஸ் காட்டும் அந்த மக்கள் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள்?.


நாடோடிகளாக திரிந்த அவர்கள், அத்தனை விலங்குளை எப்படி சமாளிக்கிறார்கள், அவர்களுடைய குழந்தைகள் எங்கே படிப்பார்கள், சொந்தமாக ஒரு இடம் கூட அவர்களுக்கு இல்லையா என்ற கேள்விகளுக்கு விடையே இல்லையோ?. ஒரே ஊரில் வாசம் செய்யும் நமக்கு அவர்கள் விசித்திரம் நிரம்பியவர்களாக தெரிகிறார்கள்.



சார்லி சாப்ளினின் "தி சர்க்கஸ்" படம் பார்க்கும் பொழுது, நம்மை அறியாமலே பல முறை சிரிக்கின்றோம். ஒருவன் கோமாளியாய் தன்னை வருத்தி கொண்டு நடித்தாலும் அவனை பார்த்து சந்தோசம் கொள்ளும் உலகம் இது. உங்களால் ஒருவரை சிரிக்க வைக்க முடிந்தால், அதுவே உங்களின் திறமை. மற்றவரை சிரிக்க வைப்பது என்பது எளிதான செயல் அல்ல.


படத்தின் துவக்கத்தில் இருந்து, முடியும் வரை சாப்ளினே நம்மை குத்தகைக்கு எடுத்து கொள்ளுகிறார். வசனங்கள் இல்லாமல் அவரின் நடிப்புக்கே உலகம் மயங்கி இருக்கும். என்னமாய் நடித்து இருக்கிறார். ஒரு சர்க்கஸ் ஆளை போலவே படத்தில் வருகிறார். அனைத்து காட்சிகளிலும் அவரின் உழைப்பு தெரிகிறது. அதுவும் குரங்கு மூக்கை கடிக்க, அதன் வால் வாயில் நுழைய நடிக்கும் பொழுது அந்த மகா நடிகனின் நடிப்பு நம்முள் ஆச்சயர்யத்தை உருவாக்குகிறது.


எதிர் பாராமல் சர்க்கஸ் கம்பனியில் வேலை கிடைத்து, அங்கே ஒரு பெண்ணை பார்த்து காதல் கொள்ளுகிறார். அதற்குள் அவள் இன்னொருவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள். புதிதாக வந்தவன் கயிற்றில் மேலே நடக்கும் பொழுது, எல்லாரும் பயந்திருக்க சாப்ளின் மட்டும் மனம் நிலை கொள்ளாமல் தவிக்கிறார், ஏன் எனில் அவள் அவனைத்தான் காதலிக்கிறாள். இறுதியில் அவனும் சர்க்கஸை விட்டு வெளியேற, சாப்ளினும் வேறு காரணங்களுக்காக வெளியேற்ற படுகிறார்.


சாப்ளினை தேடி வரும் நாயகி, உன்னை விட்டு போக மாட்டேன் என்று அழ, அவளை தேற்றி அவளின் காதலனிடம் சேர்த்து, கல்யாணம் செய்து வைக்கிறார். சர்க்கஸ் கம்பனி கிளம்ப தயாராக இருக்கும் பொழுது, புதுமண தம்பதிகளை அவர்களுடன் அனுப்பி வைக்கிறார் சாப்ளின்.


சர்க்கஸ் கம்பனியின் எல்லா வண்டிகளும் கெளம்பி போன பின்னர், தனி ஒரு ஆளாய் அங்க நிற்கிறார் சார்லி. புழுதி பறக்க, சூரியன் மறைய, கூடாரம் அடிக்க போட்ட ஒரு வட்டத்தில் நின்று கொண்டிருக்கிறார். சிறிது நேரம் அமர்கிறார். மெதுவாக திரும்பி பார்த்து விட்டு, தனது வழக்கமான நடையில் அந்த வட்டத்தை விட்டு வெளியேறுகிறார் சாப்ளின்.

ஒரு வட்டத்துக்குள் தங்கி இருக்கும் நாம் எப்பொழுது அதை விட்டு விடுதலை பெறுவோம் என்பது போல அவரின் நடிப்பு இருக்கிறது. சிரிப்பதற்கு மட்டும் பார்க்க வேண்டிய படம் அல்ல இது, சக உயிரின் மேல் எந்த அளவுக்கு நாம் அன்பு செலுத்த வேண்டும் என்பதை போதிக்கும் படம்.







20 comments:

  1. படிக்கும் போது அபூர்வசகோதரர்கள் கமல் நினைவு வருகிறது இல்லையா இளங்கோ?...அழகாக எழுதியுள்ளீர்கள்...

    ReplyDelete
  2. மிக அருமையான படைப்பு .
    மறக்கமுடியாத மனிதன் சார்லி சாப்ளின் .
    மிக நல்ல பகிர்வு .
    பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி .

    ReplyDelete
  3. சாப்ளின் படங்களுக்கு தலைப்பே தேவையில்லை.. ஒருமுறை எங்கள் ஊரில் சாப்ளின் திருவிழா என்று ஒன்று நடத்தினார்கள். தினமும் காலை ஒரு காட்சி சாப்ளின் படங்கள்.. நல்ல பகிர்வு இளங்கோ ;-)

    ReplyDelete
  4. சார்லி சாப்ளின் என்ற உன்னத மனிதனை பற்றிய உன்னதமான படைப்பு!!

