Posts

Showing posts with the label வீட்டு தோட்டம்

மாடித் தோட்டத்தில் - டிராகன் ப்ரூட் 

Image
கோவை தமிழ்நாடு விவசாயப் பல்கலையில் பிப்ரவரி 2025 ல் நடைபெற்ற கண்காட்சியில் டிராகன் பழக் (Dragon Fruit) கன்றை வாங்கி வந்தோம். செம்மண், தென்னை நார் கழிவு மற்றும் மண்புழு உரம் ஆகியவற்றை கலந்து தொட்டியில்(Grow bag) வைத்த பின்பு மெதுவாக வளர்ந்தது.  இரண்டு மாதங்களுக்கு முன்பு சிறு மொட்டுகளாக ஐந்து அல்லது ஆறு பூக்கள் தோன்றியது. அவற்றில் ஒன்று மட்டுமே பெரிதாக வளர, மற்றவை சிறு மொட்டாகவே காய்ந்து உதிர்ந்து விட்டது.  அந்த ஒரு பூ மட்டுமே மலர்ந்து பிஞ்சு விட்டது. கிட்டத்தட்ட நான்கு வாரங்கள் கழித்து மேல் தோல் கலர் மாறியவுடன் பறித்து அப்பொழுதே அறுத்தோம். கடைகளில் வாங்கியது போல் கொஞ்சம் சுவை குறைந்த பழமாக அல்லாமல், நல்ல சுவையுடன் இருந்தது. வெள்ளை நிற பழமாக இருந்தாலும் இருக்கலாம் என்று சிலர் சொல்ல, சிவப்பு நிற பழமாகவே இருந்தது மகிழ்ச்சி. இந்த பழத்தை பறிக்கும்போது போன முறை போலவே நிறைய மொட்டுக்கள் விட்டு ஒன்றே ஒன்று மட்டும் பூத்திருக்கிறது. ஏதாவது சத்து இல்லாமையா, என்ன காரணம் என்று தெரியவில்லை.  நிறமிக்க காய்கறிகளான பீட்ரூட், கேரட் போலவே இதிலும்  நிறைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ( Antioxid...

தொட்டியில் அல்லி வளர்ப்பு

Image
எங்காவது வெளியே போகும்போது அல்லி, தாமரை போன்ற மலர்களைப் பார்க்கும்போது நம் வீட்டில் நாமும் வளர்த்துப் பார்க்க வேண்டும் எனத் தோன்றும். நான்கு அல்லது ஐந்து மாதத்திற்கு முன்னால் நர்சரியில் சிறு தொட்டியில் இரண்டு இலைகள் மட்டுமே இருந்த அல்லி செடியை வாங்கி வந்தோம். அங்கே இருந்தவர் பிங்க் நிறம் என்று சொன்னார். வாங்கி வந்த சிறு தொட்டியை அப்படியே இன்னொரு பெரிய அகன்ற தொட்டியில் வைத்தோம். சில கலர் மீன்களை வாங்கி தொட்டியில் விட்டோம். ஓரிரண்டு இலைகள் தழைத்து வந்து அப்படியே சிறிதாக இருந்தன. இலைகள் பெரிதாக வளரவும் இல்லை. Youtube ல் சில அல்லி வளர்ப்பு சம்பந்தமான வீடியோக்கள் பார்த்தால் இலைகள் பெரிதாக இருந்தன. சரி பெரிய தொட்டியில் மாற்றிப் பார்க்கலாம் என்று களிமண்ணும் கொஞ்சம் செம்மண்ணும் கலந்து பெரிய தொட்டியில் அல்லிச் செடியை மாற்றி விட்டேன். மாற்றிய பின்னர் கொஞ்ச நாட்கள் அப்படியே இருந்தது. முன்பிருந்ததை விட இலைகள் நல்ல நிறமாகி வந்தன. சிறு இலைகளாகவே இப்போதும் தழைத்து வந்தது. மீன்கள் இருப்பதால் எந்த விதமான உரங்களும் பயன்படுத்தவில்லை. இரண்டு முறை ...