    சூப்பர்

    ReplyDelete
  5. I love his movies.... He was a legend!

    ReplyDelete
  6. ரொம்ப நல்ல படம்ங்க இது.. நல்லாருக்கு பதிவு..

    ReplyDelete
  7. எனக்கு மிகவும் பிடித்த படம் இது.. பகிர்விற்கு நன்றி நண்பரே..

    ReplyDelete
  8. நான் இந்தப் படத்தை பார்த்திருக்கிறேன் . இதுவரை நான் இந்த அளவிற்கு சிரித்ததே இல்லை . அப்படியொரு சிரிப்பை சல்லி தெளித்திருப்பார் , பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  9. //ஷஹி said...

    படிக்கும் போது அபூர்வசகோதரர்கள் கமல் நினைவு வருகிறது இல்லையா இளங்கோ?...அழகாக எழுதியுள்ளீர்கள்..//

    ஆமாங்க ஷஹி.
    நன்றிங்க

    ReplyDelete
  10. //நண்டு @நொரண்டு -ஈரோடு said...

    மிக அருமையான படைப்பு .
    மறக்கமுடியாத மனிதன் சார்லி சாப்ளின் .
    மிக நல்ல பகிர்வு .
    பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி .
    //

    நன்றிங்க.

    ReplyDelete
  11. //RVS said...

    சாப்ளின் படங்களுக்கு தலைப்பே தேவையில்லை.. ஒருமுறை எங்கள் ஊரில் சாப்ளின் திருவிழா என்று ஒன்று நடத்தினார்கள். தினமும் காலை ஒரு காட்சி சாப்ளின் படங்கள்.. நல்ல பகிர்வு இளங்கோ ;-)
    //

    மீண்டும் விழா நடந்தால் சொல்லுங்கள், வருகிறேன். :)
    நன்றிங்க RVS அண்ணா.

    ReplyDelete
  12. //ஆமினா said...

    சார்லி சாப்ளின் என்ற உன்னத மனிதனை பற்றிய உன்னதமான படைப்பு!!

    சூப்பர்
    //

    நன்றிங்க ஆமினா.

    ReplyDelete
  13. //Chitra said...

    I love his movies.... He was a legend!
    //

    காலம் போற்றும் கலைஞன் சாப்ளின்.
    நன்றிங்க அக்கா.

    ReplyDelete
  14. //பதிவுலகில் பாபு said...

    ரொம்ப நல்ல படம்ங்க இது.. நல்லாருக்கு பதிவு..
    //

    நன்றிங்க பாபு.

    ReplyDelete
  15. //வெறும்பய said...

    எனக்கு மிகவும் பிடித்த படம் இது.. பகிர்விற்கு நன்றி நண்பரே..
    //

    நன்றிங்க நண்பரே, அவரின் அனைத்துப் படங்களுமே அருமையானவை.

    ReplyDelete
  16. //!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

    நான் இந்தப் படத்தை பார்த்திருக்கிறேன் . இதுவரை நான் இந்த அளவிற்கு சிரித்ததே இல்லை . அப்படியொரு சிரிப்பை சல்லி தெளித்திருப்பார் , பகிர்வுக்கு நன்றி
    //

    ஆமாங்க, அதிலும் படம் ஆரம்பிச்சு முடியும் வரை சிரிச்சுக்கிட்டே இருக்கலாம்.
    நன்றிங்க நண்பரே.

    ReplyDelete
  17. காட்சி ஒலி இணைப்பு மிகவும் அருமை, ஏனோ சிரிப்பு வரவில்லை. குரங்குகளிடம் சார்லி படும் அவஸ்தையை பார்க்க வருத்தம் தான் மேலிடுகிறது. வயித்துக்காக மனுசன் இங்கே.. எங்கோ கேட்ட பாடல் வரிதான் ஞாபகம் வருகிறது.
    நல்ல பதிவு. விமர்சனம் அருமை..

    ReplyDelete
  18. நீங்கள் செய்த மரம் நடும் நற்பணி பற்றி உங்கள் நண்பர் சாமக்கோடங்கி எழுதியிருந்தார். உங்களுக்கும் கமலக் கண்ணன், மற்றும் குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

    ReplyDelete
  19. //பாரத்... பாரதி... said...

    காட்சி ஒலி இணைப்பு மிகவும் அருமை, ஏனோ சிரிப்பு வரவில்லை. குரங்குகளிடம் சார்லி படும் அவஸ்தையை பார்க்க வருத்தம் தான் மேலிடுகிறது. வயித்துக்காக மனுசன் இங்கே.. எங்கோ கேட்ட பாடல் வரிதான் ஞாபகம் வருகிறது.
    நல்ல பதிவு. விமர்சனம் அருமை..
    //

    ஆமாங்க, ஒரு சாண் வயித்துக்குதான் எவ்வளவு பிரச்சினைகள்.

    உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  20. //பாரத்... பாரதி... said...

    நீங்கள் செய்த மரம் நடும் நற்பணி பற்றி உங்கள் நண்பர் சாமக்கோடங்கி எழுதியிருந்தார். உங்களுக்கும் கமலக் கண்ணன், மற்றும் குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
    //

    விழுதுகள் சார்பாக உங்களுக்கு எங்களின் நன்றிங்க.

    ReplyDelete