மாடித் தோட்டம் : செர்ரி தக்காளி (Cherry Tomato)

Image
கோவை விவசாய கண்காட்சியில் செர்ரி தக்காளி விதைகளை வாங்கி இருந்தேன். நாற்றுக்கு விதைகளை விதைத்து கொஞ்சம் பெரிதான பின்னர் பெரிய பைகளுக்கு மாற்றினேன்.  மழையே இல்லாமல் வெயில் வாட்டிய போன மாதங்களில் சில பைகளில் இருந்த செடிகள் வாடி, இதற்கு மேல் என்னால் முடியாது என்பது போல அப்படியே உயிரை விட்டு விட்டது.  மற்ற பைகளில் இருந்த செடிகளும் அவ்வாறே இருக்க, கொஞ்சம் ஆட்டு உரம் போட்டு மண்ணை கிளறி விட்டேன். மழைக்காலம் ஆரம்பித்ததும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இப்போது காய் பிடிக்க ஆரம்பித்து விட்டது. குட்டி குட்டியாக பார்ப்பதற்கே அழகாக உள்ளது இந்த செர்ரி  தக்காளி.  சாதாரண தக்காளிச்  செடி போல இல்லாமல் நன்கு உயரமாக வளர்கிறது. நான் வெறும் குச்சியை ஊன்றி கட்டி வைத்துள்ளேன் இப்பொழுது. பந்தல் மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். 

வீட்டுத் தோட்டத்தில் மிளகு

Image
கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்னர் எங்கள் வீட்டில் வளர்ந்திருந்த வெற்றிலையைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர், 'மிளகு நல்லா வளரும், நான் கொண்டு வர்றேன்' என்றார். அவரின் சொந்த ஊர் வால்பாறை. சொன்னவாறே நான்கு மிளகு குச்சிகளை ஒடித்துக் கொண்டு வந்தார். அந்த நான்கில் மூன்று குச்சிகள் பட்டுப் போக, ஒன்று மட்டும் எப்படியோ தழைந்து, பக்கத்தில் இருந்த பலாவைப் பற்றிக்கொண்டது. நீண்ட நாட்கள் கழித்து, இப்பொழுது பூத்திருக்கிறது. இதில் மிளகு காய்க்குமா, இல்லையா எனத் தெரியவில்லை. பார்ப்போம்.

சமையலறைக் கழிவுகளில் உரம்

Image
மண் தொட்டி ஒன்றை எடுத்துக் கொள்ளவும்.  தினமும் சமையலறையில் மீதமாகும் காய்கறிக் கழிவுகளை அதில் போட்டு வரவும். காலிபிளவர் தண்டு போல பெரிய கழிவுகளாக இருந்தால் பொடியாக நறுக்கி போடவும்.  தொட்டி முக்கால் பாகம் நிறைந்ததும், மாட்டுச் சாணத்தில் கொஞ்சம் நீர் ஊற்றி கரைத்து, தொட்டியில் அந்தக் கழிவுகளின் மேலே ஊற்றி விடவும். வளமான மண் கிடைத்தால் கொஞ்சம் தூவி விடலாம்.  சாணத்தில் இருந்து புழுக்கள் உருவாகி கழிவுகள் மக்க ஆரம்பிக்கும்.  தொட்டியில் நீர் வெளியேற கீழே துளைகள் இருப்பது அவசியம். தொட்டியை அப்படியே வைத்திருக்கவும். வாரம் ஒருமுறை கொஞ்சம் நீர் தெளித்து கிளறி விடவும்.  ஒரு மாதம் போனால் கருப்பு நிறத்தில் மக்கிப் போன உரம் கிடைக்கும்.  ரசாயனம் இல்லாத உரம் தயார். இதன் மேல் கொஞ்சம் மண்ணைப் போட்டு இனி செடிகளை வளர்க்க வேண்டியது தான்.  இங்கே படத்தில் உள்ளது புதினா. மக்கிப் போன உரத்தில் விளைந்தது.  பழைய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால், அடியில் இரண்டு மூன்றுதுளைகள் போட்டுக் கொள்ளவும்.   மூன்று...

தரு இயற்கை அங்காடி(Tharu Organic, Kovai)

Image
தானியங்களை அதன் மேல் உமி மட்டும் நீக்கி விட்டு, அப்படியே உண்ட அந்தக் காலங்களில் எந்த நோயும் அணுகவில்லை. இப்பொழுது வெள்ளை ஆக்குகிறோம் என்ற பெயரில் "பாலிஷ்" செய்து உண்கிறோம். நார்ச் சத்து எல்லாம் நீக்கி விட்டு, வெறும் மாவை மட்டும் உணவாக உண்கிறோம். மெல்ல வேண்டியதில்லை, உடனே ஒரே கொதியில் சோறு வெந்து விடுகிறது, சுவையாக இருக்கிறது எனப் பல காரணங்கள் சொல்லிக் கொள்கிறோம்.  அது போலவே சிறு தானியங்களும். கேழ்வரகு, தினை, கம்பு, வரகு, பனிவரகு, சாமை என எவ்வளவோ தானியங்கள் உண்டு. ஆனால், இவற்றை எல்லாம் நாம் உணவாக எடுத்துக்கொள்வதில்லை. தீராத பின் விளைவுகளைத் தரும் ரெடிமேட் உணவுகளின் பின்னர் ஓடிக் கொண்டிருக்கிறோம்.  பலர் இப்பொழுது சிறு தானியங்களை உணவாக எடுத்துக்கொள்ளத் தொடங்கினாலும், அதையும் பாலிஷ் செய்து விற்கிறார்கள். வரகு, குதிரைவாலி போன்ற தானியங்களை நாம் பாலிஷ் செய்வதால், அதில் உள்ள முதன்மையான சத்துக்களை இழக்க நேர்கிறது.  கடைகளில் சிறு தானியங்களை வாங்கி சமைத்து உண்டிருக்கிறோம் நாங்கள். ஆனால் எல்லாம் பாலிஷ் செய்தவையாக இருந்தது. நாமே ஒரு கடை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ண...

மாடித் தோட்டம் - கீரைகள் (Terrace Garden)

Image
வீட்டுத் தோட்டத்தில் வாழை, தென்னை போன்ற பயிர்கள் இருந்தமையால், போதிய வெயிலும் இடமும் இன்றி கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை வளர்க்க முடியாமல் இருந்தோம். இருந்தாலும், அவரை , பீர்க்கை போன்ற கொடி வகைகளை மொட்டை மாடிக்கு இழுத்து பந்தல் போட்டதில், நன்றாகவே விளைந்தது. இந்த வருடம் அடுத்த முயற்சியாக, மொட்டை மாடித் தோட்டத்தை அமைத்துள்ளோம்.   தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத் துறை மூலமாக, சென்னை மற்றும் கோவைப் பகுதிகளில் மானியத்துடன் கூடிய 'நீங்களே செய்து பாருங்கள் (Do It Yourself kit)' கொடுத்திருந்தார்கள். விலை ரூபாய் 1325. தேர்தல் காரணமாக, சில பொருட்கள் தாமதமாக வந்து சேர்ந்தன. ஆனாலும், மாடித் தோட்டம் போடத் தகுந்த காலமான ஜூலையில் எல்லாப் பொருட்களையும் கொடுத்து விட்டார்கள். தென்னை நார்க் கழிவுடன், தொழு உரம் சேர்த்து ஒரு வாரம் கழித்து விதைகளை நடத் தொடங்கலாம். அசொஸ்பைரில்லம், சூடோமோனோஸ் போன்ற உயிரி உரங்களையும், நார்க் கழிவுடன்  சேர்க்க வேண்டும். தக்காளி, கத்திரி மற்றும் மிளகாய் விதைகளை குழித்தட்டில் விதைத்து வளர்ந்து வருகின்றன. வெண்டை, முள்ளங்கி போன்ற விதைகளை அப்ப...

வீட்டுத் தோட்டத்தில்: வெற்றிலை, பப்பாளி, கேரட்

Image
வெற்றிலை:     பப்பாளி: கேரட்:   மஞ்சள் மற்றும் புதினா: கற்பூரவள்ளி மூலிகை:  

வீட்டுத் தோட்டத்தில்: சம்பங்கி, பலா மற்றும் செம்பருத்தி

Image
போன வருடம் கொடிசியாவில் நடந்த விவசாயக் கண்காட்சியில் வாங்கிய சம்பங்கி கிழங்கு அழகாகப் பூத்திருக்கிறது இப்பொழுது. கடந்த வருடங்களை விடவும்  இந்த வருடம் பலா மரத்தில் பிஞ்சுகள் அதிகம் விட்டது. எப்படியும் ஒன்றிரண்டாவது காய் நிற்கும் என நாங்கள் நினைத்திருக்க, எல்லாப் பிஞ்சுகளும் உதிர்ந்து விட்டது. அடுத்த வருடம் பலா பிடிக்குமா எனத் தெரியவில்லை.    சிவப்பு செம்பருத்தியை, வைத்த இரண்டு மாதங்களிலேயே பூச்சி பிடித்து வாடி விட்டது. அடித் தண்டுக்கு மேல் முழுவதும் வெட்டி விட, இப்பொழுது தினமும் பூக்கள் பூக்கிறது.